Published:Updated:

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

Published:Updated:
உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!
உணவு நல்லது வேண்டும்!

நினைவுத்திறனுக்கு வல்லாரை சூப்

தேவையானவை: வெங்காயம் – 2, மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், பூண்டுப்பல் – 10, பச்சைமிளகாய் -2, தக்காளி – 3, வல்லாரைக் கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி - சிறிது, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியைப் பச்சையாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த விழுதில், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். ஒரு கொதிவந்ததும், நறுக்கிய வல்லாரைக் கீரையைச் சேர்க்க வேண்டும். கீரை பாதி அளவுக்கு வெந்ததும், உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும். கீரையை நீண்ட நேரம் வேகவைக்கக் கூடாது.

பலன்கள்: நினைவாற்றல் அதிகரிக்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரும். இதயத்துக்கு நல்லது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும். சோர்வை நீக்கும். பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும்.

உணவு நல்லது வேண்டும்!

மல்லி-சாமைச் சோறு

தேவையானவை: சாமைப் புழுங்கல் அரிசி - 200 கிராம், கொத்தமல்லி - ஒரு கட்டு, புதினா, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சைமிளகாய் - 4, இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய் - 3, பட்டை - 5, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, இஞ்சி, பூண்டு இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய்விட்டு பட்டை, ஏலக்காய் சேர்த்து வாசம் வர வறுத்து, அத்துடன் அரைத்துவைத்துள்ள கலவையைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி (1:2 என்ற விகிதத்தில்) குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வைத்து இறக்கவும். இதனுடன் கேரட், வெள்ளரி, வெங்காயம் சேர்த்து, தயிர் பச்சடியாகவும் செய்து சாப்பிடலாம்.

பலன்கள்: புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளது. கொழுப்பைக் குறைக்கும். பசியைக் கட்டுப்படுத்தும்.

உணவு நல்லது வேண்டும்!
உணவு நல்லது வேண்டும்!

யிற்று குடல் புண்: இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன்பகுதியில் ஏற்படக்கூடிய புண்களை வயிற்றுப் புண் (பெப்டிக் அல்சர்) என்கிறோம். ஹெச் பைலரி என்கிற பாக்டீரியா தொற்று, வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக்கொள்வது போன்றவற்றால் வயிற்றுப்புண் ஏற்படுகிறது. காரமான உணவுகள் சாப்பிடுவது, மன அழுத்தம் போன்றவை புண்களின் பாதிப்பை அதிகரிக்கலாம். வயிற்றுப்பு ண்களை தவிர்க்க மணத்தக் காளிக்கீரை, முட்டைக்கோஸ், தேங்காய், வெள்ளரி, கேரட், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, சப்போட்டா, தர்ப்பூசணி, மாதுளை, ஆரஞ்சு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.