Published:Updated:

“எப்படிங்க நான் இவ்ளோ அறிவோட இருக்கேன்?”

“எப்படிங்க நான் இவ்ளோ அறிவோட இருக்கேன்?”
பிரீமியம் ஸ்டோரி
“எப்படிங்க நான் இவ்ளோ அறிவோட இருக்கேன்?”

நா.சிபிச்சக்கரவர்த்தி

“எப்படிங்க நான் இவ்ளோ அறிவோட இருக்கேன்?”

நா.சிபிச்சக்கரவர்த்தி

Published:Updated:
“எப்படிங்க நான் இவ்ளோ அறிவோட இருக்கேன்?”
பிரீமியம் ஸ்டோரி
“எப்படிங்க நான் இவ்ளோ அறிவோட இருக்கேன்?”
“எப்படிங்க நான் இவ்ளோ அறிவோட இருக்கேன்?”

``போனா வாரம் முத்தரசன்... இந்த வாரம் நானா தம்பி? சரி, கேளுங்க'' எனப் பொறுமையாகப் பேசுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

``நான் ஜி.கே-ல ரொம்ப புவர். ட்விட்டர்லதான் நியூஸையே படிப்பேன். நிச்சயமா நீங்க அதுல இருந்து கேட்க மாட்டீங்க. நாம வேற ஏதாவது பேசலாமா?'' என, சந்தேகத்துடன் கேட்கிறார் நடிகை மனிஷா யாதவ்.

``ஒ
ரு மாசமாவே நான் தீவிரமான கிரிக்கெட் பயிற்சியில் இருக்கேன். புதுசா 2,000 ரூபாய் நோட்டு வந்திருப்பதைத் தாண்டி ஒரு நியூஸுமே தெரியாது. கொஞ்சம் அப்படி இப்படி ஹெல்ப் பண்ணி, என்னை பாஸ் பண்ணிவிட்டுடுங்க... ப்ளீஸ்!'' என, தொடக்கத்திலேயே உதவி கேட்கிறார் கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்.

``நான் படிப்புல கில்லி. ஸ்கூல், காலேஜ்னு எல்லாத்துலயும் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடன்ட். இந்தப் பரீட்சையிலும் நல்ல மார்க் வாங்குறேன் பாருங்க'' என நம்பிக்கையாகப் பேசுகிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளினி வி.ஜே மணிமேகலை.

“எப்படிங்க நான் இவ்ளோ அறிவோட இருக்கேன்?”

``எந்தச் செயற்கைக்கோளின் படம் புதிய 2,000 ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ளது?''

பதில்: மங்கள்யான்.

ஜி.ராமகிருஷ்ணன்: ``2,000 ரூபாய் நோட்டு வந்த அன்றே தோழர்கள் என்கிட்ட கொடுத்தாங்க. பார்த்துட்டுக் கொடுத்துட்டேன். வழக்கத்தில் இருந்த 1,000 ரூபாய் நோட்டைவிட கொஞ்சம் சின்னதா இருந்தது. 2,000 ரூபாய் நோட்டை வாங்கி, இதுவரைக்கும் நான் ஒரு செலவுமே பண்ணலை. ஆனால், நோட்டில் இருப்பது என்னன்னு தெரியும். மங்கள்யான். சரியா தம்பி?''

மனிஷா யாதவ்: ``ரெண்டு 2,000 ரூபாய் நோட்டு என் பர்ஸுல இருக்கு. அதை வேணும்னா செக் பண்ணி சொல்லவா? கூடாதா... நான் பாவம்ல!'' என்றவர் பதிலுக்காகக் காத்திருக்காமல் செக்செய்து, ``மங்கள்யான்'' என்றார்.

பாபா அபராஜித்: ``ப்ரோ... 2,000 ரூபாய் நோட்டு வந்திருக்குனு சொன்னதுக்காக இப்படியா சிக்கவைப்பீங்க! நோட்டுக்குப் பின்னாடி ஒரு சாட்டிலைட் படம் இருந்தது. படத்துக்குக் கீழே பேரு எழுதியிருந்ததே... `ம'லயோ... `மா'லயோ தொடங்குமே... மங்கள்யானா?'' எனச் சந்தேகமாகக் கேட்கிறார்.

மணிமேகலை: ``பொண்ணுங்க லைக் பண்றது பிங்க் கலர் நோட்டு. அதுல 14 ஸ்பெஷல் அயிட்டம் இருக்குனு படிச்சேன். நோட்டுக்குப் முன்னாடி காந்தி தாத்தா இடதுபக்கத்துல இருக்கார். நோட்டுக்குப் பின்னாடி மங்கள்யான் செயற்கைக்கோள் இருக்கு. இந்தியாவுலேயே முழுக்க முழுக்கத் தயாரிச்ச முதல் செயற்கைக்கோள் இது. ப்ரோ... நீங்க கேட்ட கேள்விக்கு எக்ஸ்ட்ரா இன்ஃபர்மேஷன் எல்லாம் சொல்லியிருக்கேன். அதனால எக்ஸ்ட்ரா மார்க் தரணும். ஓ.கே-வா?''

“எப்படிங்க நான் இவ்ளோ அறிவோட இருக்கேன்?”

``விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், மனிதர்கள் வாழ, இன்னும் எத்தனை ஆண்டுகள் மட்டுமே பூமி தகுதியானதாக இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார்?''

பதில்: 1,000 ஆண்டுகள்.


ஜி.ராமகிருஷ்ணன்: ``பிக் பேங் தியரியை எழுதிய ஸ்டீஃபன் ஹாக்கிங்தானே! புகழ்பெற்ற விஞ்ஞானியாச்சே, எதிர்காலத்தில் வேறு கிரகத்தில் நாம குடியேறினால் மனித இனம் பிழைக்கும்னு சொன்னதாகப் படிச்சேன். என்ன... 100 வருஷம் உலகம் இருக்குமா?''

மனிஷா யாதவ்: ``1,000 அல்லது 2,000 வருஷங்கள் இருக்கலாம். நான் ஒரு 80 வயசு வரைக்கும் வாழ்ந்தால் போதும்'' எனச் சிரிக்கிறார்.

பாபா அபராஜித்: ``500 வருஷங்கள் ப்ரோ. நாம குப்பை எல்லாம் போடாம, மாசுபடுத்தாமல் பூமியைக் காப்பாத்தினால், இன்னமும் சில வருஷங்கள் வாழலாம்.''

மணிமேகலை: ``ஸ்டீஃபன் ஹாக்கிங், என்னோட ஃபேவரிட் விஞ்ஞானி. அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும். கூட்டிக்கழிச்சுப் பார்த்தால், பூமி 1,000 வருஷங்கள் இருக்கலாம். சும்மா கெஸ்லதாங்க சொல்றேன். சரியா? வாரே... வாவ்! ஆண்டவன் எனக்கு எங்கேயோ அறிவைப் புதைச்சு வைச்சிருக்கான்.''

“எப்படிங்க நான் இவ்ளோ அறிவோட இருக்கேன்?”

`` `90 சதவிகித இந்தியர்கள், முட்டாள்கள்' எனச் சொன்னவர் யார்?''

பதில்: மார்க்கண்டேய கட்ஜு.


ஜி.ராமகிருஷ்ணன்: ``யாரு இப்படிச் சொன்னாங்க? என் கவனத்துக்கு வரலையே! தெரியலையே தம்பி. நீங்க வேணும்னா, என் மார்க்கை கொஞ்சம் கம்மிபண்ணிட்டு ஏதாவது குறிப்பு கொடுத்தீங் கன்னா சொல்லிடுவேன். இதைச் சொன்னவர் ஒரு அரசியல் தலைவரா? சொல்ல மாட்டீங்களா.ஹா... ஹா.... அப்ப நானே கண்டுபிடிக்கிறேன். சுப்பிரமணியன் சுவாமி? இல்லையா. அப்ப அருண் ஜெட்லி? அவரும் இல்லையா. (யோசித்தவர் திடீரென ஞாபகம் வந்தவராக) அட, கட்ஜு. அவர்தான் வாராவாரம் ஏதாவது சொல்லிட்டு இருக்காரே!''

மனிஷா யாதவ்: ``அமெரிக்காவுல ஒருத்தர் வித்தியாசமான ஹேர்ஸ்டைலோடு செலெக்ட் ஆகி இருக்காரே அவரா? இல்லையா. அப்ப, ராகுல் காந்தியா இருக்கலாம். அவரும் இல்லையா.அட போப்பா! நான் ஆட்டத்துக்கே வரலை. அதுதான் ஸ்டார்ட்டிங்லயே வேற பேசலாம்னு சொன்னேன். கேட்டீங்களா!'' எனச் செல்லமாகச் சிணுங்குகிறார்.

பாபா அபராஜித்: ``ஒரு கிரிக்கெட் ப்ளேயர் இப்படிச் சொல்ல வாய்ப்பே இல்லை. பாலிட்டிக்ஸ் பற்றி எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது. ஆனா, யாராவது ஒரு அரசியல் தலைவர்தான் இப்படிச் சொல்லி இருக்கணும். நான் வளர்ற பையன் ப்ரோ... கொஞ்சம் பார்த்து பாஸ் மார்க் போட்டுவிடுங்க.''

மணிமேகலை:
``கடைசிக் கேள்வி அவுட் ஆகிடுச்சே... நயன்தாராவா? அவங்க ஏன் இப்படிச் சொல்லணும்? தெரியலைங்க. என் ஃப்ரெண்ட்தான் அடிக்கடி இப்படிச் சொல்லிக் கிட்டு இருப்பா? நோ ஐடியா. எப்படியோ விகடன் பரீட்சையில் பாஸ் பண்ணி என் மானத்தைக் காப்பாத்திக்கிட்டேன். எப்போ ஜி எனக்கு பட்டம் தருவீங்க?''