Published:Updated:

புலி ஆடு புல்லுக்கட்டு - தொடர் - 13

புலி ஆடு புல்லுக்கட்டு - தொடர் - 13
பிரீமியம் ஸ்டோரி
புலி ஆடு புல்லுக்கட்டு - தொடர் - 13

டாக்டர் ஆர்.கார்த்திகேயன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

புலி ஆடு புல்லுக்கட்டு - தொடர் - 13

டாக்டர் ஆர்.கார்த்திகேயன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
புலி ஆடு புல்லுக்கட்டு - தொடர் - 13
பிரீமியம் ஸ்டோரி
புலி ஆடு புல்லுக்கட்டு - தொடர் - 13

#கல்வி   
 
சிறந்த கல்வி என்றால், பின்லாந்தைக் காட்டுகிறார்கள். குறைந்த நேர வகுப்பறைப் பாடம், அதிக விடுமுறைகள், ஹோம்வொர்க் கிடையாது, முழுமையான சுதந்திரம், நிறைய விளையாட்டுக்கள் என, பொறாமைப்படும் அளவுக்கு முன்னேறி யிருக்கிறார்கள்.

சப்ஜெக்ட்டுகளைத் திறந்து கருத்துக்கள் சார்ந்த உரையாடல் வழிமுறையைப் பயன்படுத்துகிறார்கள். இதை phenomenon based learning என்கிறார்கள். `Subjects, விருப்பு - வெறுப்புகளை வளர்க்கிறது' என்று சொல்கிறார்கள். கொஞ்ச நேரம் புவிஈர்ப்பைப் பற்றிய அலசல், பிறகு நடனம், சிறிது நேரம்  அல்ஜீப்ரா கணக்கு, அப்புறம் ஷேக்ஸ்பியர் நாடகத்தை நடித்துக் காண்பித்தல், அதைத் தொடர்ந்து ஐரோப்பிய வரலாறு, பிறகு அடுத்த தொழில்நுட்பம் பற்றிய உரையாடல்... இப்படி நடத்தினால், யார் லீவு போடுவார்கள்?

முதலில் இந்தத் தேர்வைத் தடைசெய்து, கற்றுக்கொள்வதில் மட்டும் கவனம் செலுத்தினாலே கல்வி பிழைக்கும். ஒன்பதாவது தாண்டியவுடன் பிசாசைக் கண்டதுபோல் `டென்த்... டென்த்!' என அலறி, எல்லா extra curricular வகுப்புகளையும் நிறுத்தும் பெற்றோர்கள் உள்ள வரை, இவை எல்லாம் இங்கு சாத்தியமே இல்லை. ப்ளஸ் டூ படிப்பு ராணுவ முகாம்போல இரண்டு ஆண்டுகள் தீவிரப் பயிற்சி. இறுதியில் தீவிரவாதிபோல வெளியே வரும் மாணவன்/மாணவி, கல்லூரியின் முதல் செமஸ்டரிலேயே அரியர் வைப்பதில் என்ன வியப்பு?

புலி ஆடு புல்லுக்கட்டு - தொடர் - 13

#அறிவியல்

பயம் உள்ள இடத்தில் ஆசை வராது. படிப்பின் மேல் ஆசை வைப்பதற்குப் பதில் பயம் வைத்திருக்கிறோம். வெள்ளைக்காரன் வந்த காலம் முதல்.

`சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்ற குறள், நம்ம ஆள்தான் பூமி உருண்டை என உலகுக்குச் சொன்னவன் எனப் பறைசாற்றுகிறது. ஒருவேளை மற்ற செம்மொழிகளிலும் இதுபோன்ற ஆக்கங்கள் தென்பட்டிருக்கலாம். ஆனால், 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவும் பிறகு அமெரிக்காவும் முன்னெடுத்துச் சென்ற அறிவியல்தான், இன்று நமக்கு சோறு போடுகிறது.

தமிழனின் ஆதார குணமான பழைய பெருமை பேசுதல், இன்று நம்மை முச்சந்தியில் நிறுத்தியிருக்கிறது. சரி, பழைய வரலாற்று அறிவும் மொழி அறிவுமாவது உள்ளனவா என்றால், இன்று அவையும் இல்லை.

அறிவியல்கூட, படிப்புக்கும் பிழைப்புக்கும்தான். பெரிய கண்டுபிடிப்புகள் இங்கு இல்லை எனச் சொல்ல மாட்டேன். ஊக்கப்படுத்தப்படுவது இல்லை. நல்ல நடுத்தரப் பணியாளர்களை உருவாக்கிவருகிறோம். தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தால் ஒவ்வொரு கிலோமீட்டருக்கு ஒரு இன்ஜினீயரிங் கல்லூரி தெரிகிறது. அவற்றில் பல, அரண்மனைகள் போலவும் உள்ளன.

 #திறன்


பெருந்துயர் என்ன என்றால், பி.இ முடித்த பையன் 6,000 ரூபாய் சம்பளத்திலும், ஐ.டி.ஐ முடித்த பையன் 12,000 ரூபாய் சம்பளத்திலும் வேலைக்குச் செல்வதுதான். தேசிய திறன் வளர்ப்புக் கழகம், பல ஆயிரம் கோடிகள் செலவழித்து கடைநிலைப் பணியாளர்களுக்கு திறன்வளர்ப்பு செய்ய முன்வருகிறது. ஆனால், இங்கு dignity of labour கிடையாது. 15,000 ரூபாய் சம்பாதித்தாலும் ஓட்டுநரை வெளியே நிற்கவைப்போம். கைகளால் வேலைசெய்யும் ஆள் என்றால், மட்டமாகப் பார்க்கும் கலாசாரம் உள்ள வரை இந்த அவலநிலை தொடரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`ஆரண்ய காண்டம்' படம் எடுத்த இயக்குநர் ஏன் அடுத்த படம் எடுக்கவில்லை? ஃபிலிம் ஃபெஸ்ட்டிவலில் கடைசிக் காட்சியில் அந்த மோசமான தியேட்டரில் பெருங்கூட்டத்துடன், ஆனால், நம்ப முடியாத கனத்த மெளனத்துடன் அந்த அற்புதத்தைப் பார்த்தேன். ஆனால், பொதுஜன வெளியில் சுவடு தெரியாமல் மறைந்தது தமிழ் சினிமா ரசிகனின் நஷ்டம்.

புலி ஆடு புல்லுக்கட்டு - தொடர் - 13

#களம்

உற்பத்தித் திறனுக்கும் கலைத் திறனுக்கும் சம்பந்தம் இல்லை. புராஜெக்ட் மேனேஜ்மென்ட் போல பக்காவாக குறித்த நேரத்தில் சொன்ன கதையை அதிக சேதாரம் இல்லாமல் குறைந்த செலவில் எடுத்துக் கொடுக்கும் இயக்குநர்கள் தொடர்ந்து வெற்றிபெறுகிறார்கள். தொழில் செழிக்க இவர்கள் தேவை. தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மட்டும் இன்றி, பி அண்டு சி சென்டர்களில் சைக்கிள் ஸ்டாண்ட்காரர்கள் முதல் கேன்டீனில் பாப்கார்ன் விற்பவர்கள் வரை பிழைக்க, இவர்கள் அவசியப்படுகிறார்கள்.

ஆனால், அத்திப்பூத்தது போன்ற அற்புதப் படைப்புகளைத் தரும் கலைப் படைப்பாளிகள் பொருளாதாரரீதியாக லாபம் சம்பாதிப்பதும் இல்லை. இவர்களால் மற்றவர்களும் லாபம் சம்பாதிக்க முடிவதும் இல்லை. கலைநயமும் சந்தை அறிவும்கொண்டு middle ground-ல் விளையாடும் மணிரத்னம் போன்றோரே, அந்த sweet spot-யை நிரப்புகிறார்கள்.

தன் களம் எது எனத் தெரிவது, மிகப்பெரிய தற்காப்பு அறிவு.


 #நடை


போட் கிளப் பக்கம் வாக்கிங் போனால், கார்ப்பரேட் உலகின் பல பெரிய தலைகளைப் பார்க்கலாம். ஆனால், வடிவம் அற்ற உடலும் பதற்றமும் சிடுசிடுப்புமான முகமும் ஓர் அவசரத்துடனும் நடப்பார்கள். சிலர் தங்களின் திடகாத்திரமான நாயைப் பிடித்துக்கொண்டு ஓட முயற்சிப்பார்கள். கொழுப்பைக் கரைக்க பல வழிகளில் போராடுகிறார்கள்.

இளைஞர் பட்டாளத்துக்கு ஜிம் அல்லது ஜாக்கிங்தான் சாய்ஸ். மத்தியப் பிரதேசம் பெருப்பது, இன்று இருபதுகளுக்கும் உள்ள பிரச்னை. கேரளா போல கொழுப்பு வரி வந்தால் உதவுமா?

நீண்ட நேரம் உட்காருவதைத் தவிர்க்க முடியாது. நம் வேலைகள் நம்மை நாற்காலியுடன் ஒட்டவைத்துவிட்டன. ஆனால், ஆதாரப் பிரச்னை அதுதான். எங்கோ படித்தேன் இதை: Sitting is injurious to health. உட்காரும் நேரம் தவிர நிற்பதும் நடப்பதும் ஓடுவதும் குதிப்பதும் ஒரே தீர்வு.

10 அணி நேரம் உட்காருதல் என்றால், ஒரு மணி நேரமாவது ஸீட் ஸீட்டாகாமல் பார்த்துக்கொள்ளுதல் நலம். இல்லையென்றால், மருத்துவமனைகளும் ஆசிரமங்களும்தான் நலமாக இருக்கும்.

ஓ.எம்.ஆரில் போக்குவரத்து நெரிசலைப் பார்த்தால், விரைவில் ஐ.டி மக்கள் வண்டியை நிப்பாட்டிவிட்டு சாலையில் ஓடலாம். சீக்கிரமாக ஆபீஸ் போகலாம்... கொழுப்பும் குறையலாம்.

 ரன் மக்காஸ் ரன்!

அடுத்த வாரம் சந்திப்பதற்குள் ‘ரன் லோலா ரன்’ படம் பாருங்கள்.

ஹேப்பி ரன்னிங்!

- மற்றவை நெக்ஸ்ட் வீக்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism