Published:Updated:

இந்தியாதான் கெத்து!

இந்தியாதான் கெத்து!
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாதான் கெத்து!

பு.விவேக் ஆனந்த்

இந்தியாதான் கெத்து!

பு.விவேக் ஆனந்த்

Published:Updated:
இந்தியாதான் கெத்து!
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாதான் கெத்து!
இந்தியாதான் கெத்து!

`கபடியில் நாங்கதான் கெத்து' என உலகுக்கு மீண்டும் உரக்கச் சொல்லியிருக்கிறது இந்தியா. 

``இந்த முறையும் இந்தியாதான் உலகக்கோப்பையை வெல்லும்'' என, தொடர் ஆரம்பிக்கும் முன்னரே சொன்னார் கேப்டன் அனுப்குமார். ஆனால், லீக் தொடரின் முதல் போட்டியிலேயே கொரியா இழுத்துப்பிடிக்க, இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் கடைசி நேரத்தில் கோட்டைவிட்டது இந்தியா.

`இந்த முறை கஷ்டம்தான், வீரர்களிடம் பழைய சுரத்து இல்லை. பார்த்துக்கிட்டே இருங்க இவங்க தேற மாட்டாங்க' என விமர்சனங்கள் எழ, அடுத்த போட்டியில் இருந்து எதிர் அணியை எழவேவிடாமல் புள்ளிகளை வாரிக் குவித்தது இந்தியா. ஆஸ்திரேலியா, வங்கதேசம், அர்ஜென்டினா, இங்கிலாந்து என மோதிய எதிர் அணிகள் அத்தனையும் சுமார் 30-60 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்ந்தன. எழுந்தது இந்தியா.

அரை இறுதியில் இந்தியா - ஈரான் அணிகள் மோதும் என்ற நிலை இருந்தபோது, லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி யாருமே எதிர்பாராதவண்ணம் புது என்ட்ரி கொடுத்தது தாய்லாந்து. உலகக்கோப்பையின் லீக் சுற்றில் ஒரு போட்டியில்கூடத் தோற்காத ஒரே அணி என வலிமையுடன் வளையவந்த கொரியாவை, அரை இறுதியில் கடுமையாகப் போராடி வீழ்த்தியது ஈரான். இன்னொரு பக்கம் தாய்லாந்தை 53 புள்ளிகள் வித்தியாசத்தில் வெறித்தனமாக விளையாடி வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.

சர்வதேச கபடி சம்மேளனம், இதுவரை அதிகாரபூர்வமாக மூன்றே உலகக்கோப்பை போட்டிகளைத்தான் நடத்தியிருக்கிறது. அதில் 2003, 2007-ம் ஆண்டுகள் நடந்த உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி களிலும் இந்தியாவும் ஈரானும்தான் மோதின.

`` `ஈரான் ஏன் இந்தியாவிடம் மட்டும் தோற்றுவிடுகிறது?' என எப்போதும் யோசிப்பேன். இந்தியா வந்த பிறகு அதற்கான விடை கண்டுபிடித்துவிட்டேன். கபடியில் விவேகத்தைக் காட்டிலும் அக்ரசிவ் மனப்பான்மை முக்கியம் என்பதை இந்தியாவில் ப்ரோ கபடியில் விளையாடியபோது கற்றுக்கொண்டேன். வரலாறு மாறும். ஃபைனலில் இந்தியாவை ஜெயித்துக்காட்டுவோம்'' என இறுதிப்போட்டிக்கு முன்னதாக பேட்டி கொடுத்தார் ஈரான் கேப்டன் மெரஜ் ஷேய்க். ஆனால் இந்தியாவின் அனுப்குமாரோ ``அமைதியாக இருக்கிறோம், நிச்சயம் ஜெயிப்போம்'' என சிம்பிளாகச் சொல்லியிருந்தார்.

இந்தியாதான் கெத்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிச்சயம் இது செம டஃப் ஃபைனல் என எல்லோரும் கணித்திருந்த மாதிரியே இறுதிப்போட்டி நடந்தது. ஃபைனலில் முதல் பாதி முழுக்க ஈரான் ராஜ்ஜியம்தான். ஆனால், இரண்டாவது பாதியைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டார் அஜய் தாக்கூர். இந்திய வீரர்கள் ஒன்பது புள்ளிகள் வித்தியாசத்தில் வென்று உலகக் கோப்பையை முத்தமிட்டனர். இக்கட் டான சூழ்நிலையில் அஜய்யின் தாவல்களால்தான் இந்தியா புள்ளிகளைக் குவிக்க முடிந்தது.

 இமாச்சலப்பிரதேசத்தின் தாபோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய். கபடி, மல்யுத்தம் இரண்டிலும் அஜய்யின் அப்பா கில்லி. சிறு வயதில் இருந்தே அப்பாவிடம் ரெய்டுக்குச் சென்று கபடி கற்றுக்கொண் டவர், ஊர்களில் நடக்கும் போட்டிகளில் தனி ஆளாக எதிரணியை ஆல் அவுட் ஆக்குவது வழக்கம்.

இறுதிப்போட்டி நடந்த அன்று காலையில் சக வீரர் மன்ஜீத்திடம் ``நான் இன்று தனி ஆளாக ஈரானை வீழ்த்திக்காட்டுகிறேன் பார்’’ எனச் சொல்லியிருக் கிறார் அஜய். பாதிப் போட்டி வரை இந்தியா பின்தங்கியிருந்தபோது, ஒற்றை ஆளாக தலைகீழாக மேட்சை மாற்றியது அஜய்தான். இறுதிப்போட்டி மட்டும் அல்ல, இந்தத் தொடர் முழுவதுமே அஜய் மாஸ் காட்டியிருக்கிறார். (64) ரெய்டு புள்ளிகளை எடுத்து, தொடர் நாயகனாக முத்திரை பதித்திருக்கிறார். அஜய் சக்சஸ்ஃபுல் ரெய்டராக  வலம்வருவதற்கு யார் காரணம் தெரியுமா? ஒரு தவளைதான். மழை வரும்போது அஜய்யின் வீட்டுக்குள் தவளை வந்துவிடுமாம். தவளைகளைத் துரத்துவது அஜய்யின் வேலை. தவளையின் தாவல்களைக் கவனித்தவர், அதை  கபடியில் செயல்படுத்தியிருக்கிறார்.

அணியின் கவனத்தைச் சிதைக்காமல் இறுதிவரை் போராடி கோப்பையை வெல்ல முக்கியக் காரணம் இந்திய அணியின் கேப்டன் அனுப்குமார்.  ``முதல் பாதியில் நாங்கள் புள்ளிகளை இழக்க பதற்றமும் ஒருவித பயமும்தான் காரணம். பதற்றத்தில்தான் தவறு செய்கிறோம், எந்தச் சூழ்நிலையிலும் இனி பயம், பதற்றம் வேண்டாம், இயல்பாகவே ஆடுவோம்’’ என இடைவேளையின்போது வீரர்களிடம் சொல்லியிருந்தேன். இரண்டாம் பாதியில் பயத்தையும் பதற்றத்தையும் ஈரான் வீரர்களுக்குக் கொடுத்தோம். வென்றோம்’’ என வெற்றிக்குப் பிறகு கூலாகச் சொன்னார் கேப்டன் அனுப்குமார்.

கலக்கிட்டீங்க பாய்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism