Published:Updated:

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

தக்காளி - கேரட் சூப்

உணவு நல்லது வேண்டும்!

தேவையானவை: நறுக்கிய தக்காளி - 2, கேரட், பெரிய வெங்காயம் - தலா ஒன்று, நறுக்கிய புதினா இலைகள் - 2 டீஸ்பூன், பிரியாணி இலை - ஒன்று, பால் - 1/4 டம்ளர், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு - 2 டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.

செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து, வெண்ணெய்யைப் போட்டு சூடானதும் வெங்காயம், கேரட் போட்டு வதக்க வேண்டும். பின்னர், தக்காளியை வதக்கி, பிரியாணி இலையைச் சேர்த்து இரண்டு கப் நீர் விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பிறகு அதை இறக்கி, ஆறியதும் பிரியாணி இலையை எடுத்துவிட்டு அரைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீருடன் பால், மிளகுத்தூள், சோள மாவைக் கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும், புதினா இலைகளைத் தூவி இறக்க வேண்டும்.

பலன்கள்:
வைட்டமின் ஏ, சி, இ, கே, பொட்டாசியம், ஃபோலேட், இரும்புச்சத்து, தாமிரம் மற்றும் மக்னீசியம் நிறைந்தது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் வராமல் காக்கிறது. கேரட்டில் உள்ள கரோட்டினாய்ட்ஸ், பார்வைத்திறனை மேம்படுத்தும். சருமத்துக்கும் கூந்தலுக்கும் நல்லது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தக்காளி இட்லி

உணவு நல்லது வேண்டும்!

தேவையானவை: இட்லி - 3, நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா 1, வெல்லப்பாகு, இஞ்சி, பூண்டு, இஞ்சி-பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி இலை - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு, இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளித் துண்டுகளைச் சேர்த்து மீண்டும் வதக்கி, நன்றாக மசாலா போல தயார்செய்யவும். இதில், சிறிது அளவு வெல்லப்பாகைச் சேர்க்க வேண்டும். இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கி, மசாலாவுடன் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.

பலன்கள்: தக்காளியில் வைட்டமின் பி6, கே, இ, பொட்டாசியம் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவு இது.

கார்போஹைட்ரேட்!

சமீபகாலமாக `கார்போஹைட்ரேட்' எனப்படும் மாவுச்சத்து தொடர்பான தவறான நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன. உண்மையில், மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட ‘சிம்பிள் கார்போஹைட்ரேட்டுதான்’ உடலுக்குக் கெடுதல். முழுதானியம் போன்ற நார்ச்சத்து, ஊட்டச்சத்து நிறைந்த, கிளைசமிக் இண்டெக்ஸ் குறைவான, குறைவாகச் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த உணர்வைத் தரும் ‘காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்’ உணவுகள் உடலுக்கு நல்லது.
 
காம்ப்ளெக்ஸ் (நல்ல) கார்போஹைட்ரேட்: முழுதானியங்கள், பட்டை தீட்டப்படாத அரிசி, பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவை.

சிம்பிள் (கெட்ட) கார்போஹைட்ரேட்:
சர்க்கரை, குளிர்பானங்கள், மைதாவில் தயாராகும் உணவுப் பொருட்களான பரோட்டா, சாக்லேட், கேக், பிஸ்கட், பீட்சா போன்றவை.

உணவு நல்லது வேண்டும்!