Published:Updated:

“விஜய் சேதுபதினு ஒருத்தர் நடிக்கிறாரா?”

“விஜய் சேதுபதினு ஒருத்தர் நடிக்கிறாரா?”
பிரீமியம் ஸ்டோரி
“விஜய் சேதுபதினு ஒருத்தர் நடிக்கிறாரா?”

நா.சிபிச்சக்கரவர்த்தி, முத்துபகவத்

“விஜய் சேதுபதினு ஒருத்தர் நடிக்கிறாரா?”

நா.சிபிச்சக்கரவர்த்தி, முத்துபகவத்

Published:Updated:
“விஜய் சேதுபதினு ஒருத்தர் நடிக்கிறாரா?”
பிரீமியம் ஸ்டோரி
“விஜய் சேதுபதினு ஒருத்தர் நடிக்கிறாரா?”
“விஜய் சேதுபதினு ஒருத்தர் நடிக்கிறாரா?”

விஷயத்தைச் சொன்னதும், ‘‘ம்ம்ம்... கேள்விகளைக் கேளுங்க. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக...” என ஆசீர்வாதம் செய்து அதிரவைத்தார் ஐ.ஏ.எஸ் அதிகாரி உமா சங்கர்.

“நிறையப் படங்களுக்குப் பாடல்கள் எழுதுற வேலையில் ரொம்ப பிஸி. அதனால், உலக நடப்புகளில் எல்லாம் அதிகமாக் கவனம் செலுத்தலை. ஒரு கேள்விக்காவது பதில் சொல்ற மாதிரி கேளுங்க ப்ளீஸ்...’’ எனத் தயாரானார் பாடலாசிரியர் உமா தேவி.

“யங் நியூஸ் டீம்ல ஹேப்பியா வேலை பார்த்துட்டு இருக்கேன். ஃபுல் அப்டேட்ல இருக்கேன். அநேகமா எல்லா கேள்விகளுக்கும் எனக்கு பதில் தெரியும்னு நினைக்கிறேன்’’ நம்பிக்கையோடு பேசினார் நியூஸ் ரீடர் சரண்யா சுந்தரராஜ்.

“நான் துபாய்ல ஷூட்டிங்ல இருக்கேன். எந்த நியூஸையும் நான் ஃபாலோ பண்றதே இல்லைங்க. வாட்ஸ்அப்ல வந்தா படிப்பேன். அவ்வளவுதான். நீங்க மியூஸிக், டான்ஸ் பற்றிக் கேட்டீங்கன்னா டக்கு டக்குனு சொல்வேன்” என, கேள்விகளை எதிர்பார்த்துக் காத்திருந்தார் நடிகை ஆஷா சரத்.

``சர்ஜிக்கல் அட்டாக் என்றால் என்ன?’’

விடை: ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ பிரிவு நடத்தும் ஒரு சர்ப்ரைஸ் தாக்குதலுக்குப் பெயர்தான் `சர்ஜிக்கல் அட்டாக்’. ஒரு பிசுருகூட இல்லாமல் துல்லியமாக அழிக்கப்படும்.

உமா சங்கர்: “எதிரி நாட்டுக்கு உள்ளே சென்று, குறிப்பிட்ட இடத்தை மட்டும் தாக்குவது. ஒசாமா பின்லேடனை அமெரிக்கா இப்படித்தான் வீழ்த்தினார்கள்.’’

உமா தேவி: “என்னங்க, அட்டாக்னு எல்லாம் சொல்றீங்க. இது ஹார்ட் அட்டாக் மாதிரி ஏதாவது மெடிக்கல் டேர்ம்ஸா? தெரியலையே! ஆமா... எதுக்கு இப்ப திடீர்னு அட்டாக் பற்றி எல்லாம் கேட்டு என்னை அட்டாக் பண்றீங்க?”

சரண்யா சுந்தரராஜ்: “அமெரிக்கா, ஈராக் மேல் இதே சர்ஜிக்கல் அட்டாக் முறையில்தான் போர் தொடுத்தாங்க. எல்லா பக்கங்கள்லயும் அட்டாக் பண்ணாம, குறிப்பிட்ட இடத்தைக் குறிவெச்சுத் தாக்குவாங்க. இப்ப இந்தியா, பாகிஸ்தான் மேல் இதே முறையில்தான் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றாங்க.”

ஆஷா சரத்: “பாகிஸ்தான் போய், இந்திய ராணுவம் அட்டாக் பண்றதுதான் சர்ஜிக்கல் அட்டாக். இந்தியா ரொம்பப் பெருமைப்படக்கூடிய விஷயம்தான். ஆனாலும் நம்ம ராணுவ வீரர்களின் உயிரிழப்புதான் ரொம்ப சோகமா இருக்கு.”

“விஜய் சேதுபதினு ஒருத்தர் நடிக்கிறாரா?”

``AAA - என்றால் என்ன?’’

விடை: `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ - சிம்பு நடிக்கும் படத்தின் தலைப்பு.

உமா சங்கர்: “இது பிசினஸ் சம்பந்தப்பட்ட வார்த்தை. அக்கவுன்ட்ல எல்லாம் ‘ட்ரிபிள் ஏ’, ‘டபுள் ஏ’னு சொல்வாங்க. சரியா? என்னது படத்தோட பேரா? சிம்புனு ஒருத்தர் நடிக்கிறாரா? அது எல்லாம் தெரியாதுப்பா எனக்கு. ஏதாவது பிசினஸ் சம்பந்தமான படமா இருக்கும்.”

உமா தேவி: “சினிமா படம்தானே... கண்டுபிடிச்சுட்டேன். `அச்சம் என்பது மடமையடா’ சரியா?’’ சரியான விடையைச் சொன்னதும் ஆச்சர்யத்தில் புருவங்களை உயர்த்துகிறார் உமாதேவி.

சரண்யா சுந்தரராஜ்: “பீப் சாங்குக்கு அப்புறம் ட்ரிபிள் ஏ சப்ஜெக்ட்ல சிம்பு நடிக்கப்போறார்னு படிச்சேன். நமக்குத்தான் சர்ச்சையான விஷயம்னா உடனே தெரிஞ்சுக்க ஆர்வம் ஏற்படுமே! படிச்சுப் பார்த்தால்தான் தெரியுது, ‘அசராதவன் அடங்காதவன் அன்பானவன்’னு டைட்டிலையே சுருக்கி ‘ட்ரிபிள் ஏ’னு சொல்றாங்கனு. அடக் கடவுளேனு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டேன்.”

“விஜய் சேதுபதினு ஒருத்தர் நடிக்கிறாரா?”

ஆஷா சரத்: ஷாக் ஆகிறார், “என்னங்க கேக்குறீங்க? ரொம்ப வில்லங்கமா இருக்கும்போல. எனக்குத் தெரியலையே! நெட்ல பார்த்ததா ஞாபகம். சரி, அவ்வளவுதானா? நான் கிளம்பட்டுமா?” எனப் பதற்றமானவரிடம் பதிலைச் சொன்னதும் பலமாகச் சிரிக்கிறார். “ஏங்க, அதுக்குனு இப்படி எல்லாமா கொஸ்டீன் இருக்கும். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.”
 
`` `நான்தான் அடுத்த ஜெ.!’ எனச்  சொல்லிக் கொண்டிருக்கும் அரசியல் பிரமுகர் யார்?’’

விடை: விஜயதரணி

உமா சங்கர் : “ஹா... ஹா... என்ன கேள்வி தம்பி இது? நானே அமைதியா ஒதுங்கி இருக்கேன். நீங்க திரும்பவும் ஏதோ சர்ச்சையைக் கிளப்புற மாதிரியே கேள்வி கேக்குறீங்களே! ஹா... ஹா... சரி, அந்தத் தூத்துக்குடியில் இருந்த அம்மாவா? சசிகலா லதாவோ, சசிகலா புஷ்பலதாவோ... இந்தச் சூழ்நிலையில் அவங்கதான் இப்படிச் சொல்ல வாய்ப்பு இருக்கு. சரியா?’’ எனக் கேட்டுச் சிரிக்கிறார்.

உமா தேவி: “அரசியல் பற்றி எல்லாம் தெரியாதுங்க. இப்போதைக்கு அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லைனு மட்டும்தான் தெரியும்.”

“விஜய் சேதுபதினு ஒருத்தர் நடிக்கிறாரா?”

சரண்யா சுந்தரராஜ் “அய்யோ... யாருங்க இப்படிச் சொன்னது? இருங்க, கெஸ் பண்றேன். சசிகலா புஷ்பாவா? அவங்கதான் ஏதோ சொல்லிட்டு இருந்தாங்க. ஒரு கெஸ்ல சொல்றேன். சசிகலா புஷ்பா, குஷ்பு, தமிழிசை, விஜயதரணி. இவங்க நாலு பேர்ல யாரோ ஒருத்தர்தான். ஆனா, ஜெயலலிதா இடத்தை இன்னொருத்தர் பிடிக்க முடியுமா என்ன?” புருவம் உயர்த்துகிறார்.

ஆஷா சரத்: “அரசியல் எல்லாம் வேணாமே... எனக்கு பாலிட்டிக்ஸ் பற்றி ஒண்ணுமே தெரியாதுங்க. வேணும்னா போன் எ ஃப்ரெண்ட் ஆப்ஷனைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டுல இருக்கும் என் ஃப்ரெண்டுகிட்ட கேட்டுச் சொல்லவா? இது நமக்குள்ளவே இருக்கட்டும். இந்த டீல் ஓ.கே-வா?” எனச் சிரிக்கிறார்.

``இந்த வருடம், அதிகமான தமிழ்ப் படங்களில்  நடித்த  ஹீரோ யார்?’’

விடை: விஜய் சேதுபதி

“விஜய் சேதுபதினு ஒருத்தர் நடிக்கிறாரா?”

உமா சங்கர்: மீண்டும் இடைவிடாத சிரிப்பு... “நான் கடைசியா பார்த்த படம் எதுன்னுகூட எனக்கு ஞாபகம் இல்லை. சினிமா பார்த்து பல வருடங்கள் ஆச்சு. எந்த நடிகர்?” எனக் கேட்டவரிடம் பதில் சொன்னால், ``ஓ... அப்படி எல்லாம் நடிகர்கள் இருக்காங்களா என்ன? எனக்குத் தெரியாதுப்பா. சரி, ஆசீர்வாதங்கள்.”

உமா தேவி: பட்டென பதில் வருகிறது “விஜய் சேதுபதி சார்தானே! அப்படா... கடைசிப் பந்துல ரன் எடுத்து ஜெயிக்கிற மாதிரி கடைசிக் கேள்விக்குப் பதில் சொல்லி பாஸ் மார்க் வாங்கிட்டேன். மகிழ்ச்சி!”
 
சரண்யா சுந்தரராஜ்: “விஜய் சேதுபதி. சரியா?”

ஆஷா சரத்: “கார்த்தி... இல்லை இல்லை... கீர்த்தி சுரேஷோட நடிச்சார்ல அவர்தானே? சிவகார்த்திகேயனா... விஜய் சேதுபதியா... ஒரே கன்ஃபியூஷனா இருக்கே!”