Published:Updated:

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

Published:Updated:
உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!
உணவு நல்லது வேண்டும்!

காய்கறி அவல் பிரட்டல்

தேவையானவை: சிவப்பு அரிசி அவல், துருவிய கேரட், மஞ்சள் பூசணி துருவல் - தலா 100 கிராம், மாங்காய்த் துருவல், நெல்லிக்காய்த் துருவல் - தலா 50 கிராம், கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, மிளகுத்தூள் - சிறிதளவு, இஞ்சி - சிறு துண்டு.

செய்முறை: சிவப்பு அவலைத் தண்ணீரில் சுத்தப்படுத்தி, சிறிது உப்பு சேர்த்து ஈரத்துடன் 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இதனுடன், துருவிவைத்துள்ள கேரட், மாங்காய், பூசணி, நெல்லிக்காய் துருவல்களைச் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியில் அரைத்த இஞ்சியுடன் கொத்தமல்லி, மிளகு, உப்பு சேர்த்துக் கிளறவும்.

பலன்கள்: கேரட், நெல்லிக்காய், பூசணியில் வைட்டமின் ஏ, சி மற்றும் தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன. தேவையற்றக் கொழுப்பு குறையும். இதை காலை உணவாகவும் மதிய உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

உணவு நல்லது வேண்டும்!

வாழைத்தண்டு சூப்

தேவையானவை: சின்ன வெங்காயம், தக்காளி – தலா 1, வாழைத்தண்டு – 200 கிராம், பூண்டுப் பல் – 2, உப்பு, மிளகுத் தூள் – தேவையான அளவு, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு.

செய்முறை: சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைத்தண்டை தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். வெங்காயம், பூண்டு முதலானவற்றையும் பொடிப் பொடியாக நறுக்கி, வாழைத்தண்டுடன் சேர்க்க வேண்டும். நன்றாக வெந்ததும், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து எல்லாவற்றையும் மசித்து, கொத்தமல்லி, புதினா சேர்த்து இறக்கவும். வாழைத்தண்டை அப்படியே சாப்பிட விரும்பாதவர்கள், மசித்து வடிகட்டியும் அருந்தலாம்.

உணவு நல்லது வேண்டும்!

பலன்கள்: சிறுநீரகக் கற்களை நீக்கும். குடல்புண்களுக்குச் சிறந்த மருந்து. உடல் பருமன் உள்ளவர்கள் தினமும் அருந்திவர, விரைவிலேயே நல்ல பலன் தெரியும். பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்னை மற்றும் வெள்ளைப்படுதலைச் சரிசெய்யும்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயாளிகளுக்கு என்று பிரத்தியேக டயட் இல்லை. உணவின் கலோரி, கிளைசெமிக் இண்டெக்ஸ் தெரிந்து, அளவோடு எடுத்துக்கொண்டாலே போதும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை, கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு கீரை சூப், சௌசௌ, முட்டைக்கோஸ், முள்ளங்கி, முருங்கைக்காய், கத்திரி, காலிஃபிளவர், பாகற்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, நூல்கோல், கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, இஞ்சி, சின்ன வெங்காயம் சாப்பிடலாம். பழங்களில், சாத்துக்குடி, அன்னாசி, கொய்யா, ஆப்பிள், பேரிக்காய், தர்ப்பூசணி சாப்பிடலாம்.

உணவு நல்லது வேண்டும்!