Published:Updated:

ஆசை - பி.சி.யின் ‘ஃபேமிலி’ க்ளிக்!

ஆசை - பி.சி.யின் ‘ஃபேமிலி’ க்ளிக்!
பிரீமியம் ஸ்டோரி
ஆசை - பி.சி.யின் ‘ஃபேமிலி’ க்ளிக்!

ம.கா.செந்தில்குமார், படங்கள்: மீ.நிவேதன்

ஆசை - பி.சி.யின் ‘ஃபேமிலி’ க்ளிக்!

ம.கா.செந்தில்குமார், படங்கள்: மீ.நிவேதன்

Published:Updated:
ஆசை - பி.சி.யின் ‘ஃபேமிலி’ க்ளிக்!
பிரீமியம் ஸ்டோரி
ஆசை - பி.சி.யின் ‘ஃபேமிலி’ க்ளிக்!
ஆசை - பி.சி.யின் ‘ஃபேமிலி’ க்ளிக்!

‘நான் சண்முகநாதன். சென்னை ஆலந்தூரில் வசிக்கிறேன். தனியார் மருந்து கம்பெனியில் அனலடிக்கல் கெமிஸ்ட். மனைவி வித்யா.  எங்களுக்கு ரித்திகா, ரசிகா என இரண்டு மகள்கள். எங்களின் பொழுதுபோக்கு சினிமாதான். நல்ல படங்களைத் தவறவிட மாட்டோம். பி.சி.ஸ்ரீராம் சாரின் ஒளிப்பதிவு அவ்வளவு பிடிக்கும். அதுவும் மணிரத்னம் காம்பினேஷனில் பி.சி சார் செய்த படங்கள் அவ்வளவு இஷ்டம். லைட்டிங்கைச் சிறப்பாக ஹேண்டில் செய்வதில் எனக்குத் தெரிந்து பி.சி சார்தான் பெஸ்ட்.

இப்படி எனக்கு ஆதர்சமாக இருக்கும் பி.சி சார்,  எனக்காக    ஒரு போட்டோகிராஃபராக மாற வேண்டும். ஆமாம், என் ஃபேமிலியை அவர் போட்டோ எடுத்துத் தர வேண்டும். எங்களின் இந்த ஆசையை ஆனந்த விகடன் நிறைவேற்றித் தருமா?’ - இது, நம் வாசகர் சண்முகநாதன், ஆனந்த விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் (facebook.com/AnandaVikatan) எழுதியிருந்த ஆசை.

 ‘ரெமோ’ பட கலர் கரெக்‌ஷன், கிரேடிங் என லேபிலேயே இருந்தார் பி.சி.ஸ்ரீராம். விஷயத்தைச் சொன்னோம். `‘நான் போட் டோ கிராஃபர் கிடையாதே, சினிமாட்டோகிராஃபர்’’ - கலகலவெனச் சிரித்தார். `` ‘ரெமோ’ ரிலீஸ் வரை கொஞ்சம் பிஸியா இருப்பேன். ஆனா, ‘பி.சி கமிட்டட்’னு அந்த ஃபேமிலியிடம் சொல்லிடுங்க. நாள், நேரம், இடம் பிறகு சொல்றேன். நிச்சயமா பண்ணலாம்’’ - பரபர வேலைகளுக்கு மத்தியிலும் சம்மதம் சொன்னார் பி.சி.

`‘இந்தியாவின் மோஸ்ட் வான்ட்டட் கேமராமேன், எங்களை போட்டோ எடுக்க ஒப்புக்கிட்டது ரொம்பப் பெரிய விஷயம் சார்!’’ ஆசை நிறைவேறப்போகிறது என்ற உற்சாகம் சண்முகநாதனின் வார்த்தைகளில்.

‘ஆசை’யை நிறைவேற்ற நேரம் குறிக்கப்பட்டது. நேரம்: ஞாயிற்றுக்கிழமை, காலை 11 மணி. இடம்: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பி.சி-யின் அலுவலகம். 

‘‘ ‘ஆசை ஃபேமிலி’ வந்துட்டாங்களா?’’   பி.சி-யின் வார்த்தைகளில் குறும்பு. பொக்கே, சால்வையுடன் சண்முகநாதன் வர ‘`எதுக்கு இந்த ஃபார்மாலிட்டி?’’-  தயக்கமும் ப்ரியமுமாக அன்பை ஏற்றுக்கொண்டார் பி.சி.

இந்தியாவின் மிகப்பெரிய ஒளிப்பதிவாளர், ஒரு குடும்பத்தை புகைப்படம் எடுக்க எடுத்துக்கொண்ட சிரத்தை, நம்மை வியக்கவைத்தது.

`‘முதல்ல ஆபீஸ்க்குள்ள வெச்சுக்கலாம். பிறகு, வெளியே எடுப்போம்’’ - போட்டோஷூட் ப்ளான் சொன்னார்.

`‘நீ நடுவுல வாம்மா. நல்லா ஜாலியா கலகலனு சிரிக்கணும். எங்கே ஸ்மைலையே காணோம்? போஸ் கொடுக்கக் கூடாது. அம்மா-அப்பாகூட ஜாலியா பேசிட்டிருங்க. சண்முகநாதன், நீங்க உங்க மனைவியைப் பார்த்துப் பேசுங்க. கேமராவைப் பார்க்காதீங்க’’ - அது, பி.சி போட்டோகிராஃபராக மாறி நின்ற மொமன்ட். உள்ளே ஸ்டுடியோவே அவ்வளவு எனர்ஜியாக இருந்தது. அந்த எனர்ஜியை நம் கேமராவிலும் அள்ளிக்கொண்டோம்.

சின்ன லொக்கேஷன் சேஞ்ச். அடுத்த ஸ்பாட் வெளியே வராண்டாவில்.

`‘அந்த சேரை அப்படியே வெளியே இழுத்து உட்காருங்க. இப்படித்தான் உட்காரணும்னு கிடையாது. யார் வேணும்னாலும் யார் பக்கத்துலயும் உட்காரலாம்’’ - இன்ஸ்ட் ரக்‌ஷன் கொடுத்த பிறகு, க்ளிக்கிங் பாயின்ட்டில் போய் நின்றார் பி.சி. `‘ஏம்ப்பா இவ்ளோ சீரியஸா இருக்கீங்க? அங்கே பாரு, அப்பா நல்லா கைகாட்டுறார். அவர் நல்ல ஆக்டராகிடுவார் போலிருக்கே!’’ பி.சி-யின் கமென்ட்டுகளால் ஒட்டுமொத்தக் குடும்பமும் சிரித்துக் குவித்தது.

ஆசை - பி.சி.யின் ‘ஃபேமிலி’ க்ளிக்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`‘நீ, அப்பா மடியில் உட்காருடா கண்ணா. ரெண்டு பேரும் அப்பா-அம்மாவுக்கு முத்தம் கொடுங்க’’ - அவர்களுக்கு மைண்ட் செட் பண்ணிக் கொடுத்துவிட்டு க்ளிக் பண்ண தயாரான பி.சி., `‘சார், இப்ப உங்க ஆக்ட்டிங்கை வெச்சுக்கங்க’’ என்றார் சண்முகநாதனிடம். வித்யாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

`‘உங்கள் மனைவி கொஞ்சம் கூச்சப்படுவார் போலிருக்கிறதே!’’- பி.சி சுத்தத் தமிழில் பேச, மீண்டும் மீண்டும் சிரிப்பு... மீண்டும் மீண்டும் க்ளிக்ஸ்.

‘‘போட்டோ எடுத்து ரொம்ப நாள் ஆச்சு. எனக்கும் இது ரெஃப்ரஷிங்கா இருந்தது’’ - பி.சி-யின் வார்த்தைகளில் ஒரு குடும்பத்தின் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும். போட்டோசெஷனுக்குப் பிறகு பி.சி-யின் உபசரிப்பு. காபி குடித்தபடி கான்வர்சேஷன் தொடங்கியது.

‘`உங்களை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டோம் சார்’’ - சண்முகநாதன்தான் தொடங்கினார்.

‘`இல்லை இல்லை... நான் அப்படி நினைக்கலை. இந்தச் சந்திப்புல எனக்கும் சந்தோஷம்தான். பொதுவா புகைப்படங்கள், நம் நினைவுகளோடு சம்பந்தப்பட்டவை. குடும்பத்தோடு கிளம்பி ஸ்டுடியோவுக்குப் போய், வெவ்வேறு பின்னணி மாற்றி, பிளாக் அண்ட் ஒயிட்டில் எடுத்த அந்த ஃபேமிலி போட்டோக்கள், காலத்தால் மறக்க முடியாத நினைவுகள்.

ஆசை - பி.சி.யின் ‘ஃபேமிலி’ க்ளிக்!

நாம ஒரு விஷயத்தை யோசிச்சுப் பார்க்கணும். அப்போ, அதுவும் எப்போதாவது எடுத்த அந்தக் கறுப்பு-வெள்ளைப் படங்களை நாம பொக்கிஷமாப் பாதுகாத்துட்டு வர்றோம். ஆனா, இப்போ ஒரு நாளைக்கு குறைச்சலா 10 போட்டோக்களாவது எடுக்கிற இந்த டிஜிட்டல் யுகத்தில் நாம் எத்தனை செல்ஃபிக்களை, ஃபேமிலி போட்டோக்களைப் பாதுகாக்குறோம்? ஒருபக்கம் க்ளிக் பண்ணிட்டே இருக்கோம். இன்னொரு பக்கம் டெலிட் பண்ணிட்டே இருக்கோம். இந்த டிஜிட்டலிலும் நம் பதிவுகளைப் பாதுகாக்கணும் என்பது ரொம்ப முக்கியம்’’ - பி.சி பேசப்பேச தலையாட்டி ஆமோதித்துக்கொண்டு இருந்தது சண்முகநாதனின் குடும்பம்.

‘‘உங்களால் மறக்க முடியாத பொக்கிஷ போட்டோன்னா, எதை சார் சொல்வீங்க?’’ இது சண்முகநாதன் மனைவி வித்யாவின் கேள்வி. டக்கென அமைதியான பி.சி., எதுவும் பேசாமல் தனக்குப் பின்னால் இருந்த தன் மகளின் போட்டோவைக் கைகாட்டுகிறார்.

‘‘தவறா எடுத்துக்காதீங்க சார். ப்ரியத்தில் கேட்கிறேன். உங்க மகள் இழப்புல இருந்து எப்படி சார் மீண்டு வந்தீங்க?’’ - தயங்கியபடி கேட்ட சண்முகநாதனை, உற்று நோக்கியபடி பேசுகிறார் பி.சி. ‘‘அதெல்லாம் மீளவே முடியாதுங்க. அந்த வருத்தங்களோடுதான் வாழக் கத்துக்கணும்; வாழ்ந்துதான் ஆகணும். நான் ஓ.கே. வெளியே, வேலைனு அந்த வருத்தத்தைக் கொஞ்சம் கரைச்சுக்கிறேன். ஆனா, என் மனைவிதான் ரொம்பக் கஷ்டப்படுறா. சில விஷயங்களைப் பகிர்ந்துக்க முடியாது. அப்படியே பகிர்ந்துக்கிட்டாலும் புரியாது’’ -அறையில் நிலவிய திடீர் அமைதியை, பி.சி-யே கலைக்கிறார்.

‘`ஓ.கே கமான். செல்ஃபி எடுக்க மறந்துட் டீங்களே...’’ என்றபடி ரசிகாவை செல்ஃபிக்கு அழைக்கிறார்.

ஒரு மகா கலைஞனின் ஃப்ளாஷ் மழையில் நனைந்த மகிழ்ச்சியுடன் விடை பெற்றுக் கொண்டது சண்முகநாதனின் குடும்பம்!

வாசகர்களே... இதுபோல உங்களுக்குள்ளும் சின்னச்சின்ன ஆசைகள் ஒளிந்திருக்கலாம். ஜாலியான, ரசனையான, காமெடியான ஆசைகளை எழுதி அனுப்புங்கள். ஆசிரியர் குழுவினரின் பரிசீலனையில் தேர்வாகும் ஆசைகளை, விகடன் நிறைவேற்றித் தருவான். உங்களை ஆசைகளை அனுப்பவேண்டிய முகவரி...

‘ஆசை’,
ஆனந்த விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை - 600 002.
இ-மெயில்: aasai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism