Published:Updated:

``தகுதியுள்ளவங்க ஜெயிப்பாங்க!''

``தகுதியுள்ளவங்க ஜெயிப்பாங்க!''
பிரீமியம் ஸ்டோரி
``தகுதியுள்ளவங்க ஜெயிப்பாங்க!''

``தகுதியுள்ளவங்க ஜெயிப்பாங்க!''

``தகுதியுள்ளவங்க ஜெயிப்பாங்க!''

``தகுதியுள்ளவங்க ஜெயிப்பாங்க!''

Published:Updated:
``தகுதியுள்ளவங்க ஜெயிப்பாங்க!''
பிரீமியம் ஸ்டோரி
``தகுதியுள்ளவங்க ஜெயிப்பாங்க!''
``தகுதியுள்ளவங்க ஜெயிப்பாங்க!''

ரு மழைநாளில் நடந்தது சந்திப்பு! மரங்கள் அடர்ந்த சாலையோரமாக உள்ளடங்கி இருக்கிறது அந்த அடையாறு பங்களா. லேசான தாடி, மெல்லிய ஃபிரேமிட்ட கண்ணாடி, பார்க்க படுபாந்தமாக இருக்கிறார் விஜய்.

``தகுதியுள்ளவங்க ஜெயிப்பாங்க!''

``ஹாய்...'' - சின்னதாகச் சிரிக்கிறார்.

தரைத்தளம் முழுக்க சினிமா வாசனை. முதல் தளம் ஏறினால் வீடு.

``மாடிப்படி ஏறி மேல வந்துட்டார்னா, அவர் முழுக்க எனக்கும் சஞ்சய்க்கும் மட்டும்தான்!’’ - சிரிக்கிறார் விஜய்யின் மனைவி சங்கீதா. துறுதுறுவென அப்படியே விஜய்யை குட்டியாக ஒரு கலர் ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இருக்கிறான் ஜேசன் சஞ்சய்.

``சங்கீதா, விஜய்னு - எங்க ரெண்டு பெயர்களையும் சேர்த்து சஞ்சய்னு சாருக்குப் பேர் வெச்சோம். அவர் ஜாலியாகத் திரியட்டும். போட்டோ வேண்டாம்... ப்ளீஸ்'' என்கிறார் விஜய்.

வி.ஜி.பி கோல்டன் பீச் வாயிற் காவலரைக்கூடச் சுலபமாகச் சிரிக்கவைத்துவிடலாம், விஜய்யைப் பேசவைப்பது அதைவிடக் கஷ்டம். ஆனால் ஆச்சரியம், அன்று விஜய் நம்முடன் பேசினார்... அதுவும் அன்பு மனைவியுடன் சேர்ந்து!

``அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் என்னைப் பெரிய படிப்புப் படிக்கவெச்சு, நல்ல வேலைக்கு அனுப்பிடணும்னு ஆசை. ஆனா, எனக்கு ப்ளஸ்-ஒன் படிக்கும்போதே சினிமாதான் கனவு.

அப்பா, அம்மா, அங்கிள்னு சுத்தி அத்தனை பேரும் சினிமாவுல இருந்தாங்க. நான் பாடுறது, டான்ஸ் ஆடுறதுனு ஜாலியா இருந்தவன். ஒரே பையன்கிறதுனால செல்லம். தவிர அப்பா டைரக்ட் பண்ணின படங்கள்ல சின்ன வயசு விஜயகாந்த்தா நடிக்க வெச்சிருக்கார். அப்புறம், சினிமா ஆசை வராதா?

ஒரு புதிய தலைமுறைக்கான சினிமாவில் பிரமாதமா வர முடியும்னு நம்பிக்கை எனக்கு இருந்தது. கடைசியில் அப்பா சம்மதிச்சார்’’ என்கிறார் விஜய்.

``அப்படி அவர் எனக்காக எடுத்த படம், `நாளைய தீர்ப்பு'. அது சரியாப் போகலை. ஆனா, `என்னை ஒரு ஹீரோவாக்கியே தீருவேன்'னு அடுத்தடுத்து படங்கள் பண்ணினார். முதல் தடவையா `ரசிகன்' படம்தான் ஹிட். விஜய்னு ஒருத்தன் வந்திருக்கான்னு கடைசி ரசிகன் வரை கொண்டுபோச்சு. அதுவரைக்கும் டான்ஸ், ஃபைட், பாடுறதுனு ஜாலியான கேரக்டர்கள்தான்’’ - வெட்கமாகச் சிரிக்கிறார்.

விஜய்யின் படங்கள் எல்லாம் இளமைக் கொண்டாட்டங்களாக இருந்த நேரத்தில் அவரை புதுவழியில் திருப்பிய படம், `பூவே உனக்காக'.

``அந்தப் படத்தில்தான் என் ரசிகர் வட்டத்தைத் தாண்டிப் பரவலாக மக்களிடம் போய்ச் சேர்ந்தேன். `நம்ம வீட்டுப் பையன்போல இருக்கானே...' என்று மக்கள் என்னை ஆதரித்தது அதற்குப் பிறகுதான்’’ என்கிறார்.

``அதேபோல எனக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தது `பாசில்' சாரின் `காதலுக்கு மரியாதை', எழிலின் `துள்ளாத மனமும் துள்ளும்' - இந்த இரண்டும் வெவ்வேறு ஏரியாக்களில் என்னை நகர்த்தின.

``தகுதியுள்ளவங்க ஜெயிப்பாங்க!''

தவிரவும், சினிமாவில் சில விஷயங்களைத் தீர்மானிக்கவே முடியாது. `சரக்கு வெச்சிருக் கேன்', `ஆல்தோட்ட பூபதி' பாடல் களுக்கும் அந்தப் படங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனா, அந்தப் பாடல்கள் ரெண்டும் அவ்வளவு பாப்புலர். டி.வி-யில நேயர் விருப்பம் மாதிரி அடிக்கடி போட்டுட்டிருக்காங்க. கதைக்குத் தொடர்பு இல்லாத, தேவை இல்லாத ஒரு விஷயமானாலும் அது எவ்வளவு தூரம் மக்களால் ரசிக்கப்படுது என்பதற்காகச் சொல்கிறேன். ஒரு டூத்பேஸ்ட், பவுடர் தயாரிக்கும்போதே எந்த மாதிரி கஸ்டமர்களுக்குன்னு தெரிஞ்சு பண்ணலாம். ஆனா, சினிமா அப்படி இல்லை. டிஸ்கொதே போற சிட்டி பையனுக்கும் பிடிக்கணும். கிராமத்து டீக்கடை மாஸ்டருக்கும் பிடிக்கணுமே'' என்கிறார் விஜய்.

``புதுசுப் புதுசா இளைஞர்கள் நடிக்க வர்றாங்களே... எப்படிச் சமாளிக்கப்போறீங்க?'' என்றால் பளீரெனச் சிரிக்கிறார்.

``ஹீரோக்கள் மட்டுமா வர்றாங்க. ஹீரோயின்ஸ், கேமராமேன், டைரக்டர்கள்னு வருஷத்துக்கு முப்பது பேரு புதுசா வரத்தான் செய்வாங்க. தகுதியுள்ளவங்க ஜெயிப்பாங்க. போட்டினு ஒண்ணு இருந்தால்தான், ஆட்டம் சுவாரஸ்யமா இருக்கும். தவிர, என்னிக்கோ ஒருநாள் நானும் அப்படி புதுமுகமா வந்தவன்தானே!''

ஏழைகளுக்கு இலவச அரிசி, மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், ரிக்‌ஷாக்காரர்களுக்கு மழைகோட்டு என்று விஜய் சேவை செய்வது விளம்பரப்படுத்தப்படுகிறது. படங்களிலும் ஒரு தலைவர் இமேஜ் தரப் பார்க்கிறார்கள்.

``விஜய்க்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதா?’’ என்றால், ``என் சம்பாத்தியம் இந்த ஜனங்க தந்த காசுதான். அதுல கொஞ்சத்தை அவங்களுக் காகவே செலவுசெய்றேன். ஒட்டுமொத்த தேசத்துக்கும் உதவி செய்யணும்னா நம்ம கையில் அரசாங்கம் இருக்கணும். அது இல்லை. அதான் என்னால முடிஞ்சதை இல்லாதவங் களுக்குச் செய்றேன். மற்றபடி அரசியலைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அரசியலுக்கும் வர மாட்டேன். நானும் என் ரசிகர்களும் செய்ற உதவிகளுக்கு அர்த்தம் அது அல்ல...''

சில விநாடிகள் யோசனைக்குப் பிறகு அவரே தொடர்கிறார்.

``தகுதியுள்ளவங்க ஜெயிப்பாங்க!''

``சினிமாவுக்கு நான் வந்தப்போ, என்னை யாரும் ஊக்குவிக்கவில்லை. மூச்சுத்திணறித் திணறித்தான் நான் நீச்சல் கத்துக்கிட்டேன். இப்போ நடிக்கவும் நடனமாடவும் தெரியும்னு கொஞ்சம் நிரூபிச்சிருக் கேன். சினிமாவோட மற்ற பகுதிகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறேன். கதை எப்படிப் பண்றாங்க என்பதில் இருந்து கேமராவுல என்ன லென்ஸ் யூஸ் பண்றாங்க என்பது வரை எல்லாமே தெரிஞ்சுக்கிறேன். எனக்கு சினிமாதான் எல்லாமே'' என்று விஜய் பேசிக்கொண்டிருக்க, இமை கொட்டாமல் மெல்லியப் புன்னகையோடு அதை ரசித்துக் கொண்டிருக்கிறார் சங்கீதா.

``பொதுவா வீட்டில் அவர் தன் வேலை பற்றி எதுவும் பேச மாட்டார். இப்போ அவர் பேசுறதைக் கேட்கவே ஆச்சர்யமா இருக்கு’’ என்ற சங்கீதா தன்னைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

``கொழும்பு நகரில் வாழ்ந்த எங்கள் குடும்பம் லண்டனுக்குக் குடிபெயர்ந்தது. நான் படித்தது எல்லாம் லண்டனில்தான். பொழுதுபோக்கு என்றால் சினிமா பார்ப்பதுதான். எல்லா ஹீரோக்களையும் பிடிப்பதுபோலத்தான் அவரையும் எனக்குப் பிடித்தது. பார்ப்பேன்; ரசிப்பேன். அவ்வளவுதான்!

ஒவ்வொரு விடுமுறையிலும் குடும்பத்தோடு தமிழ்நாட்டுக்கு வருவோம். அதுமாதிரி ஒருமுறை வந்தபோது, ஒரு பொதுநண்பர் மூலமாக விஜய்யோட அறிமுகம் கிடைச்சது. ஆனா, அந்த முதல் சந்திப்பிலேயே கண்களால் பரஸ்பரக் காதலைப் பரிமாறிக்கொண்டோம்’’ என்கிறார் சங்கீதா.

கண்களில் தொடங்கிய காதலை இரு வீட்டுப் பெற்றோரும் புரிந்துகொண்டு, பேசி முடித்து இணைத்துவிட்டார்கள் இருவரையும்.

``கல்யாணத்துக்கு முன்னர் விஜய் வெறும் ஹீரோ! இப்போ அவர் என் கணவர். அதனால் அவர் படங்களைப் பார்த்து நேர்மையான விமர்சனத்தைச் சொல்வேன். சிம்ரனோடு இவர் ஆடிய, `ஆல்தோட்ட பூபதி' பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி ஜோதிகாவோடு இவர் ஜோடி சேர்ந்த `குஷி' எனக்குப் பிடிக்கும்'' என்றார்.

``விஜய் பெரிய ஹீரோங்கிறது வெளியிலதான். வீட்டுக்குள்ள கிச்சன்ல உதவி பண்றதுலேர்ந்து சஞ்சய்க்குச் சாப்பாடு ஊட்டிவிடுறது வரை ஒரு நார்மலான குடும்பஸ்தரா எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்வார். அப்பாவும் பையனும் ஏதாவது மியூஸிக் போட்டுட்டு டான்ஸ் ஆட ஆரம்பிச்சா பார்த்துட்டே இருக்கலாம். ஆனா... அது எனக்கே எனக்கான ஸ்பெஷல் ஷோ!'' -கலகலவெனச் சிரிக்கிறார்.

``ஷூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வந்தா ஒரு தகப்பனா, ஒரு நல்ல கணவனா இருக்கிற பக்குவமும் நிதானமும் எனக்கு வந்திருக்குன்னா அதுக்கு சஞ்சய்யும் சங்கீதாவும்தான் காரணம்'' கண்களால் சிரிக்கிறார் விஜய்!

- டி.அருள்எழிலன்
படங்கள்: கே.ராஜசேகரன், கே.கார்த்திகேயன்