Published:Updated:

ஜென் Z - மந்திரக்கை!

ஜென் Z - மந்திரக்கை!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - மந்திரக்கை!

க்ருஷ்

ஜென் Z - மந்திரக்கை!

க்ருஷ்

Published:Updated:
ஜென் Z - மந்திரக்கை!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - மந்திரக்கை!
ஜென் Z - மந்திரக்கை!

தோனி, ஷேவாக் என்றாலுமே நமக்குப் பிடிச்ச ஐ.பி.எல் டீமுக்கு எதிரா ரன் அடிச்சா, ஆங்கிரிபேர்டா மாறிடுவோம். ஆனால், டிவில்லியர்ஸ் மட்டும் விதிவிலக்கு. `இந்திய அணியில், வெளிநாட்டு வீரர் ஒருவர் மட்டும் விளையாட அனுமதிக்கப்படும்' என ஐசிசி அறிவித்தால், இந்தியர்களின் ஏகோபித்த ஓகோபித்த ஆதரவு ஏபி டிவில்லியர்ஸுக்குத்தான் கிடைக்கும்!

`இந்தியர்கள் ஒவ்வொரு முறையும் `ஏபிடி...’ எனக் கூச்சலிடும்போதும் கடவுளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக நினைக்கிறேன்’ என, தன் சுயசரிதைப் புத்தகமான `AB The Autobiography’-ல் குறிப்பிடுகிறார் டிவில்லியர்ஸ். 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல் போட்டிகளில் டிவில்லியர்ஸ் டெல்லி அணிக்கு விளையாடியிருந்தாலும், ஒன்பது கிரகங்களும் உச்சம்பெற்று சிக்ஸர் மழை தருவித்தது எல்லாம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகத்தான். அந்த அணிக்காக ஆடிய ஒரு போட்டியில்தான் இந்திய ரசிகர்கள் அவரை `ஏபிடி’ என அழைத்து உற்சாகப்படுத்தினர்.

ஆதர்ச நாயகன் ஜான்டி ரோட்ஸை முன்னுரை எழுதவைத்திருக்கிறார் டிவில்லியர்ஸ். `நீ ஆட்டத்தின் போக்கை மாற்றிக்கொண்டு வருகிறாய். பல ஆண்டுகளுக்கு முன்னர் என்னை அப்படித்தான் சொன்னார்கள்.

நீ கிரிக்கெட்டை புதிய நிலைகளுக்கு எடுத்துச்செல்வாய்’ என விவியன் ரிச்சர்ட்ஸ் பாராட்டியதைப் பெருமையோடு எழுதியிருக்கிறார் டிவில்லியர்ஸ்.

ஜென் Z - மந்திரக்கை!

புத்தகத்தில் சொல்வதுபோல அவரது சிறுவயது களேபரங்களுக்கும் குறைவில்லை. 11 வயதானபோது, ஆசையாக அவர் அணிந்திருந்த ஜான்டி ரோட்ஸ் கேப்பை, அவரிடம் இருந்து பிடுங்கி எறிந்திருக்கிறார்

டிவில்லியர்ஸின் நண்பர் கெரிட் டெய்ஸ்ட். ஒரு கேட்ச்சை விட்டதற்காக, 22 வயதான கெரிட் கொடுத்த தண்டனை அது. அன்றில் இருந்து டிவில்லியர்ஸ் ஒரு கேட்ச்கூட விட்டது இல்லை.

ஜென் Z - மந்திரக்கை!

பெரும்பாலும் கிரிக்கெட்டர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள், அவர்களின் ஓய்வுக்குப் பிறகுதான் வெளிவரும். அதில் ஏகப்பட்ட சர்ச்சைகளும் உள்ளடங்கியிருக்கும். ஆனால், டிவில்லியர்ஸ் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் ப்ரைம் டைமில் இதை வெளியிட்டிருக்கிறார். அதனால், புத்தகத்தில் சர்ச்சைகள் குறைவுதான்.

ஒரு நாள் போட்டிகளில் 16 பந்துகளில் அரை சதம், 31 பந்துகளில் சதம், 64 பந்துகளில் 150 என அவர் செய்த சாதனைகளை, யார் வேண்டுமானாலும் மாறிவரும் கிரிக்கெட் சூழலில் முறியடிக்கலாம். ஆனால், அந்த மந்திரக்கை அடிக்கும் சில ஷாட்டுகளை எல்லாம், சிலர் அடிக்க சிறிது காலம் ஆகும். இன்று வரையிலும் டிவில்லியர்ஸ் சந்தித்ததிலேயே சமாளிக்கத் திணறிய பௌலர் யார் தெரியுமா? ஃபர்ஸ்ட் க்ளாஸ் போட்டிகளில் ஒரு போட்டி மட்டும் விளையாட வாய்ப்பு கிடைத்த நண்பன் கெரிட் டெய்ஸ்ட்தான்.

ஒரு சுவாரஸ்யமான டி20 மேட்ச் பார்த்த ஃபீல் தருகிறது இந்தப் புத்தகம்!