Published:Updated:

எந்திரமே... எதிர்காலமே!

எந்திரமே... எதிர்காலமே!
பிரீமியம் ஸ்டோரி
எந்திரமே... எதிர்காலமே!

அதிஷா

எந்திரமே... எதிர்காலமே!

அதிஷா

Published:Updated:
எந்திரமே... எதிர்காலமே!
பிரீமியம் ஸ்டோரி
எந்திரமே... எதிர்காலமே!

தொழில்நுட்ப வளர்ச்சி, அடுத்த பத்து ஆண்டுகளில் என்ன மாதிரியான எல்லைகளை எட்டியிருக்கும்? நம்முடைய வாழ்க்கைச் சூழல், எப்படி மாறப்போகிறது? உலகம் முழுக்க கோடிகளைக் கொட்டி நடந்துகொண்டிருக்கும் ஆராய்ச்சிகளில் இருக்கிறது இவற்றுக்கான விடை.

 டாக்டரைக் கூப்பிடு!

எந்திரமே... எதிர்காலமே!

ண்ட மருந்துகளையும் சாப்பிடுகிறோம். ஆனால், உள்ளே என்ன நடக்கிறது என நமக்கும் தெரியாது, டாக்டருக்கும் தெரியாது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கும் மாத்திரை, இதை எல்லாம் நமக்குத் தெரியப்படுத்தும். இந்த மைக்ரோ சிப் மாத்திரைகளை விழுங்கிவிட்டால் போதும், அது உடலுக்குள் சென்று எங்கு எல்லாம் சிக்கலோ அதைப் பற்றியச் செய்திகளை டாக்டருக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருக்கும். நோயாளி மாத்திரை மருந்துகள் உட்கொள்ளும்போது அது எப்படிச் செயல்படுகிறது என்ற தகவலையும் அனுப்பும். கிட்டத்தட்ட வயிற்றுக்குள் வாழும் நர்ஸ் போல! ஒருவேளை நாம் ஒழுங்காக மாத்திரை எடுத்துக்கொள்ளவில்லை என்றால், டாக்டரிடம் கோள்மூட்டவும் தவறாது இந்தக் குட்டி டாக்டர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அம்மா போன்ற கைப்பக்குவம்!

எந்திரமே... எதிர்காலமே!

`இதைச் சமைத்த கைக்கு, தங்கத்துல காப்புப் போடணும்’ என்று எல்லாம் இனி கொஞ்சத் தேவை இருக்காது.  `புரோகிராம் பண்ணிவிட்டால் வேண்டியதைச் சமைத்துக் கொடுக்கும் ரோபோ கைகள்தான் எதிர்காலத்தில் நமக்கு கஞ்சி ஊத்தும்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மோலி ரோபோட்டிக்ஸ் என்கிற நிறுவனம், அத்தகைய சமையல்கார ரோபோக்களை உருவாக்க ஆரம்பித்துள்ளது. ஏற்கெனவே ஒரு ரோபோ ருசியான நண்டு சூப் வைத்துக் காட்டி, உலக செஃப்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. `2017-ம் ஆண்டில் இந்த குக்கிங் ரோபோக்கள் விற்பனைக்கு வரும்’ எனச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு ரோபோவின் விலை ஜஸ்ட் ஒரு கோடி ரூபாய்! இந்த ரோபோவுக்கு, சமைக்கும்போதே கரண்டியில் குழம்பை அள்ளி நுனிநாக்கில் ருசி பார்க்கவும் மணம் பார்க்கவும் தெரியாது. நாம் சொல்லித்தந்ததை அப்படியே செய்து, விரும்பியதைச் சமைத்துத் தரும் வகையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் `நம்முடைய தேவையைப் புரிந்துகொண்டு உப்பு, காரம் பார்த்து உன்னதமாகச் சமைத்தும் கொடுக்கும் அளவுக்கு இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் வளரும்’ என்கிறார்கள்.

சட்டையில் `கபாலி’ படம்

எந்திரமே... எதிர்காலமே!

`கபாலி’ புகைப்படம் போட்ட டிஷர்ட் இப்போது அணிகிறோம். இன்னும் சில ஆண்டுகளில் `கபாலி’ படமே ஓடக்கூடிய டிஷர்ட்கள் நமக்கு மலிவான விலையில் கிடைக்கும். அப்படி ஒரு டெக்னாலஜியை, க்யூட் சர்க்யூட் என்ற லண்டன் நிறுவனம் உருவாக்கியுள்ளது. பார்க்க வெறும் சட்டைபோல இருந்தாலும், இதில் மைக்ரோ கேமரா, மைக்ரோ ஸ்பீக்கர், எல்இடி ஸ்க்ரீன் என எல்லாமே இருக்கும். வீடியோக்கள்கூட பார்க்கலாம். சட்டையில் இருந்தே ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டு, லைக் அள்ளலாம். இதை, electronic thread embroidery என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கிறார்கள். மனதுக்குள் `இதை எப்படித் துவைப்பது?’ எனக் கவலைப்படாதீர்கள்… அதற்கும் வழிவைத்திருப்பார்கள்!

 துரத்தி அடிக்கும் தோட்டா

எந்திரமே... எதிர்காலமே!

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்களுக்கு எடுப்பானது இந்தத் தோட்டா. அமெரிக்காவின் ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் டார்பா (Defense Advanced Research Projects Agency (DARPA)வின் பல ஆண்டுக் கனவு, இலக்குகளை விரட்டிச் சென்று தாக்கும் தோட்டா. துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட காலம் தொடங்கி தோட்டாக்கள் வெளியே வந்தால் ஒரே நேர்கோட்டில் மட்டும்தான் பயணித்துள்ளன. ஆனால் இந்த அமெரிக்கத் தோட்டா, இலக்குகள் எங்கு மறைந்து இருந்தாலும் வளைந்து திரும்பியும்கூடத் தாக்கும் வல்லமைகொண்டது. இதற்குப் பெயர் எக்ஸாக்ட்டோ (Extreme Accuracy Tasked Ordnance, or EXACTO). இதைப் பயன்படுத்த பெரிய துப்பாக்கிப் புலமை எதுவும் தேவை இல்லை. துப்பாக்கியை எடுத்து டார்கெட்டை ஃபிக்ஸ் செய்து அடித்தாலே போதும். தோட்டாவே எல்லா வேலைகளையும் பார்த்துவிடும். ஸ்னைப்பர்களில் பயன்படுத்தப்படும் இந்த 50 காலிபர் தோட்டாக்கள், இன்னும் ஆராய்ச்சியில்தான் இருக்கின்றன. ஏற்கெனவே 3டி பிரின்டர்களைக்கொண்டு துப்பாக்கிகள் உருவாக்க ஆரம்பித்திருக்கும் காலகட்டத்தில், இந்த வகைத் தோட்டாக்கள் மிகமிக ஆபத்தானவையாக இருக்கும்.

 காதுகளே மொழிபெயர்க்கும்

எந்திரமே... எதிர்காலமே!

உங்கள் காதுகளுக்குள் பாப்கார்ன் சைஸ் ஹெட்போன் ஒன்றைப் பொருத்திக்கொள்ள வேண்டும். அதை ஆன் செய்துவிட்டால் போதும், உலகில் யார் பேசினாலும் உங்களுக்குப் புரியும். ‘`யோவ், அதுக்கு காது கேட்டா பத்தாதா?’’ என்று டென்ஷன் ஆக வேண்டாம். இந்தக் கருவி உங்களுக்கு அருகில் இருக்கும் நபர் எந்த மொழியில் பேசினாலும் அதை நமக்குப் புரியவைக்கும். காதுக்கு வரும் எந்த ஒலியையும் மொழிபெயர்த்து நமக்குத் தெரிந்த மொழிக்கு மாற்றி கேட்கவைக்கும். இந்தத் தொழில்நுட்பம் இப்போதே வந்துவிட்டது. Waverly labs என்ற நிறுவனம் இதற்கான சோதனை வேலைகளில் இறங்கி உள்ளது. தமிழுக்கு எப்போ வருமோ?

பில்கேட்ஸ் மாத்திரை

எந்திரமே... எதிர்காலமே!

அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தில் நடக்கிறது இந்த ஆராய்ச்சி. இதற்கு ஸ்பான்சர் மைக்ரோசாஃப்ட்டின் பில்கேட்ஸ். சின்ன சிப் ஒன்றை இங்கே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சிப்பை உடலில் பொருத்திவிட்டு, வெளியே இருந்து ரிமோட் மூலம் சிக்னல் கொடுத்தால், அது வேலைபார்க்கத் தொடங்கும். இந்தத் தொழில்நுட்பம் எதற்குத் தெரியுமா? குடும்பக் கட்டுப்பாட்டுக்காக. இந்த சிப்பில் மிகச்சிறிய அளவுகளில் hormone levonorgestrel என்ற வேதிப்பொருள் இருக்கும். இந்த மருந்து, கர்ப்பத் தடை மருந்துகளில் பயன்படுத்தக்கூடிய ஒன்று. இது, விந்தணுக்கள் கருமுட்டையைச் சென்று அடைவதைக் கடினமாக்கி, கர்ப்பம் உருவாவதை தடுக்கும். இதுதான் இந்த சிப்புக்குள் இருக்கும் முத்து. இந்த சிப்பை, ஒரு பெண்ணின் உடலில் 16 ஆண்டுகளுக்கு வைத்துக்கொள்ள முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism