Published:Updated:

ஜென் Z - பாடியே கவர் பண்றாங்க!

ஜென் Z - பாடியே கவர் பண்றாங்க!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - பாடியே கவர் பண்றாங்க!

பா.ஜான்சன்

ஜென் Z - பாடியே கவர் பண்றாங்க!

பா.ஜான்சன்

Published:Updated:
ஜென் Z - பாடியே கவர் பண்றாங்க!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - பாடியே கவர் பண்றாங்க!

டி.வி ரியாலிட்டி ஷோக்களில் பாடி சினிமா வாய்ப்புபெறுவது ஆதிகால பாணி. இன்றைய டிரெண்ட் `கவர் சாங்’தான். ஏற்கெனவே வெளியான பாடலை, கொஞ்சம் உப்பு மிளகு போட்டு பாடி, யூடியூபில் வெளியிடுவதே ‘கவர்’ கலாசாரம். அதன் மூலம் சினிமா வாய்ப்பு பெற்றவர்களும் இருக்கிறார்கள், யூடியூப் ஸ்டாராகி கான்சர்ட்களில் பாடுகிறார்கள். அதில் இருந்து சிலர்... 

ஜென் Z - பாடியே கவர் பண்றாங்க!

வித்யா: (vidya)

ஜென் Z - பாடியே கவர் பண்றாங்க!

சென்னையில் பிறந்து அமெரிக்காவுக்குப் பெயர்ந்தவர் வித்யா. கர்னாடக இசை பயின்ற இவர், தன் தங்கையுடன் இணைந்து ஷங்கர் ட்ருக்கரின் ‘ஸ்ருதிபாக்ஸ்’ யூடியூப் சேனலில் பாடத் தொடங்கினார். 2015-ம் ஆண்டில் வித்யா விஓஎக்ஸ் சேனல் மூலம் தனது முதல் மாஷ்அப் கவர் பாடலை வெளியிட ஷாரூக் கான் உள்பட பலரது கவனமும் பெற்றார். இவரது சிறப்பே மாஷ்அப் பாடல்கள்தான். `கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்...’ என ஆரம்பித்து அடுத்த வரியில் ஜஸ்டின் பைபரின் `You gotta go and get angry’ என காக்டெய்ல் கொடுப்பார். வித்தியாசமான இசை, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு இசைகளின் விதவிதமான கலவையாக இருப்பதால், லட்சக்கணக்கில் ரசிகர்கள்.

https://www.youtube.com/user/VidyaVox

சனா மொய்டுட்டி : (Sanah Moidutty)

ஜென் Z - பாடியே கவர் பண்றாங்க!

சிறுவயதில் இருந்தே மேடைகளில் பாடிய சனா மொய்டுட்டி, குழந்தைகள்  இசைக்குழு ஒன்றிலும் இருந்தார். 18 வயதுக்குள் 500 மேடை நிகழ்ச்சிகளில் பாடி முடித்திருந்தார். இன்ஜினீயரிங் படித்தபோது நடந்த டேலன்ட் ஹன்ட் மூலம் வந்தது பின்னணிப் பாடகி வாய்ப்பு. `ஆல்வேஸ் கபி கபி' டைட்டில் ட்ராக் தொடங்கி, சமீபத்தில் ரஹ்மான் இசையில் `மொஹஞ்சதாரோ' படம் வரை சனா பாடிய பாடல்கள் எல்லாம் செம ஹிட். சமீபத்தில் பாடிய கவர் சாங், `கண்ணாளனே’ பாடலின் இந்தி வெர்ஷனான `கெஹனா ஹை க்யா’!

https://www.youtube.com/user/SanahMoidutty

ஜோனிதா காந்தி: (Jonita Gandhi)

ஜென் Z - பாடியே கவர் பண்றாங்க!

டெல்லிப் பெண்; வளர்ந்தது கனடாவில். அப்பாவிடம் இருந்து இசை ஆர்வம் தொற்றிக்கொண்டது. படிப்பு, இன்டர்ன்ஷிப் என பிஸியானாலும் மேடைகளில் பாடுவதையும் தொடர்ந்தார். அதன் பிறகு முழு நேரமாக இசை படிக்க இந்தியா வந்து கற்றுக்கொண்டு, நண்பர் அகன்ஷா காந்தியுடன் இணைந்து கவர் சாங்ஸ் பாடி வைரல் வீராங்கனை ஆனார். அதைத் தொடந்து பாடகர் சோனு நிகத்துடன் கான்சர்ட் களில் பாட ஆரம்பிக்க, இசையமைப்பாளர்கள் விஷால்-ஷேகர் மூலம் ‘சென்னை எக்ஸ்பிரஸ் டைட்டில் ட்ராக்’ பாடும் வாய்ப்பு கிடைத்தது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் `ஹைவே’, `கோச்சடையான்’, `லெகர் ஹம் திவானா தில்’ படங்களில் பாடும் வாய்ப்பு. இவரின் சமீபத்திய ஹிட்ஸும் ரஹ்மான் இசையில்தான் (`24’, `மெய் நிகரா’, `அச்சம் என்பது மடமையடா’). பின்னணிப் பாடகி ஆகிவிட்டாலும், இப்போதும் கவர் சாங் பாடுகிறார் ஜோனிதா.

https://www.youtube.com/watch?v=7Fs6CQ_RwpQ

ஷெர்லே சீதா: (Shirley Setia)

ஜென் Z - பாடியே கவர் பண்றாங்க!

யூடியூப் கவர் பாடல்கள் மூலம் பிரபலமானவர்களில்  முக்கியமானவர் ஷெர்லே சீதா. `தம் மாரோ தம்’ படத்தில் இடம்பெற்ற `தி அமோ’ பாடல்தான் ஷெர்லேயின் முதல் கவர் பாடல் (தட் பைஜமா பாடலும்கூட). `சுன் ரஹா ஹை து’, `மன்மர்ஸுயா’, டெய்லர் ஸ்விஃப்ட் பாடிய `லவ் ஸ்டோரி’ என பல கவர்கள் பாடியவர் சமீபத்தில் தனது முதல் சிங்கிள் பாடல் ‘கோய் ஷோர்’ஐ வெளியிட்டார். ஐந்தே நாட்களில் ஐந்து லட்சம் பார்வையாளர்கள் பெற்றிருக்கிறது அந்த வீடியோ. தமிழ்ப் பாட்டும் பாடு சீதாம்மா!

https://www.youtube.com/user/shirleysetia