Published:Updated:

செல்லாது... செல்லாது!

செல்லாது... செல்லாது!
பிரீமியம் ஸ்டோரி
செல்லாது... செல்லாது!

ப.சூரியராஜ், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

செல்லாது... செல்லாது!

ப.சூரியராஜ், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
செல்லாது... செல்லாது!
பிரீமியம் ஸ்டோரி
செல்லாது... செல்லாது!
செல்லாது... செல்லாது!

‘இனி 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது' என ராவோடு ராவாக மோடி அறிவிக்க, `பக்கு'னு ஆகிடுச்சு நம் மக்களுக்கு. `சரி, எதுவா இருந்தாலும் தூங்கி எந்திரிச்சு நாளைக்குப் பாத்துக்கலாம்'னு போர்வையைப் போத்திப் படுத்தவர்களில் பலர் `இது நல்ல விஷயம்தானே!'னு மறுநாள் எழுந்து பாராட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

இந்த 500, 1,000 ரூபாய் நோட்டுக்களைத் தடைபண்ணின மாதிரி, வேற என்னென்ன விஷயங்களையும் `செல்லாது'னு தடைசெய்தால் நல்லா இருக்கும்?

நோ ஹிட்... ரோகித்து!

`ரோகித் சர்மா அடித்த இரண்டு  இரட்டைச் சதமும் செல்லாது'னு அறிவித்துவிட்டால், மகிழ்ச்சியோ மகழ்ச்சி மக்கழே! ஏன்னா, அந்த ரெண்டு சம்பவத்தை வெச்சுத்தான் இப்போ வரைக்கும் எவ்ளோ சொதப்பினாலும் மேட்சுக்கு மேட்ச்... மேட்ச் பண்ணிட்டு இருக்காப்டி நோ ஹிட் சர்மா!

போதும்... வலிக்குது... அழுதுருவேன்!

`இனி வடிவேலு போட்டோக்களைப் பயன்படுத்தி மீம்ஸ் போட்டால் செல்லாது'னு ஃபேஸ்புக்கை அறிவிக்கவைத்தால், தாறுமாறு தக்காளிச் சோறுதான். மார்க் ஸூக்கர்பெர்க்கிடம் எப்படியாவது இந்தப் போர்க்கால நிலைமையை எடுத்துச் சொல்லிப் புரியவைக்க முயற்சி பண்ணுவோம். அவர் சரிவரலைன்னா கடைசி அஸ்திரமா வடிவேலு படத்தைப் போட்டு, அவரையே கலாய்ச்சு நம்ம பசங்க போட்ட மீம்ஸை மெயில் பண்ணிவிட்ருவோம்.

அந்த மெயிலோடு சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு செல்ஃபிக்களுக்கு மேல் அப்லோடு செய்தால், அந்த அக்கவுன்ட்டே செல்லாமல் போகுமாறு செயல்படுத்தச் சொல்லி சோக ஸ்மைலி போட்டு ஒரு மெயில் தட்டிவிடலாம். இந்த செல்ஃபிபுள்ளைங்க தொல்லை தாங்க முடியலை மக்கா.

செல்லாது... செல்லாது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாட்சிக்கு சைஸைப் பாரு!

`இனி சின்னப்புள்ளைங்க சொல்ற சாட்சிகள், வீட்டு அளவில்கூட செல்லாது'னு பட்டப்பகலில் அறிவிச்சுடலாம். ஏன்னா, இந்த விஷப் பக்கிங்கதான் வீட்ல எடக்கு மடக்கா நம்மளைக் கோத்துவிட்டு நங்குநங்குனு மிதி வாங்கவைக்குதுங்க. `நாட்டாமை' படத்தில் எல்லோரது சாட்சியையும் `செல்லாது... செல்லாது...'னு சொல்ற விஜயகுமார், மாஸ்டர் மகேந்திரன் சாட்சியை மட்டும் ஏத்துக்குவார். அதனால, சம்முவத்துக்கும் தாய்க்கிழவி மவனுக்கும் இடையில் என்ன பிரச்னை வந்துச்சுனு நீங்களே பார்த்தீங்கள்ல!

இன்ஜினீயர்ஸ் மறுவாழ்வுத் திட்டம்

`2010-ம் ஆண்டுக்குப் பிறகு எழுதிய பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் செல்லாது'னு ஒரே ஒரு அறிக்கை விட்டால், பல லட்சம் பேருடைய புண்ணியம் அரசுக்குக் கிடைக்கும். ஏன்னா, இன்ஜினீயரிங் படிப்பால் அவ்ளோ பேர் வாழ்க்கை டிங் டிங் டிகானாவா ஆகிருக்கு. பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சைக்கு மறுபடியும் மாங்கு மாங்குனு படிச்சு ரெடியாகி, கலர் கலர் பேனாவால் எழுதி, நல்ல மார்க் வாங்கி இன்ஜினீயரிங்கைத் தவிர, வேற ஏதாவது கோர்ஸ் படிச்சு பிழைச்சுக்குவாங்க நம்ம பசங்க.

சண்டை போட்டுக்காதீங்கய்யா!

`யூ-டியூபில் தமிழ் சினிமா டீஸர், ட்ரெய்லர்களுக்கு வரும் பார்வைகள் மற்றும் லைக்ஸ் செல்லாது'னு அறிவித்தால் இந்த நாடு பொன்நாடு ஆகும்; தமிழ்நாடே டப்பாங்குத்து ஆடும். ஏன்னா, அந்தக் கணக்கை வெச்சுத்தான் கண்ணாபின்னானு ஒருத்தரை ஒருத்தர் கலாய்ச்சுக்கிட்டு இருக்காங்க தல - தளபதியன்ஸ். இந்தக் கணக்கு இல்லாட்டி, கம்முனு இருப்பாய்ங்கள்ல!

வாய் வெந்துபோச்சு!

`இனி ஹோட்டலில் கொடுக்கப்படும் வெண்பொங்கலில் ஐந்து மிளகுகளுக்கு மேல் இருந்தாலும், பிரியாணியில் கிராம்பு கிடந்தாலும் அந்த உணவு செல்லாது'னு அறிவிச்சுடலாம். பிரியாணியில் இருக்கும் அறுசுவையும் நாக்குல நடமாடும்போதுதான் இந்தக் கிராம்பு வந்து காலை வாரிவிட்டுப் போயிடுது. ச்சே!

சரண்யா அம்மா!


`இனி லூஸு அம்மா வேடங்களில் சரண்யா நடித்தாலும், போலீஸாக கணேஷ் வெங்கட்ராம் நடித்தாலும் அந்தப் படமே செல்லாது'னு சொல்லிடலாம். எத்தனை தடவைதான் நாங்களும் புதுசா பார்க்கிற மாதிரியே பார்க்கிறது? முடியலை ஹோய்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism