Published:Updated:

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

Published:Updated:
உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!

உச்சி முதல் உள்ளங்கால் வரை

தலை முடி: வைட்டமின் சி - நோய் எதிர்ப்பு சக்திக்கு மட்டும் அல்ல... தலைமுடி, சருமம், நகத்தில் உள்ள கொலாஜன் என்கிற ஒருவகையான புரதம் உற்பத்திக்கு உதவுகிறது. ஃப்ரீ ராடிக்கல்ஸ் பாதிப்பு காரணமாக முடி பிளவுபடுதல், உடைதலைத் தடுக்கிறது. ஆரஞ்சு, புரோகோலி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. வைட்டமின் பி3, பி7, பி12, வைட்டமின் ஏ, இ, ஃபோலிக் அமிலம், இரும்பு, துத்தநாகம், மக்னீசியம், புரதம் உள்ளிட்டவை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு அவசியம்.

காலிஃபிளவர் - துவரம்பருப்பு சூப்


தேவையானவை: துவரம் பருப்பு - கால் கப், காலிஃபிளவர் - ஒரு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, பச்சைமிளகாய் - 3, மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், நசுக்கிய பட்டை, சோம்பு - சிறிதளவு, வெண்ணெய், சோள மாவு, அரிந்த புதினா இலைகள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

உணவு நல்லது வேண்டும்!

செய்முறை: துவரம் பருப்பைக் குழைய வேகவைக்க வேண்டும். காலிஃபிளவரை உப்பு கலந்த வெந்நீரில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்க வேண்டும். வாணலியில் வெண்ணெயைப் போட்டு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், காலிஃபிளவர், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி, நான்கு கப் நீர் விட்டு வேகவிட வேண்டும். பிறகு, காய்கறிகளை மத்தால் மசித்து, மிளகுத்தூள், சோள மாவுக் கரைசல், துவரம் பருப்பு, அரை கப் நீர் விட்டுக் கலந்து அடுப்பில் வைத்து ஓரிரு கொதி வந்ததும் மசாலா தூள், புதினா தூவி இறக்க வேண்டும்.

குறிப்பு: தக்காளியை வதக்கும் முன் மேல் தோலை உரித்துவிட்டு, அரிந்து வதக்க வேண்டும்.

பலன்கள்: புரதம், ஃபோலிக் அமிலம் நிறைவாக உள்ளதால், கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பிறக்கும் குழந்தையின் நியூரல் டியூப் பிரச்னைகளில் இருந்து காக்கிறது.  கோலின் நிறைந்துள்ளதால், தசை வளர்ச்சிக்கும் மூளை செல்களின் வளர்ச்சிக்கும் நல்லது. நினைவுத்திறனை மேம்படுத்தும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெள்ளை ஆப்பம்

தேவையானவை: அரிசி - அரை கிலோ, தேங்காய்த் துருவல் - சிறிதளவு, , வெல்லம் - சிறிய துண்டு, தண்ணீர், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் நீரில்  ஊறவைத்து, தேங்காய்த் துருவல், வெல்லம் சேர்த்து, அரைக்க வேண்டும். எட்டு மணி நேரம் மாவை நொதிக்கவைத்து, ஆப்பம் சுடலாம். தேங்காய்ப்பால், பால் சேர்த்துச் சாப்பிடப் பொருத்தமாக இருக்கும்.

உணவு நல்லது வேண்டும்!

பலன்கள்: மாவுச்சத்து, கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவு. பசி இருக்கும்போது சாப்பிட்டால் உடனடி சக்தி கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் அதிகம் சாப்பிடக் கூடாது. தேங்காய்ப்பாலுக்குப் பதிலாக பசும்பாலை ஊற்றிச் சாப்பிட்டால், கால்சியம் சத்து கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism