Published:Updated:

வெடி வெடிக்க... அடம்பிடிக்க!

வெடி வெடிக்க... அடம்பிடிக்க!
பிரீமியம் ஸ்டோரி
வெடி வெடிக்க... அடம்பிடிக்க!

வால்டர் ஓய்ட் - ஓவியங்கள்: பாலமுருகன்

வெடி வெடிக்க... அடம்பிடிக்க!

வால்டர் ஓய்ட் - ஓவியங்கள்: பாலமுருகன்

Published:Updated:
வெடி வெடிக்க... அடம்பிடிக்க!
பிரீமியம் ஸ்டோரி
வெடி வெடிக்க... அடம்பிடிக்க!
வெடி வெடிக்க... அடம்பிடிக்க!

து, கோடம்பாக்கத்து தீபாவளிக் கொண்டாட்டம். பிரபல நடிகர்கள் எப்படி எல்லாம் பட்டாசுகள் வெடித்து, புத்தாடை உடுத்தி, தின்பண்டங்கள் கடித்துக் கொண்டாடு வார்கள் என, நாம் செய்த ஏடாகூடக் கற்பனை!

தல தீபாவளி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெடி வெடிக்க... அடம்பிடிக்க!`என்னதான் தளபதி ஃபேனாக இருந்தாலும், தலைக்கு எண்ணெய் வைக்காமல் தீபாவளி நிறைவடையுமா?' என்கிறார்கள் சான்றோர்கள். அப்பேர்ப்பட்ட `தலை' தீபாவளி அன்றைக்கு அதிகாலையிலேயே எழுந்து நடந்து... நடந்து கறி வாங்க கசாப்புக் கடைக்குப் போவார். அதுவும் தன்னுடைய சொந்தக் கால்களால் தானே நடந்துபோய் தானே க்யூவில் நின்று வியக்கவைப்பார். `எங்க தலைவனின் எளிமையைப் பாருங்கடா!' என, அதை போட்டோ எடுத்து வைரல் வெடி வெடிப்பார்கள் ரசிகர்கள். தீபாவளிக்கு எந்தத் துணி எடுத்தாலும் அதில் கட்டாயம் கறுப்பு நிற கோட் இருக்க வேண்டும் என கண்டிஷன் போடுவார். ``அண்ணே, தீபாவளிக்கு மட்டும் இல்லை, பொங்கலுக்குக்கூட எங்க வீட்ல பிரியாணிதான்ணே'' என, தன் வீட்டு தீபாவளி பிரியாணியை தானே சமைத்து, தானே சகலருக்கும் அள்ளி வழங்குவார். அதோடு பட்டாசுகளையும் தானே திரி கிள்ளி, தானே தரையில் வைத்து, தானே ஊதுபத்தி எடுத்துவந்து... தானே வெடித்து...

வெடிரி

வெடி வெடிக்க... அடம்பிடிக்க!பட்டாசு வெடிப்பதாக இருந்தாலும், இட்லி சாப்பிடுவதாக... சட்னி தொட்டுக்கொள்வதாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட சம்பவத்தைச் செய்வதற்கு முன்னால் சம்பந்தப்பட்ட பொருட்களிடம் எல்லாம் பவ்யமாக அனுமதி கேட்டு `காட் ப்ளெஸ்' சொல்லிவிட்டுத்தான் செய்வார் தன்னடக்க ஒல்லிபெல்லி. சில நேரங்களில் அவர் இப்படி அடக்கமாக அனுமதி கேட்டுக் காத்திருந்து காத்திருந்து அடுத்த தீபாவளியே வந்துவிடும். தீபாவளிக்கு யாராவது விஷ் பண்ண வந்தால்கூட `ஒருத்தன் தூங்கிட்டிருக்க சொல்ல ஒரு கொசு வந்து `ஹேப்பி தீபாவளி'னு சொன்னா அந்தக் கொசு பெரிய ஆள் ஆகிடாது. ஒருநாள்... ஒரு நாள்'' என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பன்ச் டயலாக் பேசி கொலைவெறியூட்டுவார்.

இது, பாசப் பட்டாசு

வெடி வெடிக்க... அடம்பிடிக்க!ஒன்பது மணிக்காவது கண் விழித்து தீபாவளி கொண்டாடப்போகிறார் என எல்லோரும் ஆவலோடு காத்திருந்தால், காத்திருந்து காத்திருந்து பொறுமையாக தமிழ் வருடப் பிறப்புக்குத்தான் தயாராவார் இந்த வல்லவன் வம்பரசன். `நான் அப்படித்தாங்க... எனக்கு பட்டாசு வெடிக்கத் தெரியாதுங்க!' என அலும்பு பண்ணி, தனக்குத்தானே எலிமினேட் ஆகிவிடுவார். காலையில் இட்லி அவித்து வைத்துவிட்டு அப்பா எதுகை மொகனை `குங்ஃபூனா ஜெட்லி... தம்பி ரெடியாருக்கு இட்லி' எனப் பாசத்தோடு அழைப்பார். டைனிங் டேபிளில் வந்து அமர்ந்துவிட்டு `தெறிக்க விடலாமா' எனச் சாப்பிடும் இடத்திலும் தல ரெஃபரென்ஸ் போட்டு விசில் கிடைக்குமா என, குக்கர்போல் காத்திருப்பார். சென்டிமென்ட் விளையாடும் மன்மதன் வீட்டில் பட்டாசு தீர்ந்துவிட்டால் `அப்பா... என்னப்பா ஆச்சு பட்டாசுக்கு... எப்பப்பா வெடிப்பீங்க?' எனச் சோகமாகக் கேட்பார். அப்பா, தன் வாயாலேயே வெடிக்க ஆரம்பிப்பார். இது பாசப் பட்டாசு, இது மோசப் பட்டாசு... இது அன்புப் பட்டாசு!

புலிப் பட்டாசு!

வெடி வெடிக்க... அடம்பிடிக்க!பட்டாசுகள் எதுவாக இருந்தாலும் `அது அணில் மார்க் பட்டாசா எனக் கேட்டு வாங்கி பயன்படுத்துங்கள்' என்று அன்போடு கேட்டுக்கொள்வார் இந்த சிவகாசிப் புலி! நிறைய வெடிகள் வெடித்தாலும் எப்போதாவதுதான் ஒரு வெடி சத்தமாக வெடிக்கும். பல வெடிகள் சுமாராகத்தான் வெடிக்கும். சில புஸ்ஸாகிவிடும். அப்போது எல்லாம் போனை போட்டு `அச்சா கிதர்!' என முருகபாஸ் அட்ரஸ் கேட்பார். தன்னுடைய பக்கத்து வீட்டு தெலுங்கு, மலையாளம், இந்தி நண்பர் எப்படி தீபாவளியைக் கொண்டாடு கிறாரோ, அப்படியே அச்சு அசலாக தீபாவளிக் கொண்டாடுவதில் நம்ம புலி செம கில்லி. தெலுங்கு நண்பருக்குப் பல் வலி. அதனால் ஸ்வீட் சாப்பிடும்போது உய்ய்ய் எனக் கத்தினால், இவரும் ஸ்வீட் சாப்பிட உட்கார்ந்தால் உய்ய்ய் உய்ய் எனக் கத்துவார். ஒவ்வொரு தீபாவளிக்கும் புதுப்புது கெட்டப்புகள் புதுப்புது ஸ்டைல்கள் மாற்றிக்கொள்வதாக்ச் சொல்வார். ஆனால், 15 ஆண்டுகளாக எல்லா தீபாவளிக்கும் ஒரே கெட்டப்தான்.

சிகா...காய்!

வெடி வெடிக்க... அடம்பிடிக்க!தீபாவளி அன்றைக்கு மைக் மாதிரியான அளவில் ஒரு பட்டாசை கையில் வைத்துக்கொண்டு உயரமான இடத்தில் நின்றுகொண்டு ``என்னை தீபாவளி கொண்டாட விடாமத் தடுக்குறாங்க'' என, ஒரு ஜீவன் கதறி அழுதுகொண்டிருந்தால், அவர்தான் இவர். இந்த வருத்தப்படாத வாலிபர், தீபாவளி அன்றுகூட ஓய்வின்றி உழைக்கும் உன்னதமான காதலன். காதலி வீட்டு வாசலில்தான் இவருடைய தீபாவளி விடியும். பல்லுகூட துலக்காமல் போய், வாசலிலேயே காத்திருந்து, `வாடி என் திருமகளே... அப்பா பெத்த மருமகளே! ஹேப்பி தீபாவளி, இன்னைக்காச்சும் என்னைக் காதலி' என வாழ்த்தி டார்ச்சர் பண்ணுவார். அம்மா செய்த ஸ்வீட்டைச் சாப்பிட்டுவிட்டு `என்னம்மா... இப்படிப் பண்றீங்களேம்மா!' என நடனம் ஆடி மகிழ்விப்பார். யார் ஹேப்பி தீபாவளி சொன்னாலும் மிமிக்ரியில் விதவிதமான வாய்ஸ் பிடித்து, விஷ் பண்ணி மகிழ்வார் இந்தக் கஜினி முருகன்.

சங்கத்து வெடி!

வெடி வெடிக்க... அடம்பிடிக்க!வரலட்சுமி விரதம் இருந்து நாட்டாமையை ஓடவிட்டவர் `திமிரு' நாயகர். உள்ளூரில் தீபாவளி கொண்டாட மாட்டார் இந்த `சண்டக்கோழி'. புது டிரெஸ் எல்லாம் போட்டு நேராக தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல் என வருஷத்துக்கு ஒரு ஊரில் போய் இறங்குவார். அங்கே இருக்கும் தாதாவுக்கு எதிராக வெடி கொளுத்திப் போடுவார். கடுப்பாகி வரும் ரெளடியை புரட்டி எடுப்பார். உடனே அந்த தாதா மீண்டும் இவரைத் துரத்தி வந்து மீண்டும் அடிவாங்குவார். அப்படியே அந்த ஊர் பெண்ணை `தாவணி போட்ட தீபாவளி...' எனப் பாடிப்பாடி காதலித்துவிட்டு, அப்படியே அவரோடு நேராக சென்னை வந்து தலதீபாவளியைக் கொண்டாடுவார். பஞ்சபாண்டவர் அணியின் பவர் பாண்டியன், ஆண்டாண்டு காலமாக இப்படித்தான் தீபாவளி கொண்டாடுகிறார். ஊருக்குள் எந்தப் பட்டாசு வெடிக்கவில்லை என்றாலும், இவரிடம் போய் புகார் கொடுப்பார்கள். இவர் அந்தப் பட்டாசை வெடிக்கவைப்பதற்குப் பதிலாக, மைக்கைப் பிடித்து `என் பட்டாசுகூட இப்படித்தாங்க வெடிக்கலை...' என சென்டிமென்ட் செண்டு கொடுத்து கட்டிப்பிடித்துக் கதறி கம்ப்ளைன்ட் பாய்ஸையே கன்ஃபியூஸ் பண்ணுவார்.

ரப்பப்ப... பப்பபாம்..!

வெடி வெடிக்க... அடம்பிடிக்க!தீபாவளி வாழ்த்துகள் சொன்னாலும்.. `இதைச் சொல்லியே ஆகணும்!' என்றுதான் தொடங்குவார் இந்தச் சிங்கம் ஐ.பி.எஸ். பத்தி கொளுத்தினாலும், பட்டாசு வெடிப்பதாக இருந்தாலும் பெர்ஃபெக்ட்டாக வெடிக்க விரும்புவார். வெடிப்பதற்கு முன்னர் ஸீட்பெல்ட் போட்டுக்கொண்டு, இன்ஷூரன்ஸ் எடுத்துவிட்டு அப்பாவிடம் பெர்மிஷன் வாங்கிவிட்டுப் பாதுகாப்பாக வெடிக்கும் குட்பாய் ரகம். ``ரோட்ல பட்டாசு வெடிச்சுப் பார்த்திருப்ப, காட்ல பட்டாசுப் வெடிச்சு பார்த்திருப்ப, வானத்துல பட்டாசு வெடிச்சுப் பார்த்திருப்ப, மனுஷனே பட்டாசா வெடிச்சுப் பார்த்திருக்கியா... பார்த்திருக்கியா?'' என்று அதிரவைப்பவர்தான் இந்த அயன்மேன். தீபாவளிக்கு துணி எடுக்க அயன்மேன் ஒரு கடையைச் சொல்வார், அவருடைய தம்பி இன்னொரு கடையைச் சொல்வார், அயன்மேனின் மனைவி `சந்திரமுகி', இன்னொரு கடைதான் என ஸ்கெட்ச் போடுவார். அயன்மேனின் அப்பா மகாபாரதம் படிக்க ஆரம்பித்தால் மக்களே டொப்பு... டொப்பு என வெடித்துச் சிதறுவார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism