Published:Updated:

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

Published:Updated:
உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!
உணவு நல்லது வேண்டும்!

வெஜிடபிள் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி மாவு - 200 கிராம்,  இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 1, கேரட், பீன்ஸ், காலிஃபிளவர் - தலா 100 கிராம், கடலைப் பருப்பு - 10 கிராம், உப்பு, சீரகம், கடலை எண்ணெய், வெந்நீர் - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மாவுடன் எண்ணெய், உப்பு, வெந்நீர் சேர்த்து நன்றாகக் கிளறி, கொழுக்கட்டை மாவு தயார்செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவைச் சேர்த்து வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ், காலிஃபிளவர், கடலைப் பருப்பு, உப்பு போட்டு மீண்டும் வதக்கி, ஆறவைக்கவும். கொழுக்கட்டை மாவுக்குள் வெஜிடபிள் மசாலாவை வைத்துக் கொழுக்கட்டையாகப் பிடிக்கவும். இதை, குக்கரிலோ, இட்லிப் பாத்திரத்திலோ ஆவியில் வேகவைத்து, சூடாகப் பரிமாறலாம்.

பலன்கள்: மாவுச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. சர்க்கரை நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவருக்குமே ஏற்றது.

உணவு நல்லது வேண்டும்!

முட்டைக்கோஸ் சூப்

தேவையானவை: பொடியாக அரிந்த முட்டைக்கோஸ் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், சோள மாவு, மிளகுத்தூள்- தலா 2 டீஸ்பூன், பால் - அரை கப், பிரெட் துண்டுகள் - சிறிதளவு, மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் வெண்ணெயைப் போட்டு சூடானதும் பிரெட் துண்டுகளைப் போட்டு வறுத்து தனியே வைக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸை வதக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் இறக்கி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீரில் பால், சோள மாவுக் கரைசலைச் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும். ஒரு கொதி வந்ததும், மிளகுத்தூள், மல்லித்தழை தூவி இறக்க வேண்டும். பரிமாறும் முன்னர் பிரெட் துண்டுகளைச் சேர்க்க வேண்டும்.

பலன்கள்: வைட்டமின் K நிறைந்துள்ளது. அல்சைமர் எனும் மறதிநோயைக் கட்டுப்படுத்தும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், மார்பகம், குடல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும். கெட்ட கொழுப்பைக் கரைத்து, இதயத்தைப் பாதுகாக்கும்.

புரதச்சத்து

திசுக்களின் வளர்ச்சி மற்றும் பழுது நீக்கத்துக்கு அவசியமாகிறது. நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட உதவுகிறது. தசைகளைப் பாதுகாக்கிறது. உணவு செரிமானத்துக்கான என்ஸைம்கள் மற்றும் ஹார்மோன்கள் சுரக்க அவசியமாகிறது. ஒரு கிராம் புரதத்தில் நான்கு கலோரிகள் உள்ளன.

கார்போஹைட்ரேட் இல்லாதபோது, நம்முடைய உடல், புரதத்தை ஆற்றலாக மாற்றிப் பயன்படுத்துகிறது.

முட்டை, பால் பொருட்கள், இறைச்சி, கடல் உணவுகள், பருப்பு வகைகள், பாதாம் உள்ளிட்ட நட்ஸ் வகைகள், வித்துக்களில் புரதச்சத்து நிறைவாக உள்ளது.

உணவு நல்லது வேண்டும்!