Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 23

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 23
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 23

ம.செந்தமிழன் - படம்: வி.பால் கிரேகோரி - ஓவியம்: ஹாசிப்கான்

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 23

ம.செந்தமிழன் - படம்: வி.பால் கிரேகோரி - ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 23
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 23
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 23
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 23

`இந்தியாவில் காலரா நோயின் தீவிரம் அதிகமாக உள்ளது. காலரா மரணங்களும் பாதிப்புகளும் முழுமையாக அறிவிக்கப்படுவது இல்லை. காலரா பாதிப்புகள் குறித்து வெளியிடப்படும் புள்ளிவிவரங்கள், உண்மையான நிலவரத்தைக் காட்டிலும் குறைவானவை. கொல்கத்தாவில் மட்டும் 1,000 பேரில் 2.2 நபர்கள் என்ற விகிதத்தில் காலரா பாதிப்பு உள்ளதாக புள்ளிவிவரம் இருக்கிறது. இதே கணக்கை இந்தியாவின் காலரா தாக்கம் உள்ள எல்லா பகுதிகளுக்கும் பொருத்தினால், எவ்வளவு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.’

மேற்கண்ட வாசகங்கள் அடங்கிய மிக நீண்ட ஆய்வு அறிக்கையை இந்திய மருத்துவ ஆய்வு இதழ் (Indian Journal Of Medical Research) வெளியிட்டுள்ளது. மருத்துவ உலகில், இது ஓர் அதிகாரபூர்வமான இதழ். இதற்கும் மரபு மருத்துவ ‘பிற்போக்குவாதிகளுக்கும்’ எந்தவிதமான உறவும் இல்லை.

இதே ஆய்வு அறிக்கையில், காலரா மரணங்கள் குறித்த புள்ளிவிவரப் பட்டியலும் உள்ளது. 1997-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரையிலான காலத்தில், தமிழ்நாட்டில் காலராவால் இறந்தோர் / பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அந்தப் பட்டியலில் உள்ளது. இந்திய அளவில், காலரா மரணங்கள் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் ஆகிய மூன்றும் போட்டி போடுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்திய மருத்துவ ஆய்வு இதழ் அறிக்கை இன்னொரு கருத்தையும் முன்வைக்கிறது... ‘ஒரு பகுதியில் காலரா பரவினால், அதே பகுதியில் தொடர்ந்து நீடிக்கிறது. காலரா தாக்கம் உள்ள பகுதிகளில் ஐந்து ஆண்டுகள் ஆய்வுசெய்தோம். ஐந்தில் மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்து காலரா பாதிப்பு நீடிப்பதைக் கண்டோம். அதாவது, எங்கு காலரா பாதிப்பு உருவாகிறதோ... அங்கேயே அந்த நோய் நீடிக்கிறதே தவிர, ஒழிவது இல்லை.’

நவீன மருத்துவத் துறையின் சீர்கேடுகளைப் பற்றி மக்களிடையே உரையாடும்போது எல்லாம், என் போன்றோர் எதிர்கொள்ளும் கேள்விகளில் முதன்மையானது... ‘காலரா போன்ற மோசமான நோய்களை நவீன மருத்துவம்தானே ஒழித்தது?’ என்பதாகும். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது அல்ல என் நோக்கம். இதன் பின்னால் இருக்கும் அறியாமையை அகற்றி, உண்மையான நலவாழ்வை சமூகத்தில் பரவச் செய்வதற்காக இது குறித்த சில தகவல்களைப் பகிர்கிறேன்.

மேற்கண்ட ஆய்வு அறிக்கை மட்டும் அல்ல, உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் இந்தியாவில் காலராவின் தாக்கம் அதிகமாக இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளது. அந்த அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள காலரா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் இது...

2000 – 2004 : 6,76, 651 பேர்.

2004 - 2008 : 8,38, 315 பேர்.

இவை தவிர, தோராயமான கணக்குகளின்படி உலகம் எங்கும் 30 லட்சம் முதல் 50 லட்சம் பேர் வரை காலரா பாதிப்பில் இருக்கிறார்கள். இவர்களில் ஏறத்தாழ 1.5 லட்சம் பேர் இறந்து போகிறார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் காலரா பாதிப்பால் மரணமடைவோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த விவரங்கள் எல்லாம் 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்டவை. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த மரணக் கணக்கு இன்னும் உயர்ந்திருக்கும். ஏனெனில், காலராவின் தாக்கத்தை மருந்துகளால் குறைக்க இயலாது என்பதையும் உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொள்கிறது.

`காலரா போன்ற கொடிய நோய்களில் இருந்து மனிதகுலத்தைக் காப்பாற்றியதே நாங்கள்தான்’ என்ற வசனத்தை அரங்கேற்றும்போது எல்லாம் நவீனர்கள் இரு உண்மைகளை மென்று விழுங்கிவிடுகின்றனர்.
ஒன்று, இந்தியாவில் காலரா பரவிய அனைத்துப் பகுதிகளிலும் தொழிற்சாலை களாலும், நகரமயமாக்கலாலும் மக்களது வாழ்க்கைமுறை சீரழிந்திருந்தது.

இரண்டு, எந்தக் காலத்திலும் காலரா நோய் மருந்துகளால் ஒழிக்கப்படவில்லை. வாழ்க்கைமுறை மாற்றத்தால் மட்டும்தான் காலரா போன்ற நோய்கள் விலகிச் சென்றன.

இந்த இரு உண்மைகளையும் மக்களிடையே அறிவித்துவிட்டால், நவீனர்களுக்குப் பெரும் இழப்புகள் ஏற்படும். ‘நாங்கள்தான் உங்களைக் காக்கும் தேவதூதர்கள்’ என்ற மாயை விலகத் தொடங்கும். இப்போதைய பெருநிறுவனங்களின் மீதும் அவர்களுக்குக் கோபம் வரும். எல்லாவற்றுக்கும் மேலாக, வாழ்வியல் மாற்றத்தை நோக்கி மக்கள் கூட்டம் பயணித்தால், மருத்துவத் துறையின் அடித்தளமே ஆட்டம் காணும். ஆகையால், இந்த உண்மைகளை மறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

`19-ம் நூற்றாண்டில் இந்தியாவை காலரா தாக்கியபோது, ஐரோப்பியர்களும் செல்வந்தர்களும் அதிகம் பாதிக்கப்படவில்லை. குடிசைவாசிகள்தான் மிக அதிகமான எண்ணிக்கையில் இறந்துபோனார்கள்’ என்பது வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட தகவல்.

காலரா பாதிப்புகள் உருவாகத் தொடங்கிய காலம் இந்தியாவின் உள்நாட்டு மருத்துவ முறைகளை இங்கிலாந்து அரசு ஒடுக்கிய காலம் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். காலரா மரணங்களுக்கும் நவீன மருத்துவத் துறையின் ஆதிக்கத்துக்கும் உள்ள உறவை, நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 23

1824-ம் ஆண்டு முதன்முதலில் நவீன மருத்துவப் பள்ளி கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. அப்போது, இந்திய உள்நாட்டு மருத்துவர்களையும் மருத்துவப் பள்ளி ஆசிரியர்களாகச் சேர்த்துக் கொண்டனர். அவர்கள் ‘நாட்டு மருத்துவர்கள்’ (Native Doctors) என்ற தனி அடையாளத்துடன் அங்கீகரிக்கப்பட்டனர். 1833-ம் ஆண்டு, அப்போதைய இந்திய ஆட்சியராக இருந்த வில்லியம் பென்டிங் என்பவர், நாட்டு மருத்துவர் எனும் அங்கீகாரத்தை ரத்துசெய்தார்.

`ஆங்கிலம் மட்டுமே மருத்துவ மொழியாக இருக்க வேண்டும். நவீன மருத்துவம் மட்டுமே அரசின் அதிகாரபூர்வமான மருத்துவமுறையாக இருக்கும்’ ஆகிய இரு கட்டுப்பாடுகளையும் வில்லியம் பென்டிங் விதித்தார்.

பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தையும் இறையியலையும் போற்றி வளர்த்து, நோய்களைப் புரிந்துகொண்டு மருத்துவம் பார்த்துவந்த மரபுகள் யாவும் சட்டவிரோதமானவையாகச் சித்தரிக்கப்படும் கொடுமை ஆரம்பமானது.

லட்சக்கணக்கான மக்கள் காலராவின் பேரால் பலியான வரலாறு, இந்தியாவில் 1816-ம் ஆண்டு தொடங்கியது. இந்தியாவின் மரபு மருத்துவங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டதும், காலராவால் லட்சக்கணக்கானோர் மரணம் அடைந்ததும் ஒரே காலத்தில் நிகழ்ந்தவை என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள்.

அந்தக் காலத்தில் கிராமங்களில் வாழ்ந்த மக்களை, நகரங்கள் நோக்கி விரட்டியது பிரிட்டனின் கிழக்கு இந்திய நிறுவனம். நவீனர்களின் மொழியில் சொல்வதானால், அது `தொழிற்புரட்சி’க் காலம். தொழிற்சாலைப் பணியாளர்களாக நகரங்களுக்குத் துரத்தப்பட்ட மக்கள்தான், பெருவாரியாக காலரா நோயினால் இறந்தார்கள்.

1869 – 71 ஆண்டுகளில், சென்னை மாகாணத்தில் மட்டும் காலராவால் இறந்தோர் ஒரு லட்சம் பேர். 1876-ம் ஆண்டில் 1,48,193 பேரும், 1895-ம் ஆண்டில் 94,546 பேரும் மரணம் அடைந்தனர். இதே காலத்தில் பஞ்சமும் தலைதூக்கியதால், சென்னை மாகாணத்தின் ஏழை-எளியோரும் லட்சக்கணக்கில் செத்து விழுந்தனர். 1871-ம் ஆண்டு மட்டும் இறந்தோர் எண்ணிக்கை ஏறத்தாழ 3.5 லட்சம் என புள்ளிவிவரங்கள் குறிக்கின்றன.

`அப்போதைய மக்களுக்கு நல்ல குடிநீர்கூட இல்லாமல்போனதுதான், காலரா மரணங்களுக்கான மிக முக்கியக் காரணம்’ என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

‘இந்தியா முழுவதும் சுற்றி வந்தேன். அங்கு வாழும் மக்கள் செழிப்புடனும் தற்சார்புத் தன்மையுடனும் வாழ்கிறார்கள்’ என்று பிரிட்டன் ஆட்சியாளர்களில் ஒருவரான மெக்காலே வயிற்றெரிச்சலுடன் பதிவுசெய்த நாட்டின் மக்கள், நல்ல உணவும் நீரும் இல்லாமல் செத்துக்கொண்டிருந்தனர்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 23

காலரா மரணங்களின் வரலாற்றைப் படித்துப் பாருங்கள். நவீன மருத்துவத் துறையினரின் எந்தச் சாகசமும் அந்த மரணங்களைத் தடுக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள். அமெரிக்காவில் வாழ்ந்த நவீன மருத்துவ வல்லுநர் டாக்டர் கோலுப் ஒரு நூல் எழுதினார். ‘மருந்துகளின் எல்லை’ (The Limits Of Medicine – Dr. Golub, ph.d.,) என்பது அந்த நூல்.

‘காலரா போன்ற கொள்ளை நோய்களை ஒழித்ததில், நவீன மருத்துவத் துறைக்குப் பெரிய பங்கு இல்லை. அந்த நோய்கள் எல்லாம் மக்களின் வாழ்க்கைநிலை சீரழிந்ததால் உருவாகின. எப்போது அவர்களுக்கு நல்ல இருப்பிடம், தூய குடிநீர், தரமான உணவு ஆகியவை கிடைத்தனவோ அப்போது கொள்ளை நோய்களும் விலகிச் சென்றன’ என்கிறார். இந்தச் சேதியை அவர் மிக விளக்கமாகப் பதிவுசெய்துள்ளார். நான் அதன் சுருக்கத்தைக் குறிப்பிட்டுள்ளேன். அவர் நவீன மருத்துவத்தைப் போற்றியவர்தான். ஆனாலும், இவ்வாறான உண்மைகளையும் பதிவுசெய்தார்.

இந்தியாவின் கிராமங்கள் சூறையாடப்பட்டு, நகரங்களுக்கு மக்கள் துரத்தப்பட்ட நிகழ்வுகளில் `காலரா' எனும் கிருமி உருவானது. ஆட்டு மந்தைகள்போல, குடிசைகளில் அடைக்கப்பட்ட நம் முன்னோர் சிந்திய கண்ணீரில் காலரா கிருமிகள் வளர்ந்தன. மலம் கழிக்க இடம் இல்லை, நல்ல உணவு இல்லை, சுவாசிக்க தூய காற்று இல்லை, தாகம் தணிக்க நீர் இல்லை, இரவிலும் ஓய்வு இல்லை, மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்கும் சுதந்திரம் இல்லை என்ற அடிமைத்தனத்தின் வெம்மையில் அந்தக் கிருமிகள் வெடித்துப் பரவின.

ஆப்பிரிக்க நாடுகள், சீனா, இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்களைப் பலிவாங்கியது காலரா. நன்றாக உற்றுநோக்கினால், இந்த நாடுகள் அனைத்தும் ஐரோப்பிய காலனி நாடுகள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். பிரிட்டனிலும் காலரா கால்பதித்து ஆட்டம்போட்டது. டாக்டர் கோலுப் எழுதிய அந்த நூலில், ‘பிரிட்டனில் வாழ்ந்த தொழிலாளர்களும் ஏழைகளும்தான் காலராவால் அதிகம் பாதிக்கப்பட்டனர்’ என்ற தகவல் உள்ளது. எல்லா நாடுகளிலும் இதுதான் நிலைமை. செல்வந்தர்களையும் சீமான்களையும் கொல்லாத காலரா, ஏழை எளியோரைக் குறிவைத்துக் கொன்றது.

இப்போதும், சென்னை, கடலூர் போன்ற `தொழில்’ நகரங்களில் வாழும் மக்கள்தான் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். தொழிற்சாலைகளை அனுமதித்த எல்லா ஊர்களிலும் குடிநீர், காற்று, உணவு, உறைவிடம் ஆகிய அடிப்படைத் தேவைகள் சீரழிகின்றன. பின்னர், காலரா உள்ளிட்ட பலவகையான நோய்கள் அங்கு வாழும் மக்களைத் தாக்குகின்றன. நவீன மருத்துவ நிறுவனங்கள், அங்கு சேவையாற்றுகின்றன. நோய்கள் ஒழிவதும் இல்லை; மருந்துகளின் விற்பனை குறைவதும் இல்லை.

நோய்களும் நவீன மருத்துவமும் பிரிக்க இயலாத இரட்டையர்கள். இந்த இரட்டையரைப் பெற்று வளர்ப்பவை, பெருநிறுவனங்கள். மரபுவழிப்பட்ட வாழ்வியலைச் சிதைத்து, மக்களை நோயாளிகளாக்குவதும், பின்னர் அவர்களிடம் மருந்து விற்பதும் நூற்றாண்டு கண்ட தொழில்நுட்பங்கள்.

எல்லா நோய்களில் இருந்தும் விடுதலை அடைவதற்கான ஒரே வழி, நமது மரபு வாழ்வியலுக்குத் திரும்புவதுதான். இந்தச் சமூகம் அவ்வாறு திரும்பிவிட்டால், பெருநிறுவனங் களுக்குத் தொழிற்சாலை அமைக்க இடம் கிடைக்காது; பணியாற்ற அடிமைகள் கிடைக்க மாட்டார்கள்; குடிநீரை விற்பனை செய்ய முடியாது; மருந்து நிறுவனங்கள் கொள்ளையடிக்க இயலாது. இவ்வாறான மாற்றங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்வதற்கு என அவர்கள் உச்சரிக்கும் போலி மந்திரங்களில் ஒன்றுதான், ‘கொள்ளை நோய்களில் இருந்து நாங்கள்தான் மக்களைக் காக்கிறோம்’ என்பது.

வரலாற்றில் பதிவாகியுள்ள எந்தப் புள்ளி விவரத்தின் அடிப்படையிலும் காலராவின் தாக்கத்தை நவீன மருந்துகள் குறைக்கவில்லை. இப்போதும், காலரா அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது என்ற உண்மையையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கும் முன்னர், என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்ளுங்கள். வரலாற்றைப் புரிந்துகொள்ளாமல், எதிர்காலத்தை வடிவமைக்க முடியாது!

- திரும்புவோம்...