Published:Updated:

ஜென் Z - நான் சூர்யா ஆனது எப்படி?

ஜென் Z - நான் சூர்யா ஆனது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - நான் சூர்யா ஆனது எப்படி?

தா.ரமேஷ்

ஜென் Z - நான் சூர்யா ஆனது எப்படி?

தா.ரமேஷ்

Published:Updated:
ஜென் Z - நான் சூர்யா ஆனது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - நான் சூர்யா ஆனது எப்படி?

ந்தியாவில் எங்கு தடகளப் போட்டி நடந்தாலும் 5,000 மீட்டர், 10,000 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தை, சூர்யாவுக்கு எனத் தனியாக எடுத்து வைத்துவிடலாம். பெண்களுக்கான தொலைதூர ஓட்டத்தில் இந்திய அளவில் சூர்யாவை வெல்ல ஆட்கள் குறைவு.

``என் அப்பா லோகநாதன், தடகளப் பயிற்சியாளர். சின்ன வயசுல தினமும் காலையில அவர்கூட கிரவுண்டுக்குப் போயிடுவேன். பசங்க ஓடுறதைப் பார்த்து, எனக்கும் தடகளம் மேல ஆர்வம் வந்தது. ஆறாவது படிக்கும்போது ஓட ஆரம்பிச்சேன். முதல்ல மாவட்ட அளவில் ஓடி ஜெயிச்சு... அடுத்து மாநிலம், ஜூனியர் நேஷனல்ஸ், சீனியர் நேஷனல்ஸ்னு படிப்படியா வளர்ந்தேன். ஆரம்பத்துல டிஸ்டன்ஸ் ரன்னர் ஆகணும்னு ஓடலை. 100 மீட்டர் ஓடணும்னா, நிறைய ஸ்பீடு வேணும். அது என்கிட்ட இல்லை. ஆனா, அசால்ட்டா 2 கி.மீ., ஓடினேன். அப்புறம் 2,000 மீட்டர், 5,000 மீட்டர்னு ஓடி, இப்போ முழுக்க டிஸ்டன்ஸ் ரன்னர் ஆகிட்டேன்.

ஜென் Z - நான் சூர்யா ஆனது எப்படி?

முதல்ல என் 12 வயசுலயே சீனியர் லெவல் மீட்ல கலந்துக்கிட்டு, ரொம்ப நாள் ரெக்கார்டை பிரேக் பண்ணேன். `சின்னப் பொண்ணை ஏன் சீனியர் மீட்ல ஓடவைக்கிறீங்க?'னு அசோசியேஷனில் இருந்து, அப்பாவைச் சத்தம்போட்டாங்க. ஆனா, இன்னிக்கு நேஷனல் லெவல்ல நடக்கிற எல்லா போட்டிகளிலும் தமிழ்நாட்டுக்காக, 5,000 மீட்டர், 10,000 மீட்டர் ஓடி தங்கம் ஜெயிச்சுடுறேன்.
 
ஸ்போர்ட்ஸ்ல கலக்கினாலும் நல்லா படிச்சேன். நான் நினைச்சிருந்தா, டாக்டர், இன்ஜினீயர் ஆகிருக்கலாம். ஆனா, நேஷனல் சாம்பியன் ஆவதுதான் என் கனவா இருந்தது. அதை வளர்த்தேன்; அதுக்காக உழைச்சேன். காலேஜ் படிக்கும்போது எர்ணாகுளம், சென்னை, குண்டூர்ல அடுத்தடுத்த வருஷங்கள்ல நடந்த ஆல் இண்டியா யுனிவர்சிட்டி டோர்னமென்ட்னு பல போட்டிகளில் 5,000 மீட்டர்ல தங்கம், வெள்ளி ஜெயிச்சேன்.

2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரயில்வேயில் வேலை கிடைச்சது. அதோடு ஸ்போர்ட்ஸுக்கு ஒரு கும்பிடுபோட்டு ஜம்முனு வேலை பார்த்திருக்கலாம். இவ்வளவு நாள் கஷ்டப்பட்டதுக்குப் பெருசா சாதனை பண்ணணும்னு ஒரு வெறி உள்ளுக்குள்ள ஓடிட்டே இருக்கு. அதனாலதான் இன்னும் ஓடணும்னு தோணுது.

எல்லா துறைகளிலும் சிரமங்கள் இருக்கு. எதுவும் ஈஸியா கிடைச்சுடாது. அதுபோல விளையாடுறதும் அவ்வளவு சுலபம் இல்லை. எங்க டிபார்ட்மென்ட்ல எனக்கு விடுமுறை கொடுக்கிறதுல இருந்து பல விஷயங்களுக்கு அனுமதி கிடைக்க ரொம்பவே தாமதம் ஆகும். நேஷனல் கேம்ப்ல இருந்துக்கிட்டு ஒவ்வொரு முறையும் நான் அலைஞ்சிட்டிருக்க முடியாது. ஆபீஸ்ல இருந்து அனுமதிக் கடிதம் வர்ற வரைக்கும், டியூட்டியில்தான் இருந்து ஆகணும். தொடர்ச்சியா பிராக்டிஸ் பண்ணலைன்னா, மீட்ல ஜெயிக்க முடியாது. பிராக்டிஸ் பண்ற இடத்துல இருந்து மீட் வரைக்கும் எல்லா இடங்கள்லயும் பிரச்னை இருக்கு. அப்போல்லாம், `போதும் நிறுத்திரலாம்’னு தோணும். ஆனா, மனசு கேட்காது.

ஜென் Z - நான் சூர்யா ஆனது எப்படி?

எல்லா விளையாட்டு வீரருக்கும் ஒலிம்பிக்தான் இலக்கு. நானும், இந்த வருஷம் ஒலிம்பிக் போகணும்னு ரொம்பத் தீவிரமா பயிற்சியில் ஈடுபட்டேன். ஒலிம்பிக் குவாலிஃபையர் போட்டி கெளகாத்தியில் நடந்தது. எப்படியும் ஒலிம்பிக்கில் கலந்துக்கணும்னு வெறியோடு அந்தப் போட்டியில் ஓடினேன். நினைச்ச மாதிரியே தங்கம் ஜெயிச்சேன். இருந்தாலும், வெறும் 26 செகண்ட்ல ஒலிம்பிக் வாய்ப்பு மிஸ் ஆகிடுச்சு. இப்போ இன்னும் நாலு வருஷம் காத்திருக்கணும்.

ஜென் Z - நான் சூர்யா ஆனது எப்படி?

பொதுவா 10,000 மீட்டருக்கு 25 ரவுண்டு ஓடணும். ஒவ்வொரு ரவுண்ட்ல ஒரு செகண்ட் கம்மிப் பண்ணியிருந்தாகூட, ஒலிம்பிக் போயிருப்பேன். ஜஸ்ட் மிஸ். ஒருவேளை வெளிநாட்டுல பயிற்சி பண்ணியிருந்தா செலெக்ட் ஆகியிருக்கலாம். விசா கிடைக்காததால கடைசி நேரத்துல ஜெர்மனி போகவும் முடியாமல் போயிடுச்சு. இன்னும் நான் என் பெஸ்ட் கொடுக்கலைன்னுதான் நினைக்கிறேன். அடுத்த வருஷம் ராஞ்சியில் ஏசியன் டிராக் அண்ட் ஃபீல்ட் மீட் நடக்கப்போகுது. அதுல நல்லா பெர்ஃபார்ம் பண்ணணும். அதுல சாதிச்சா, அடுத்து ஏசியன் கேம்ஸ்லயும் கலக்கலாம். குறைந்தபட்சம் ஏசியன் கேம்ஸ்லயாவது இந்திய தேசிய கொடியை ஏத்திவெச்சுரணும். அதுக்கு நான் காரணமா இருக்கணும். அதான் இப்போதைக்கு என் கனவு!

காத்திருப்பேன்... கலந்துக்குவேன்... கலக்குவேன்!''