நூற்றுக்கு 74 நபர்கள் மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருக்கும் இந்தியாவில், 2014-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மொத்தம் 50 கோடிப் பேர் வாக்குச்சாவடிக்கு வந்து, ஓட்டு அளித்து புதிய அரசைத் தேர்ந்தெடுத்தார்கள். தேர்தல் முறையாக நடைபெற்று முடிய லட்சக்கணக்கானவர்கள் மாதக்கணக்கில் வேலை செய்தார்கள். குளறுபடிகள் இல்லாமல் நேர்த்தியாக வேலை முடிந்தது. இவற்றைப் பார்த்து உலகம் வியந்தது.

2016-ம் ஆண்டில் அதைவிடவும் ஒரு பெரிய வேலையைக் கையில் எடுத்திருக்கிறது மத்திய அரசு. நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு சுமார் 17 லட்சம் கோடி ரூபாய். அதில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு மட்டும் 14 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். அந்த இரண்டு நோட்டுக்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 2,300 கோடி.

நவம்பர் 8-ம் தேதி பிரதமர் வெளியிட்ட அறிவிப்பின்படி, அவை அனைத்தும் அன்று இரவு 12 மணிக்கு மேல் செல்லாதவை ஆகிவிட்டன. மக்கள் தங்களிடம் உள்ள அந்த நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்தோ, வங்கிக்கணக்குகளில் செலுத்தியோ மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டார்கள். அந்த வேலை நவம்பர் 11-ம் தேதி தொடங்கி டிசம்பர் 30-ம் தேதி வரை நடக்கிறது. 50 நாட்கள் அவகாசத்தில் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள வேண்டும். தவறினால், 31.3.2017-குள் ரிசர்வ வங்கியிடம் போகவேண்டும். அதோடு முடிந்தது. அதன் பிறகு செல்லவே செல்லாது.

தற்போதைய நிலையில் 500 ரூபாய் நோட்டுக்கள் இல்லாதவர் இருக்க முடியுமா என்ன? அப்படியென்றால் ஒவ்வோர் இந்தியனும் அல்லது ஒவ்வொரு குடும்பமும் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள வங்கிக்குப் போயே ஆகவேண்டும். புழங்குகிற அத்தனை நோட்டுக்களும், லட்சக்கணக்கான வங்கிக் கிளைகள் வழியாக ரிசர்வ் வங்கியை அடையவேண்டும். ரிசர்வ் வங்கியில் இருந்து வந்திருக்கும் புதிய நோட்டுக்கள் கோடிக் கணக்காணவர்களைச் சென்றடைய வேண்டும். ஏனோதானோ என்று அல்ல. அடையாள அட்டை காட்டி அல்லது வங்கிக்கணக்கு மூலமாக.

இது எவ்வளவு பெரிய வேலை! இடையில் எத்தனை நபர்களுக்குத் தொந்தரவு; பண நெருக்கடி! தாங்கள் படும் அவதி பற்றி மக்கள் கொட்டித் தீர்ப்பதை, மீடியாக்களில் பார்க்கிறோம்.

இவை எல்லாம் தேவையா? அரசுக்கு ஏன் இந்த வேலை? எதற்காக மக்களுக்கு இவ்வளவு சிரமம் கொடுக்க வேண்டும்? என்ன காரணத்துக்காக வங்கிகளும் வங்கி ஊழியர்களும் இவ்வளவு வேலை செய்யவேண்டும்? இதனால், அரசுக்கு சிலரிடம் கெட்ட பெயர் வேறு!

இதற்கு அரசு சொல்லும் காரணங்கள் இரண்டு. ஒன்று... கள்ள நோட்டை ஒழிக்க; மற்றொன்று... கறுப்புப் பணத்தை ஒழிக்க. இரண்டு மாங்காய்களையும் அடிக்க அரசு வீசியிருக்கும் ஒரு கல்தான் இந்த நடவடிக்கை.

தற்சமயம் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களில் ஒரு பகுதி, இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்தது அல்ல.தீவிரவாதிகளுக்கு உதவுவதற்காகவும், இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கவும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அச்சடிக்கப்பட்டு, நம் நாட்டுக்குள் தள்ளிவிடப்பட்டிருப்பவை. தவிர, நம் நாட்டில் இருப்பவர்களே சிலர் அச்சடிப்பவை. இவை எல்லாம் கள்ள நோட்டுக்கள். நாடு எங்கும் பரவியிருக்கும் இவற்றைக் கண்டு, பிரித்து எடுப்பது சுலபம் அல்ல.
ஹவாலா, கடத்தல், லஞ்சம், ஊழல்... போன்ற தேசவிரோதச் செயல்கள் மூலமாக, சிலர் சம்பாதிக்கும் பணம் கணக்கில் காட்டப்படுவது இல்லை. அதன் ஒரு பகுதி ரூபாய் நோட்டுக்களாகவும் இருக் கின்றன. தவிர, முறையான வழியில் பணம் சம்பாதித்தாலும் சிலர் அதைக் கணக்கில் காட்டி, உரிய வருமான வரியை அரசுக்குச் செலுத்துவது இல்லை. இப்படி கணக்கில் வராமல் அவர்கள் வைத்திருக்கும் பணத்தின் ஒரு பகுதி, வெளிநாட்டு வங்கிகளில் இருக்கிறது. மற்றொரு பகுதி உள்நாட்டிலேயே இருக்கிறது. உள்நாட்டில் இருக்கும் கறுப்புப் பணம், தங்கமாகவும் சொத்துக்களாகவும் இருப்பது போக, ரொக்கமாகவே பலரிடமும் இருக்கின்றன. அவை எல்லா வற்றையும் இனம் கண்டு பறிமுதல் செய்வதோ, அதன் மீது வரிவிதிப்பதோ அரசுக்கு எளிது அல்ல. இந்த இரண்டுவிதமான முறையற்ற பணமும் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கின்றன.

சிலர் நினைக்கலாம், ‘அது எப்படி இவற்றால் பொருளாதாரம் சீர்குலையும்?’ என்று. உதாரணம் சொன்னால் சுலபமாக இருக்கும்.

ஒரு திரையரங்கம் இருக்கிறது. அதில் 1,000 இருக்கைகள் இருக்கின்றன. அந்த இருக்கைகளுக்கு எவ்வளவு டிக்கெட் கொடுக்கலாம்? 1,000-தானே! அதையும் யார் கொடுக்க வேண்டும்? திரையரங்க உரிமையாளர்தானே! அவர் கொடுக்கிறார். பலர் காசு கொடுத்து வாங்குகிறார்கள். சிலர் காசு கொடுக்காமலேயே டிக்கெட்டை ஏமாற்றி வாங்குகிறார்கள்.

தவிர, யாரோ கள்ள டிக்கெட் அடித்து, அவர்கள் ஒருபக்கம் சிலரிடம் கொடுத்து உள்ளே அனுப்புகிறார்கள். தியேட்டர்காரரிடம் டிக்கெட் பெற்ற 1,000 பேர். வேறு சிலரிடம் கள்ள டிக்கெட் பெற்ற 250 பேர். என்ன நடக்கும்? குழப்பம், அடிதடிதான். எல்லோருக்கும் உள்ளே இடம் இருக்காது. அட்ஜெஸ்ட் செய்து உட்கார்ந்தால்கூட, காசு கொடுத்து முறையாக டிக்கெட் வாங்கியவருக்கு போதிய வசதி கிடைக்குமா? உள்ளே 1,250 பேர் அமர்ந்திருக் கிறார்கள். ஆனால், காசு கொடுத்து டிக்கெட் வாங்கி வந்தவர்கள் 750 பேர்தான்.

இப்போது தியேட்டர் நிர்வாகம், எல்லோரும் வெளியே வந்து காசு கொடுத்து வாங்கிய பழைய டிக்கெட்டைக் கொடுத்து, நாங்கள் தரும் புதிய டிக்கெட்டுடன் உள்ளே போய் படம் பாருங்கள் என்கிறது. இப்போது புரிந்திருக்குமே!

உள்நாட்டுக் கறுப்புப் பணம் ஒரு நோய். அதை ஒழிக்க வேண்டும். ரெய்டு போன்ற நடவடிக்கைகளால் அதை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. இப்படியாகவே பல ஆண்டுகள் ஓடிவிட்டன. தற்போது எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை அவற்றைச் செய்யத்தான் என்கிறது அரசு.

இந்த நடவடிக்கையினால் நிச்சயம் நன்மைகள் உண்டு... கூடவே கொஞ்சம் குறைகளும்!