#சீனர்கள்

பிரபல யோகா ஆசிரியர் கவுஸ்துப் தேசிகாச்சாரியிடம் பேசிக்கொண்டிருந்தேன். சீனா, தென்கொரியா போன்ற நாடுகளுக்குச் சென்று யோகா வகுப்புகளும் உரைகளும் நிகழ்த்திவந்த அனுபவத்தைப் பகிர்ந்தார்.

``சீனர்கள், எதைச் செய்தாலும் உளமாரச் செய்கிறார்கள்'' என்றார். நகர பூங்காக்களில் டேபிள் டென்னிஸ் பலகைகளும் உடற்பயிற்சி சாதனங்களும் பொதுமக்களுக்கு இலவசமாக அளித்திருக்கிறது சீன அரசு. ஒரு பலகை உடைந்தாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் புதுப் பலகை மாற்றிவிடுகிறதாம் நிர்வாகம்.

எந்த ஒரிஜினல் பொருளைக் காண்பித்தாலும் மூன்றே நாட்களில் அதேபோல் உள்ள நகலைக் கொண்டுவருவதில் சீனர்கள் கில்லாடிகள். காப்பியடித்தாலும் எதையும் சிரத்தையாகச் செய்கிறார்கள். `ஒரிஜினல் விஷயத்தைக்கூட நாம் ஏனோதானோ எனச் செய்கிறோமோ!' எனத் தோன்றியது எனக்கு. அர்ப்பணிப்பு உணர்வு இல்லாத பணி, எப்படி சிறப்பாக இருக்க முடியும்?

இந்த அர்ப்பணிப்பு, தியாகம் எல்லாம் ரொம்ப ஓல்டு ஃபேஷன் ஆகிவிட்டன. இன்னொருத்தருக்காக தன் நலத்தை விட்டுத்தருதல் என்பது, இன்று இளசுகள் பார்த்திராத ஒன்று.

#அம்மா

அன்று கறுப்பு-வெள்ளைப் படங்களில் குடும்பம்தான் பிரதானம். குடும்பத்துக்காக வேலையை, காதலை, நட்பை, செல்வத்தை விட்டுக்கொடுத்தல் என்பதை, படத்துக்குப் படம் பார்க்கலாம். இன்றைய படங்களில் குடும்பமே முழுசாகக் கிடையாது. தனிநபர்களைப் பற்றித்தான் படங்கள். எம்.ஜி.ஆர்., ரஜினி வரை தாய்ப்பாசம் பற்றி பாடலாவது வந்தது. இன்று கலைத்தாய் காமெடி ஆகிவிட்டாள். கதாநாயகியைப் போலவே கொஞ்சம் லூஸாக, `டேய்... டேய்... இந்தப் பொண்ணு சூப்பர்டா! இவளை எப்படியாவது கட்டிக்கோடா' எனச் சொல்லும் லெவலுக்கு வந்துவிட்டாள். தாயின் உணர்வுப் போராட்டம் எல்லாம் பெரிய திரையில் கிடையாது. சின்னத்திரையில் ஒவ்வொரு தாயும் வேறு ஒரு குடும்பத்துக்கு வில்லியாக வலம்வருதல் நியதி.

அம்மாவைப் புரிந்துகொள்ள, பிள்ளைகளுக்கு அவள் வாழும் காலத்தில் நேரம் இருப்பது இல்லை. அம்மாவின் தியாகங்கள், பிள்ளைகளுக்குப் புரிவது இல்லை. குறிப்பாக மகன்களுக்கு.

#மகன்

‘பெத்த மனம் பித்து... பிள்ளை மனம் கல்லு’ என்ற பழமொழியை யோசித்தால், நிறைய உளவியல் உண்மைகள் புரியும். தாய் இதயத்தாலும், பிள்ளை மூளையாலும் இயங்கும்போது வரும் துயரம்தான் அது. நாம், நம்மை நேசிப்பவர்களைத்தான் அதிகம் காயப் படுத்துகிறோம் என்பதுதான் குரூர உண்மை. எல்லாம் கொடுத்துவிட்டு எதையும் எடுக்க முடியாத நிலையிலும் பிள்ளைக்காக மட்டும் யோசிக்கும் தாய் உள்ளம் புரியாமல் வாழும் யாரும் ஆன்மிகத்தில் கரை சேர முடியாது.

`அம்மாக்களின் மேல் மகன்களின் ஆதிக்க உணர்வு, பாலுணர்வு சார்ந்தது' என சிக்மண்ட் ஃபிராய்டு சொன்னபோது, அவரை வக்கிரப் புத்திக்காரராக மதவாதிகளும் பெண்ணிய வாதிகளும் சாடினர். அப்பாவின் பிடியில் உள்ள அம்மாவின் மீது உள்ள ரகசிய காம உணர்வையும் அதில் இருந்து மீள்வதையும் `இடிபஸ் காம்ப்ளெக்ஸ்' என்றார்.

#இடிபஸ்

ஃபிராய்டின் தந்தை, இரண்டாம் மணம் புரிந்தவர். `இளவயது சிற்றன்னையின் தாய்ப் பாசத்தில் காமத்தைக் கண்ட ஃபிராய்டு, தன் கதையைத்தான் எல்லா சைக்கோ அனாலிசிஸ் தியரிகளிலும் திரிக்கிறார்' என்று ஏகக் குற்றச் சாட்டு. ஆனால், கிரேக்க இதிகாசத்தில் தாய்-தந்தையை இழந்த இடிபஸ், பிற்காலத்தில் ஒரு போரில் எதிரியை வென்று அவன் மனைவியை மணக்கிறான். பின்னர்தான் தெரியவந்தது வென்றது தந்தையை, மணந்தது தாயை என்று. விரக்தியில் தற்கொலை செய்துகொள்கிறான். ஆக, இந்தக் கருத்தாக்கம் கிரேக்க இதிகாசத்தில் உள்ளது என்றால், இந்த உளச்சிக்கல்கள் மனிதகுலத்துக்கே பொதுதானே என்று வாதிடுவர் உளப்பகுப்பாளர்கள்.

ஆனால் ஒன்று, மாமியாருக்குத்தான் மருமகளுடன் பிரச்னை. மாமனாருக்குத்தான் மருமகனுடன் பிரச்னை. ஏன் என்று யோசியுங்கள். ஃபிராய்டு, வானுலகில் இருந்து உங்களைப் பார்த்துச் சிரிப்பார்.

#ஷோலே

அம்மாவின் அன்புக்காகச் சண்டையிடும் புதல்வர்களாக அமிதாப்பும் சஷி கபூரும் `தீவார்’ படத்தில் நடித்திருப்பார்கள். அதில் தம்பி பேசும் `மேரா பாஸ் மா ஹை' (எங்கிட்ட அம்மா இருக்காங்க) வசனம், மகனின் ஆதிக்க வெற்றியைப் பறை சாற்றும்.

1976-ம் ஆண்டில் பட்டையைக் கிளப்பிய இந்திப் படம் ‘தீவார்’. (பிறகு, இங்கு தமிழில் ரஜினி நடித்து ‘தீ’ என்று வந்துபோனது). அதே வருடம் இன்னோர் இந்தி படம் வந்தது. இந்தியப் பட வரலாற்றையே புரட்டிப்போட்டது. அது `ஷோலே'.

தாய் அன்புக் குறைபாடுதான், ஒரு குழந்தையை பின்னாளில் குற்றவாளியாக மாற்றுகிறது என்ற தியரியை முன்வைத்தவர் பவுல்பி என்கிற உளவியலாளர். எனக்கு இதில் நிறைய உடன்பாடு உண்டு. ஒரு தாயின் தொடுதலும், நிபந்தனை இல்லாத அன்பும், எல்லா குறைகளுடனும் பிள்ளையை ஏற்றுக்கொள்ளும் தன்மையும், தியாகமும், மன்னிக்கும் மனமும் ஒரு பிள்ளையை உணர்வுரீதியில் பக்குவப்படுத்திவிடும்.

ஒரு தாய் பல உறவுகளையும் சிக்கலான சூழ்நிலைகளையும் ‘புலி ஆடு புல்லுக்கட்டு’ விளையாட்டைப் போலத்தான் சமாளிக்கிறாள். ஆற்றின் இக்கரையில் இருந்து ஒரு புலி, ஒரு ஆடு, ஒரு புல்லுக்கட்டு மூன்றையும் சேதாரம் இல்லாமல் ஒவ்வொன்றாக அக்கரைக்குச் சேர்ப்பது எப்படி? இதைத்தான் தினசரி வாழ்வில் செய்கிறாள் தாய்.

அம்மாவைப் படிக்காமல் உலகில் எதைப் படித்து என்ன பயன்? அம்மாவே ஓர் உலகம்தானே?

#சந்திப்போம்

அம்மா சென்டிமென்ட்டில் இந்த வாரப் படம் ஓட்டியாச்சு. ஜென் Z-க்கு எழுதியதை X, Y தலைமுறைகளும் படிப்பதாகச் சொன்னார்கள்.

இரண்டு மணி நேர சினிமா யுகத்தில், 15 வாரங்கள் பரபரப்பாகப் பேசியாச்சு. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இன்டெர்வல் பிளாக் வருவதுபோல நம் அரட்டைக்கு ஓர் இடைவேளை.

ஸீ யூ சூன்!

(குட் பை)