Published:Updated:

ஜென் Z - ஹாரி பாட்டரின் மகன்!

ஜென் Z - ஹாரி பாட்டரின் மகன்!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - ஹாரி பாட்டரின் மகன்!

க்ருஷ்

ஜென் Z - ஹாரி பாட்டரின் மகன்!

க்ருஷ்

Published:Updated:
ஜென் Z - ஹாரி பாட்டரின் மகன்!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - ஹாரி பாட்டரின் மகன்!

2016-ம் ஆண்டில் அதிகம் ப்ரீ ஆர்டர் செய்யப்பட்ட புத்தகம், `ஹாரி பாட்டர் நூல் வரிசையின் எட்டாம் பாகம்’ இதுவரை நாவலாக மட்டுமே வெளியான ஹாரி பாட்டரின் கதை, இந்த முறை திரைக்கதைப் புத்தகமாக ரிலீஸாகி இருக்கிறது. `ஹாரி பாட்டர்’ நாவல் படித்த சுட்டீஸ் எல்லாம் பெரியவர்கள் ஆகியிருப்பார்கள் என நினைத்தார்களோ என்னவோ? இந்த நூலை ஜே.கே.ரௌலிங் எழுதவில்லை. ஜேக் த்ரோன் எழுதியிருக்கிறார்.

ஜென் Z - ஹாரி பாட்டரின் மகன்!

ஹாரி பாட்டரின் கடைசி பாகம் டெத்லி ஹாலோஸ் முடிந்து, 19 ஆண்டுகளுக்குப் பின் நடக்கிறது ஹாரி பாட்டர் அண்ட் தி கர்ஸ்டு சைல்டு. அதே ஹாக்வார்ட்ஸ் எக்ஸ்பிரஸ், அதே 93/4 பிளாட்ஃபார்மில் இந்த முறையும் கதை ஆரம்பிக்கிறது. ஆனால், ஹாரி பாட்டருக்குப் பதில், அவரது இளைய மகன் ஆல்பஸ்தான் ஹீரோ. ஆம்... அங்கு இருக்கும் மினிஸ்ட்ரி ஆஃப் மேஜிக்கில் பணிபுரியும் 37 வயது நபராக வருகிறார் ஹாரி பாட்டர். பிரபலமான தந்தைக்கு மகனாக இருப்பதே பிராப்ளம்தானே!

ஜென் Z - ஹாரி பாட்டரின் மகன்!

ஆல்பஸ் தன் மீது சுமத்தப்படும் எதிர்பார்ப்புகளால், ஹாரியின் மீது கோபம்கொள்கிறான். ஹாரியின் பால்ய எதிரி டிராகோ மால்ஃபாயின் மகன் ஸ்கார்பியஸுடன் நண்பன் ஆகிறான் ஆல்பஸ். ‘ஹாரி பாட்டர் அண்ட் தி கோப்லெட் ஆஃப் ஃபயரில்' செட்ரிக் என்பவர் இறக்கக் காரணமானவர் ஹாரி. தந்தையின் தவறைச் சரிசெய்ய, டைம் டர்னர் மூலம் டைம் டிராவல் செய்கிறான் ஆல்பஸ். கடந்தகால வரலாற்றில் ஆல்பஸ் செய்யும் பிழை, நிகழ்காலத்தை அப்படியே மாற்றுகிறது. வால்ட்டிமோர்ட் ஹாக்வார்ட்ஸின் தலைவன் ஆகிறான். ஹாரி இறந்துவிடுகிறான். இறந்துபோன பலர் உயிரோடு வருகிறார்கள்... எனச் செல்கிறது கதை.

ஒரு நாவலை வாசிக்கும்போது நாமே பல கற்பனையான உலகை உருவாக்குவோம். ஆனால், இந்தத் திரைக்கதைப் புத்தகத்தில் நாம் கற்பனை செய்வதற்கு அந்த வாய்ப்பு குறைவு. அதுவே இந்த நூலின் குறை. வாசகனாகப் படிக்கும் நமக்கு, டேனியல் ரேடிக்ளிஃபும், எம்மா வாட்சனும்தான் கண் முன் வருகிறார்கள். 11 ஆண்டுகளாக வெளியான எட்டு படங்களில் வருபவர்களின் முகம்தான் புத்தகம் முழுக்க நமக்குத் தெரிகிறது. ஹாரி பாட்டரின் தீவிர வாசகர் என்றால், ஓர் இரவில் இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்துவிடலாம். புத்தகத்தின் க்ளைமாக்ஸ் முதல் பாகத்தின் காட்சிகளில் முடிவது, நிச்சயம் ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு ஒரு நாஸ்டால்ஜியா ஃபீல் தரும்!