Published:Updated:

மாடலிங் மனுஷிகள்!

மாடலிங் மனுஷிகள்!
பிரீமியம் ஸ்டோரி
மாடலிங் மனுஷிகள்!

ஆர்.வைதேகி

மாடலிங் மனுஷிகள்!

ஆர்.வைதேகி

Published:Updated:
மாடலிங் மனுஷிகள்!
பிரீமியம் ஸ்டோரி
மாடலிங் மனுஷிகள்!

ந்த மாடலிங் பெண்கள்தான் விளம்பர உலகின் சமீபத்திய சென்சேஷன். துணிக்கடையோ, நகைக்கடையோ இவர்கள் இல்லாமல் தமிழில் விளம்பரங்கள் வருவது இல்லை. விளம்பர முகங்களின் முகவரிகளைக் கண்டுபிடித்துப் பேசினோம்...

மாடலிங் மனுஷிகள்!

சம்யுக்தா கார்த்திக்

ரு கையில் இன்ஜினீயரிங்... இன்னொரு கையில் மிஸ் சென்னை டைட்டில். இரண்டுக்கும் இடையில் ஒரு மெல்லியக் கோடு. எந்தப் பக்கம் செல்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார் சென்னையின்
டாப் மாடல் சம்யுக்தா கார்த்திக்.

``இன்ஃபோசிஸ் மாதிரி பெரிய கம்பெனிகள்ல வேலை பார்த்துக்கிட்டு, மாடலிங்கும் பண்ணிட்டிருந்தேன். என் உயரம் எனக்குப் பெரிய ப்ளஸ். அதுக்காகவே எக்கச்சக்க வாய்ப்புகள் வந்தன.

ஒருகட்டத்துல முழுநேர மாடலா மாறிட்டேன்'' எனும் சம்யுக்தாவுக்கு, மாடலிங்கில் இது 10-வது ஆண்டு.

``ஷூட் இருக்கோ... இல்லையோ தினமும் வொர்க்அவுட் பண்ணணும். ஸ்கின்னையும் முடியையும் பார்த்துப் பார்த்துக் கவனிக்கணும். என்னை மாதிரி ராம்ப் வாக் பண்ற மாடல்களுக்கு ஃபிட்னஸ் ரொம்ப முக்கியம்'' என்ற சம்யுக்தா, அம்மாவான பிறகும் விளம்பரங்களிலும் ராம்ப் வாக்கிலும் அசத்தும் ஒரே சென்னை மாடல்!

``குழந்தை பிறந்த பிறகு ஏறின வெயிட்டை எல்லாம் அஞ்சாவது மாசமே குறைச்சுட்டு, மறுபடியும் மாடலிங் பண்ண என்னைத் தயார்படுத்திக்கிட்டேன். சமீபத்தில் என் பையனும் என்கூட மாடலிங் பண்ணியிருக்கான்'' - மாடலிங் மம்மி வாய்ஸில் ஏராளமான மகிழ்ச்சி!

மாடலிங் மனுஷிகள்!

ஆர்த்தி வெங்கடேஷ்

``நான் பக்கா சென்னைப் பொண்ணு. மாடலிங் பற்றி கனவுகூடக் கண்டது இல்லை. விஸ்காம் முடிச்சுட்டு, பெங்களூருல இன்டீரியர் டிசைனிங் படிக்கப் போயிருந்தேன். அங்கே என்னைப் பார்த்த ஒரு மாடலிங் கோஆர்டினேட்டர், `மிஸ் இந்தியா' போட்டியில் கலந்துக்கச் சொன்னார். படிப்பு இருந்ததால் என்னால் அதைத் தொடர முடியலை. படிப்பை முடிச்சுட்டு சென்னை வந்தேன். இங்கே வந்ததும் சில கோரியோகிராஃபர்ஸ், போட்டோகிராஃபர்ஸ் மூலமா மாடலிங் வாய்ப்பு வந்தது’’ என்கிற ஆர்த்தி வெங்கடேஷுக்கு, நியூயார்க்கில் இருந்தது அழகான திருப்புமுனை.
 
``நியூயார்க் போன பிறகுதான் மாடலிங்னா சும்மா இல்லைங்கிறது புரிஞ்சது. அங்கே இருந்த போட்டிகள் என்னை மிரளவெச்சது. அழகும் திறமையும் இருந்தாலும், வாய்ப்புக்காக பெண்கள் வரிசையில் நிக்கிறதையும், சர்வசாதாரணமா அவங்க நிராகரிக்கப்படுறதையும் பார்த்தேன். நானும் அப்படி நிராகரிக்கப்பட்டிருக்கேன். அதை எல்லாம் தாண்டி, நியூயார்க் பிரைடல் ஃபேஷன் வீக்ல கலந்துக்கிட்டப்போதான் என் கனவு நனவாச்சு'' - வெற்றிக் கதை சொல்லும் ஆர்த்தி, ரோல்ஸ்ராய்ஸ் கார் விளம்பரத்துக்கு மாடல் ஆனதுதான் இவரின் மிகப்பெரிய சமீபத்திய சாதனை!

மாடலிங் மனுஷிகள்!

அஷ்வதி ரவிக்குமார்

ழகே... அழகாக இருக்கிறார் அஷ்வதி ரவிக்குமார். சின்னத்திரை விளம்பர ப்ரியர்களுக்குப் பரிச்சயமான முகம். எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயர்.

``கல்லூரித் தோழிகள் சிலர் சும்மா பொழுதுபோக்குக்காக என்னை போட்டோஸ் எடுப்பாங்க. நான் போஸ் பண்ணுவேன். அந்த போட்டோஸ் எப்படியோ ஒரு மாடலிங் கோஆர்டினேட்டர் கைக்குப் போய், மணிரத்னம் சார் ஆபீஸுக்கும் போயிடுச்சு. திடீர்னு ஒருநாள் `கடல்' பட ஆடிஷனுக்குக் கூப்பிட்டாங்க. ரொம்பப் பயம்... ஒண்ணுமே பண்ண முடியலை. வெற்றிகரமா அந்த ஆடிஷனைச் சொதப்பிட்டு வெளியே வந்தேன். `இதுக்கு எல்லாம் ஃபீல் பண்ணக் கூடாது. சும்மா ட்ரை பண்ணினதுதானே. டோன்ட் வொரி'னு மணி சார் சமாதானப்படுத்தினார்'' என்ற அஷ்வதி, அதன் பிறகே மாடலாகப் பிரபலமானார்.

``அப்புறம் விளம்பரங்கள், ராம்ப் வாக் ஷோஸ், டி.வி-யில் டிராவல் ஷோஸ்னு பிஸியானேன். நடுவுல ஒரு பிரேக் எடுத்துக்கிட்டு, மும்பை போனேன். அனுபம்கெரின் ஆக்ட்டிங் ஸ்கூல்ல நடிப்பு கத்துக்கிட்டு, சென்னை வந்தேன். இங்கே வெஸ்டர்ன் நடனமும் வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசையும் கத்துக்கிட்டேன். நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் மருமகள் கோகிலாதான் எனக்கு டான்ஸ் டீச்சர். அவங்க கணவர் கௌதம் டைரக்ட் பண்ற `கண்ணுல காச காட்டப்பா' படத்துல நான் லீட் ரோல் பண்ணியிருக்கேன். இப்ப விளம்பரம், மியூஸிக், டான்ஸ்னு றெக்கைக் கட்டிப் பறந்திட்டிருக்கு லைஃப்!'' - மந்தகாசப் புன்னகையில் மனம் கவர்கிறார் அஷ்வதி!

மாடலிங் மனுஷிகள்!

மெஹந்தி

பெயரில் அடிக்கும் வடக்கத்திய வாடை, பேச்சில் இல்லை. அதுதான் மெஹந்தியின் சிறப்பு.

``எப்பவும் புதுசுப் புதுசா ஏதாவது பண்ணணும்னு நினைக்கிற ஆள் நான். ஸ்கூல் முடிச்சதும் டான்ஸ் கிளாஸ்ல சேர்ந்தேன். போர்ட்ஃபோலியோ போட்டோஷூட் பண்ணினேன். விஸ்காம் முடிச்சேன். அப்புறம் ஃபேஷன் டிசைனிங் படிச்சேன். சவாலா, சுவாரஸ்யமான விஷயங்களைத்தான் எப்பவும் பண்ணணும்னு நினைக்கிற எனக்கு, மாடலிங் பக்காவா செட்டாகிருச்சு. சென்னையில் உள்ள அத்தனை பாப்புலர் பிராண்ட்களுக்கும் மாடலா இருந்திருக்கேன். அத்தனை பிரபல டிசைனர்களின் ஃபேஷன் ஷோக்கள்லயும் ராம்ப் வாக் பண்ணியிருக்கேன். தினமும் ஒரு புராஜெக்ட், புதுப்புது மனிதர்கள்னு த்ரில்லிங்கா இருக்கு மாடலிங் லைஃப்'' - அசத்தல் அறிமுகம் தருகிறார் மிஸ் மெஹந்தி.

``அடிப்படையில் நான் ஒரு பிளாக்கர்.கூடவே ஃபேஷன் டிசைனிங் படிச்சிருக்கிறதால் ஸ்டைலிஸ்ட்டாகவும் இருக்கேன். ஃபேஷன் மெர்ச்சன்டைஸராகவும் பிஸியாவே இருக்கேன். சிங்கப்பூர், ஹாங்காங் வரைக்கும் பிசினஸ் இருக்கு. கூடியசீக்கிரமே பொட்டிக் ஆரம்பிக்கிற ஐடியாவும் இருக்கு'' - மெகா ப்ளானுடன் காத்திருக்கிறார் மெஹந்தி.

``அது சரி... அதென்ன மெஹந்தி?’’

``ரொம்ப வித்தியாசமா இருக்கும்னு அம்மாதான் எனக்கு இந்தப் பெயர் வெச்சாங்க. சின்னவளா இருந்தப்ப, என் பெயரைவெச்சு நிறையப் பேர் கலாய்ப்பாங்க. அப்ப எல்லாம் அம்மா மேல கடுப்பாகியிருக்கேன். ஆனா, மாடலா பிரபலமான பிறகு என் பேர்தான் எனக்கான பிரத்யேக அடையாளம்!''