''அரசியல்வாதிகள், அதிகாரிகள் யார் அதிகம் சக்தி வாய்ந்தவர்கள்?''

''மக்கள்!

கர்நாடகாவில் பிறந்த பி.எஸ்.சீனிவாச ராவ், தஞ்சை மாவட்டத்தில் வாழ்ந்த விவசாயிகளின் அடிமைத்தனத்தை ஒழிப் பதற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான கம்யூனிஸ்ட் தலைவர். அவர் தலைமையில் நடந்த போராட்டங் களுக்குப் பிறகுதான் சாணிப் பாலும் சவுக்கடியும் ஒழிந்தது.

பண்ணையார்கள் தரும் குறைந்த அளவுக் கூலியை அதிகரிப்பதற்காகத் தொடர்ச்சியாக பி.எஸ்.ஆர். தலைமையிலான விவசாயிகள் சங்கம் போராடியது. அதன் பிறகு, 1946-ம் ஆண்டில் தமிழக அரசு (அன்றைய சென்னை மாகாண அரசு) விவசாயிகளின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்காக தஞ்சை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அனந்த நாராயணனைத் தலைவராகக்கொண்டு கமிஷன் ஒன்றை நியமித்தது. அந்தகமிஷன் விவசாயிகளின் கூலி (நெல்) அளவை அதிகப்படுத்துவதற்கு உத்தரவிட்டது. ஆனால், பண்ணையார்கள் இந்த உத்தரவை ஏற்கவில்லை. பாஷ்யம், ராகவமேனன் என்ற இரு அமைச்சர்களும் பண்ணையார்களுக்கு ஆதரவாக இருந்தார்கள்.

இதற்காகக் கூட்டப்பட்ட முத்தரப்பு மாநாட்டில் சீனிவாசராவுக்கும் அமைச்சர் பாஷ்யத்துக்கும்

இடையில் கடுமையான விவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த பாஷ்யம், ''மிஸ்டர் பி.எஸ்.ஆர். நான் யார் தெரியுமா?'' என்று கர்ஜித்தார். சீனிவாசராவோ அமைதியாக, ''தெரியுமே மிஸ்டர் பாஷ்யம், ரெவின்யூ மந்திரி'' என்றார். ஆத்திரம் தலைக்கேறிய அமைச்சர், ''நான் நினைத்தால் எட்டு மணி நேரத்தில் போலீஸ் இங்கே வந்துவிடும்'' என்றாராம். உடனே சீனிவாசராவ், ''உங்களுக்கு எட்டு மணி நேரம் வேண்டும். ஆனால், நான் 'புரட்சி ஓங்குக’ என்று கோஷம் போட்டால், ஐந்து நிமிடங்களில் நீங்கள் சுற்றி வளைக்கப்படுவீர்கள்'' என்று எச்சரிக்க, வெலவெலத்துப்போனார் அமைச்சர். பிறகு சீனிவாசராவ் தலைமை யில் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் வயலில் இறங்கி அறுவடையை நடத்த, பண்ணையார்களும் அரசும் பணிய ஒப்பந்தம் அமலானது. மக்கள் திரள் ஒன்று சேர்ந்தால் மகத்தான வெற்றிபெறும் என்பதற்கு, பி.எஸ்.ஆர். போராட்டம் மட்டும் அல்ல; சமீபத்திய தெலங்கானா, கூடங்குளம் அணுஉலை போராட்டங்கள்கூட சக்தி வாய்ந்த உதாரணங்கள்தாம்!''

- வெண்மணி, கடலூர்.

''சினிமா பாடல் வரிகளில் தீர்க்கதரிசனம் உண்டா?''

''ஏன் இல்லாமல்? 'அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்’ என்று 'தங்கைக்காக’ படத்தில் ஒரு பாடல் வரும். எழுதியவர் கவியரசு கண்ணதாசன். அந்தப் பாடலில் ஒரு வரி...

'காலேஜுக்குப் போகாமலே
கல்வி மந்திரியானான்
காப்பிக் கடை வெச்சிருந்தவன்
உணவு மந்திரியானான்...’

பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதவே ஆள்மாறாட்டம் செய்து கண்ணதாசன் வரிகளை நிரூபித்துவிட்டாரே புதுவை கல்வி அமைச்சர்?''

- ஆர்.ஜெகதீசன், நாகர்கோவில்.

''கலைஞர் கொண்டுவந்த எல்லாவற்றையும் ஜெயலலிதா மாற்றுகிறாரே?''

''தமிழக முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று இந்திய தேசியக் கொடி ஏற்றும் உரிமையை வாங்கித்தந்தவர் கருணாநிதி. நல்ல வேளையாக ஜெயலலிதா 'இனிமேல் சுதந்திர தினத்தன்று பாகிஸ்தான் கொடி ஏற்றுவேன்’ என்று அறிவிக்கவில்லை!''

- தமிழ்நிலா, சேலம்.

'' 'காங்கிரஸ் கட்சி யாரையும் நம்பி இல்லை’ என்கிறாரே தங்கபாலு..?''

''வாக்காளர்களையும் சேர்த்துத்தானே சொல்கிறார்!''

- கி.ரவிக்குமார், நெய்வேலி.

''இந்தியப் பிரதமராக தேவகவுடா, மன்மோகன் சிங் ஒப்பிடுக..?''

''தேவகவுடா - இந்தியாவில் யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் என்று நிரூபித்தவர். மன்மோகன் சிங் - இந்தியாவுக்கு இனி பிரதமரே தேவை இல்லை என்று நிரூபித்துக்கொண்டு இருப்பவர்!''

- ஜி.ராஜாராம், கோயம்புத்தூர்.

''சமூக விழிப்பு உணர்வுக்கான கணக்கு சொல்லுங் களேன்..?''

''இந்தியாவின் மக்கள்தொகை - 118 கோடி.

தினமும் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை - 62,389.

ஒவ்வொரு நாளும் பிறப்புகளின் எண்ணிக்கை - 86,853.

இந்தியாவில் உள்ள பார்வையற்றவர்கள் - 6,82,497.

தொடர்ந்து 11 நாட்கள் இறப்பவர்களின் கண்கள் தானம் செய்யப்பட்டால், இந்தியாவில் பார்வையற்றவர்கள் அனைவருக்கும் பார்வை கிடைக்கும்!''

- எஸ்.ராமன், சென்னை-17.