Published:Updated:

ஆசை - எண்ணம் அது வண்ணம் ஆனதே!

ஆசை - எண்ணம் அது வண்ணம் ஆனதே!
பிரீமியம் ஸ்டோரி
ஆசை - எண்ணம் அது வண்ணம் ஆனதே!

பரிசல் கிருஷ்ணா - படங்கள்: கே.ராஜசேகரன்

ஆசை - எண்ணம் அது வண்ணம் ஆனதே!

பரிசல் கிருஷ்ணா - படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
ஆசை - எண்ணம் அது வண்ணம் ஆனதே!
பிரீமியம் ஸ்டோரி
ஆசை - எண்ணம் அது வண்ணம் ஆனதே!
ஆசை - எண்ணம் அது வண்ணம் ஆனதே!

'நான் வினிதாஸ்ரீ. எங்கள் சித்தப்பா மூலம்தான் நானும் அக்கா விஜயஸ்ரீயும் ஆனந்த விகடன் வாசகர்கள் ஆனோம். அக்காவுக்கு நவம்பர் 27-ம் தேதி திருமணம். அவளுக்கு ஓர் ஆச்சர்யப் பரிசை அளிக்க ஆசை.

எனக்கும் அக்காவுக்கும் ஓவியங்களின் மீது தீராத ஆசை உண்டு. நான் கொஞ்சம் வரையவும் செய்வேன். ஹாசிப்கான் வரையும் ஓவியங்களை விகடனில் பார்க்கும்போது, ஒரு படமாவது இப்படி வரைய முடியாதா எனத் தோன்றும். ‘அவரைப் போல வரைவது இருக்கட்டும். அவரே எங்களை வரைந்தால் எப்படி இருக்கும்?’ எனத் தோன்றியது. என்னையும் அக்காவையும் ஹாசிப்கான் வரைந்து தருவாரா?' - கும்பகோணம் வாசகி வினிதாஸ்ரீயின் மின்னஞ்சல் இது.

வினிதாஸ்ரீ, கடலூரில் வங்கி ஒன்றில் பணிபுரிகிறார். அக்கா விஜயஸ்ரீ, பி.எஸ்ஸி முடித்திருக்கிறார். அப்பா கோபி, தறி நெய்கிறார். அம்மா லலிதா, இல்லத்தரசி. ஒரு வியாழக்கிழமையில் வினிதாஸ்ரீயை அலைபேசியில் அழைத்து அவரது ஆசை நிறைவேறப்போவதைச் சொன்னோம். சனிக்கிழமை அதிகாலை அவ்வளவு உற்சாகமாகக் கிளம்பி சென்னை வந்தார்கள்.

விகடன் அலுவலகத்துக்குள் ஆச்சர்யப் பார்வை பார்த்தபடியே நால்வரும் நுழைந்தனர்.

ஸ்டுடியோவில் ஹாசிப் வரையும் சிண்டிக் மானிட்டர் ஸ்க்ரீன் தயாராக இருந்தது.

ஹாசிப்கானைப் பார்த்ததும் ‘ஹை!’ என்று சின்னச் சத்தம் கேட்டது வினிதாஸ்ரீயிடம் இருந்து. `‘வயசுல பெரியவரா இருப்பார்னு நெனைச்சேன்’' என்றவருக்கு  செம சந்தோஷம்.

``வரையறதுக்கு முன்னால கொஞ்சம் ஃப்ரீயாகுங்க. ஏதாச்சும் பேசிட்டிருப்போம். சரி... யார் இந்த ஆசையை எழுதிப் போட்டது? அப்பா அம்மாகிட்ட சொன்னீங்களா?’’ என்று பேச்சு கொடுத்தார் ஹாசிப்கான்.

ஆசை - எண்ணம் அது வண்ணம் ஆனதே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`‘நாங்க ரெண்டு பேருமாத்தான் மெயில் அனுப்பினோம். விகடன்ல இருந்து போன் வந்ததும், அக்காகிட்டதான் விஷயத்தைச் சொன்னேன். அவ யோசிச்சா. ஆனா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ‘இப்படி ஒரு சான்ஸை மிஸ் பண்ணலாமா... போயிட்டு வாங்க’னு சொன்னாங்க’’ என்றார் வினிதாஸ்ரீ.

 ஹாசிப்கான் சிஸ்டத்தை ஆன் செய்து வரையத் தயாரானார். சகோதரிகள் இருவரும் சகஜமாக உரையாடத் தொடங்கியதில் கொஞ்சம் சிரிப்பு அவர்கள் முகத்தில் வந்திருந்தது.

`‘நீங்க வரையறத நாங்க பார்க்கலாமா?’’

‘`பார்க்கலாம்... கொஞ்சம் வரைஞ்சதும் சொல்றேன். நீங்க அமைதியா இருக்கணும்னு இல்லை. பேசலாம்’’ என்றார் ஹாசிப்.

`‘உங்களுக்கு வரையறதுல எப்படி ஆர்வம் வந்தது?’’ என வினிதாஸ்ரீ கேட்க, ``விகடன்ல சேர்ந்தது எப்படி?’’ என்றார் விஜயஸ்ரீ.

‘`நான் ஏழு வயசுல இருந்து விகடன் வாசகன். சின்ன வயசுல இருந்து வரைவதிலே ஆர்வம் உண்டு. ஜெயலலிதா முதலமைச்சரா தேர்வானப்ப, அவங்களை ஒரு கேரிக்கேச்சரா வரைஞ்சு விகடன் மெயிலுக்கு சும்மா அனுப்பினேன். ரெண்டு நாள்ல விகடன்ல இருந்து போன் வந்தது. `இந்த மாதிரி வரைஞ்சு தர முடியுமா?’னு கேட்டாங்க. தொடர்ந்து வரைய ஆரம்பிச்சேன்’'

`‘ஹோ...  ஜெயலலிதா ஓவியம்தான் விகடன்ல வந்த உங்க முதல் படமா?'’ என்றார் விஜயஸ்ரீ.

சிரித்தார் ஹாசிப்.

ஆசை - எண்ணம் அது வண்ணம் ஆனதே!

‘`எத்தனை நாளானாலும் விகடன்ல நல்ல படைப்புகள் அடையாளம் கண்டு போடுவாங்கங்கிறதுக்கு அதுதான் உதாரணம். அந்தப் படம் அப்ப வரலை. மூணு வருஷம் கழிச்சு, சரியான தருணத்துல அந்தப் படத்தை பயன் படுத்தினாங்க’' என்ற ஹாசிப்கானிடம்,

`` ‘வட்டியும் முதலும்’ தொடர்ல உங்க ஓவியங்கள் எங்களை ரொம்பக் கவர்ந்தது. புக் வந்தாலே, அந்த வாரம் என்ன படம் போட்டிருக்கீங்கனு பார்ப்போம். மழையில ஒரு பெரியவர் உட்கார்ந்திருக்கிற மாதிரி ஓவியம் இன்னும் ஞாபகம் இருக்கு’’ என்றார் தங்கை வினிதாஸ்ரீ.

ஹாசிப் வரைந்துகொண்டே இருந்து கொஞ்சநேரம் கழித்து இருவரையும் அழைத்துக் காண்பித்தார். அவர்களது பெற்றோரும் அருகில் வந்து தங்கள் மகள்களை ஓவியத்தில் கண்டு ரசித்தார்கள். 

அப்பா கோபி இப்போது பேச ஆரம்பித்தார்.  ‘`இவங்க பிறந்து, வளர்ந்து, படிச்சது எல்லாமே கும்பகோணம்தான். சின்னவ இப்பதான் வேலைக்காக கடலூர் வந்திருக்கா. மத்தபடி வெளியூர் எங்கேயும் அதிகமா போனது இல்லை. சென்னைக்கு இதுவரை வந்ததே இல்லை. இப்பதான் விகடன் அலுவலகம் வர்றதுக்காக முதல்முறையா சென்னை வர்றோம்'’ என ஆச்சர்யம் கொடுத்தார்.

`‘இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு. இவங்க பெரிய தாத்தா யார் தெரியுமா? சாகித்ய அகாடமி விருது வாங்கின எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம். அவரோட படைப்புகள் வந்த விகடன்ல என் பொண்ணுங்க வியமும் புகைப்படமும் வரும்னு நினைக்கிறப்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு’’ என்றார். 

ஆசை - எண்ணம் அது வண்ணம் ஆனதே!

`‘சரி... முதல் தடவையா சென்னை வந்திருக்கீங்க. சுற்றிப்பாத்துட்டுப் போங்க. உங்களை முழுமையா வரைஞ்சு முடிச்சுட்டு, உங்க வீட்டுக்குத் திருமணப் பரிசா அனுப்புறேன்’’ என்றார் ஹாசிப்.
அவர்களை வழி அனுப்ப ஹாசிப்கானும் உடன் வந்தார். கீழே ரிசப்ஷன் வந்ததும், அங்கு இருந்த ஒரு பார்சலை இருவரிடமும் கொடுத்தார்.

``என்ன இது?'’ -  ஆச்சர்யமாகப் பார்த்தபடி, பிரித்தனர். உள்ளே கேன்வாஸில் ஃப்ரேம் செய்யப்பட்ட, `வட்டியும் முதலும்’ தொடரில் ஹாசிப்கான் வரைந்த அந்த முதியவர் ஓவியம்.

‘`இந்த நாளை எங்களால் மறக்கவே முடியாது. என் பொண்ணுங்க எதையுமே ஆசைப்பட்டு எங்ககிட்ட கேட்டது இல்லை. ஆனா, அவங்க ஆசையை விகடன் ரொம்ப அழகா நிறைவேத்தித் தந்திருக்கு’’ என்று மகிழ்ந்த கோபி, திருமணப் பத்திரிகையை அளித்து, `‘நிச்சயம் வரணும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

ஆசை - எண்ணம் அது வண்ணம் ஆனதே!

`‘நிஜம்மா நாங்களும் எதிர்பார்க்கலை. அதுவும் கல்யாணத்துக்கு இன்னும் சில நாட்கள்தான் இருக்கு. அதுக்குள்ள இது நடந்தது எல்லாம் ரொம்பவே சந்தோஷமா இருக்கு. விகடனுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாது’’ என்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபடி விடைபெற்றனர் சகோதரிகள் இருவரும்! 

வாசகர்களே... இதுபோல ரசனையான, நெகிழ்ச்சியான, ஜாலியான, காமெடியான ஆசைகளை எழுதி அனுப்புங்கள். ஆசிரியர் குழுவினரின் பரிசீலனையில் தேர்வாகும் ஆசைகளை, விகடன் நிறைவேற்றித் தருவான். உங்கள் ஆசைகளை அனுப்பும்போது அலைபேசி எண்ணை மறக்காமல் குறிப்பிடுங்கள்.

னுப்பவேண்டிய முகவரி...
ஆசை,
ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை - 600 002.
இ-மெயில்: aasai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism