Published:Updated:

அடிச்சுக் கேட்டாலும் சொல்ல மாட்டோம்!

இர.ப்ரீத்திபடங்கள் : உசேன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

''எம் பொண்ணுக்கு நான் என்ன குறைவெச்சேன்... காசு பணம் இல்லைன்னாலும் அவ ஆசைப்பட்ட எல்லாமே வாங்கிக் கொடுத் தேனே... என் மதியா இப்படிப் பண்ணிட்டா... என் மதியா இப்படி..?''- கலங்கிய கண்களும் கலைந்த கூந்தலுமாக 'சுந்தரி’ விஜி ஒரு கணம் கேமராவைப் பார்க்க... திருப்தியான முகத்துடன், ''கட்... டேக் ஓ.கே!'' என்கிறார் இயக்குநர் ரவி. 'அழகி’ ஷூட்டிங் ஸ்பாட்டில் பேக்கப் சம்பிரதாயங்கள் ஆரம்பமாகின்றன!  

 நூல் சேலை காஸ்ட்யூமுடன் மேக்கப் அறைக்குள் புகுந்த 'அம்மா’ சுந்தரி லெக்கிங்ஸ் - டாப்ஸ் என்று செம டீக்கான விஜியாக ரிட்டர்ன் அடித்தார். ''ரொம்ப லேட் ஆச்சு... என் பொண்ணு வெயிட் பன்ணிட்டு இருப்பா!'' என்று பரபரப்பாகக் கிளம்பியவரிடம், ''மேடம்ம்ம்... சொல்லவே இல்ல... உங்களுக்குப் பொண்ணு இருக்கிற விஷயத்தை...'' - வாலன்ட்டியராக வந்து வம்புக்கு இழுத்தார் 'சோமு’ அருண்.

''தம்பி, சீரியல்ல என் பொண்ணு ஷாலு (மதி)  உன்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறதே போதும். ரியல் லைஃப்ல என் பொண்ணுங்க எந்தக் கஷ்டமும் படக் கூடாதுனுதான் ரெண்டு பேரையும் நல்லாப் படிக்க வெச்சுட்டு இருக்கேன். ஸோ... ராங் நம்பர் தம்பி!''  என்று அருண் தலையில் குட்டினார் விஜி.

அடிச்சுக் கேட்டாலும் சொல்ல மாட்டோம்!

''மேடம், அவனைக் கண்டுக்காதீங்க. நானும் கமல்தீப்பும் (நட்ராஜ்) எலிஜிபிள் பேச்சுலர்ஸ். அப்ப அருண் பேச்சுலர் இல்லையானு கேட்காதீங்க. அதைப்பத்தி நாங்க எதுவும் சொல்ல மாட்டோம். எங்களை அடிச்சுக் கேட்டாக்கூட சொல்லக் கூடாதுனு சொல்லியிருக்கான் அவன்!'' என்று கண் சிமிட்டினார் 'பாபு’ கணேஷ் கோபிநாத்.

சில சீனியர்கள் போக மற்ற அனைவருமே புதுமுகங்கள் என்பதால், எப்போதுமே கலகல திருவிழாதான் 'அழகி’ முகாமில்!  

'மதி’ ஷாலு குரியன், கேரள இறக்குமதி. ''ஞான் மலையாளத்தில் 'சுவாமி ஐயப்பான்’ சீரியலில் நடிக்குது. 'தென்றல்’ சீரியலோட மலையாள வெர்ஷனுக்கு சான்ஸ் கேட்டு வந்தேன். 'தென்றல்ல உங்களுக்கு கேரக்டர் இல்லை. கொஞ்சம்  வெயிட் பண்ணுங்க’னு சொன்னாங்க. ஞான் ஏமாந்து போயி... ஆனா, 'அழகி’ சான்ஸ் கிட்டி. இப்போ நான் ரொம்ப ஹேப்பி!'' என்று மலையாளம் கலந்து ஷாலு கதைக்க, மொத்த கும்பலும் அவரைப்போலவே பேசி மிமிக்ரி செய்து கலாய்த்தார்கள்.

அடிச்சுக் கேட்டாலும் சொல்ல மாட்டோம்!

பாபுவாக நடிக்கும் கணேஷ் கோபிநாத், தஞ்சாவூர்க்காரர். இப்போது பாண்டிச்சேரி யில் சாஃப்ட்வேர் வேலை. ''விவரம் தெரிஞ்சதுல இருந்து நான் விகடன் வாசகன். 2004 விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் இறுதிச் சுற்று வரை போனேன். அப்போ மிஸ் ஆன வாய்ப்பு இப்போ வட்டியும் முதலுமா சீரியல் சான்ஸா கிடைச்சிருக்கு. ஆங்... இன்னொரு முக்கியமான விஷயம்... வீட்ல எனக்குப் பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க. இது தமிழக இளம்பெண்கள் கவனத்துக்கு!'' என்று பஞ்ச் வைத்து முடித்தார் கணேஷ்.    

'நர்மதா’வாக நடிக்கும் பிரியாவின் சீரியல் குழந்தை, அவருடைய ரியல் குழந்தையே!

''வெல்... என்னைப்பத்தி நானே சொல்ல ணும்னா... ஐ’ம் ஏற்கெனவே ஆர்.ஜே, வீ.ஜே. இப்போ ஆக்டர். பட், இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு!'' என்று 'சூர்யா’ ராதா பில்ட்-அப் கொடுக்க... ''அக்கா காதலிச்சு ஓடிப் போகப் போறானு தெரிஞ்சி அழ வேண்டிய ஸீனுக்கு 'கெக்கே பிக்கே’னு பல்லைக் காமிச்சது யாரும்மா..? நீதானே!''  என்று பியூஸ் பிடுங்கினார் அருண். 'சோமு’வாக ஸ்மார்ட் வில்லத்தனம் காட்டும் அருண் எம்.பி.ஏ. முடித்த பிசினஸ்மேன்.

''ஐயே... பாக்கெட்ல ஒரு காந்தம் வெச்சுட்டு 'நான் ஒரு பிசினஸ் மேக்னட்’னு ஊரை ஏமாத்திட்டு இருக்கான். நான்லாம் புரொஃபஷனல் ஆக்டர்!'' என்று கெத்து காட்டிய 'ஸ்வேதா’ ஜோதி மேலும் தொடர்ந்தார். ''சினிமாவிலும் நடிச்சுட்டு இருக்கேன். இப்போ 'போராளி’ படத்தில் சசிகுமாரை ஒன் சைடா லவ் பண்ணிட்டு இருக்கேன். இந்தா... இவனை மாதிரி வெட்டியாத் தாடி வளர்த்துட்டு, ஊர் சுத்திட்டு இருக்கலை!'' என்று சும்மா இருந்த 'நட்ராஜ்’ கமல்தீப்பை வம்புக்கு இழுத்தார்.

அடிச்சுக் கேட்டாலும் சொல்ல மாட்டோம்!

''ஓய்... இப்பவே மரியாதையாப் பேசிப் பழகு. யாரைப் பார்த்து வேஸ்ட்னு சொன்ன... நடிப்புன்னா உயிரையும் கொடுப்பான் அவன். நடிக்கிற நேரம் போக, மத்த நேரத்துல மாடல்களுக்கு போட்டோ செஷன் பண்ணிக் கொடுக்குற புரொஃபஷனல் போட்டோகிராஃபர் அவன்!'' என்று ஆதரவுக் குரல் உயர்த்தினார் நித்யா.

அனைவரும் ஒரு கணம் ஆச்சர்யமாக நித்யாவைப் பார்க்க, ''நான் ஏன் கமலுக்கு சப்போர்ட் பண்றேன்னு பார்க்கிறீங்களா? நான் ஸ்க்ரீன் ப்ளே பார்த்துட்டேன். கூடிய சீக்கிரமே சீரியல்ல எனக்கும் அவனுக்கும் ஒரு சஸ்பென்ஸ் ட்விஸ்ட் இருக்கு. அப்போ எனக்கு அவன் சப்போர்ட் பண்ணணும். அதுக்குத்தான் இப்ப இந்த பில்ட்-அப்!'' என்று கண் சிமிட்டிச் சிரித்தார் நித்யா.

அது என்னவாக இருக்கும்?  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு