Published:Updated:

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

Published:Updated:
விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்
விகடன் சாய்ஸ்

1. Earbuds or In-ear headphones

ஸ்மார்ட்போன்கள் வாங்கினாலே இலவசமாகக் கொடுக்கிறார்கள். காதுகளுக்கு உள்ளேயே செருகிக்கொள்ளும் குட்டியான ஹெட்போன்கள் இவை. எங்கும் எடுத்துச் செல்ல முடியும். எந்தக் கருவியோடும் இணைத்தும் பயன்படுத்தலாம்.

விகடன் சாய்ஸ்
விகடன் சாய்ஸ்

சிறியது மற்றும் எடை குறைவானது. வெளியில் இருந்து வரும் ஒலிகளை ஓரளவு தடுத்து, நல்ல ஒலி அனுபவத்தைக் கொடுக்கக்கூடியது. காதணிகள், கண்ணாடிகள், தொப்பிகள் அணிபவர்களுக்கும், நீண்ட தலைமுடி உள்ளவர்களுக்கும் ஏற்றது. விலை மலிவானது. வால்யூம் குறைப்பது, பாடல்களை மாற்றுவது என, இணைக்கப்பட்ட ஒன்று இரண்டு பட்டன்களில் பல வேலைகள் செய்ய முடியும்!

விகடன் சாய்ஸ்

ஒலியின் தரம், Bass response இரண்டும் பெரிய ஹெட்போன்கள் அளவுக்கு இருக்காது. தொடர்ச்சியாக பல மணி நேரம் பயன்படுத்துவதால் காதுமடல்களில் வலி உண்டாகலாம். சன்னமான வொயர்கள் என்பதால் அடிக்கடி சிக்கிக்கொள்ளும். அதிகமாகப் பழுதடைய வாய்ப்பு உள்ளது. செவி பாதிப்புகள் உண்டாகலாம்.

யாருக்கு? - விளையாட்டு வீரர்களுக்கு, வாகன ஓட்டிகளுக்கு, பயணிப்பவர்களுக்கு.

2. On-ear headphones

விகடன் சாய்ஸ்

காதுகள் மீதே குஷன்களின் உதவியோடு அமர்ந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப் பட்டவை இவை. காதுகளின் மேலேயே இருப்பதால் அதிக அழுத்தம் இருக்காது.  தரமான ஒலி கிடைக்கும். ஆனால், ஓவர் இயர் ஃபுல்சைஸ் மாடல்களோடு ஒப்பிடும்போது Bass Response இதில் குறைவுதான்.

விகடன் சாய்ஸ்

சொகுசானது. அதிக நேரம் உபயோகிப்பதால் காதுகளில் வலி உண்டாவது, சூடாவது மாதிரி பிரச்னைகள் இதில் அறவே இருக்காது. ஹை-எண்ட் மாடல்கள் பயன்படுத்தினால் ஒலிகள் துல்லியமாகக் கேட்கும்.

விகடன் சாய்ஸ்

புற ஒலிகளைத் தடுப்பதில் இயர்பட்ஸைவிடவும் இதில் வாய்ப்புகள் குறைவுதான். நம்மால் வெளிப்புறச் சத்தங்களையும் கேட்க முடியும். பக்கத்தில் இருப்பவர்களுக்குக்கூட நாம் கேட்கும் விஷயங்கள் ஓரளவு கேட்கும். லைப்ரரியில் பயன்படுத்தினால் வெளியேற்றப் படுவோம்!

யாருக்கு? - உடற்பயிற்சி செய்யும்போது பயன்படுத்தலாம். நல்ல ஒலி அமைப்பையும், சின்னச்சின்ன ஒலிகளையும் கவனிக்க நினைப்பவர்களுக்கும் ஏற்றது.

3. Full-size headphones அல்லதுஓவர் தி இயர் ஹெட்போன்

விகடன் சாய்ஸ்

காதுகளைச் சுற்றி வெளிப்புறமாக மெத்து மெத்தென அமர்ந்துகொள்ளும் (குஷன்கள் உதவியோடு) சொகுசான ஹெட்போன்கள் இவை. சவுண்ட் குவாலிட்டியில் இதுதான் டாப். வெளிப்புறச் சத்தங்களின் தொந்தரவுகள் இல்லாமல், குறைந்த வால்யூமில் தரமான இசையோ, ஒலியோ இதில் கேட்க முடியும்.

விகடன் சாய்ஸ்

அதிக Bass மற்றும் அதிக ஒலியைக் கேட்க முடியும். சின்னச்சின்ன சத்தங்களைக்கூட துல்லியமாகக் கேட்க முடியும்.

விகடன் சாய்ஸ்

சைஸ்தான். அங்கும் இங்கும் தூக்கிக்கொண்டு அலைய முடியாது. அதிக நேரம் பயன்படுத்தினால் சில மாடல்கள் சூடாகிவிடுமா எனக் கவனித்து வாங்க வேண்டும்.

யாருக்கு? -  புற ஒலிகள் இல்லாமல் லேப்டாப், டேப்லெட்டில் படம் பார்க்க நினைப்பவர்களுக்கு,  தரமான ஒலி அமைப்பை விரும்புகிறவர்களுக்கு.

4. Wireless headphones அல்லது Bluetooth headphones

விகடன் சாய்ஸ்

வொயர்களை வெறுப்பவர்களுக்கு ஏற்றது. புளூடூத் தொழில்நுட்பத்தின் வழியாக இயங்கும் இந்த வகை ஹெட்போன்கள்தான் சமீபத்திய ட்ரெண்ட். வொயர்கள் இல்லாமல்போவதால் இந்த வகை ஹெட்போன்களில் ஒலியின் தரத்தில் நிச்சயம் குறைகள் இருக்கவே செய்யும்.

விகடன் சாய்ஸ்

வொயர்கள் கிடையாது. குறைவான விலையிலேயே கிடைக்கிறது. இதிலேயே இயர்பட்ஸ், ஓவர் இயர் மாடல்களும் கிடைக்கிறது. டி.வி., ஆடியோ சிஸ்டம், ஸ்மார்ட்போன் என எதிலும் இணைத்து புளூடூத் வழியே எதையும் கேட்கலாம்.

விகடன் சாய்ஸ்

பேட்டரியில் இயங்குவதால், அடிக்கடி சார்ஜ் போடவேண்டியிருக்கும். ஒலியின் தரம், வொயர்கள் உள்ள ஹெட்போன்களைவிடவும் குறைவு.

யாருக்கு? நிறையப் பயணிக்கிறவர்களுக்கு, வொயர்களை விரும்பாதவர்களுக்கு, வீட்டில் வெவ்வேறு அறைகளில் இருந்துகொண்டே பாடல் கேட்க நினைப்பவர்களுக்கு.

விகடன் சாய்ஸ்

ஹெட்போன் வாங்கும்போது கவனிக்கவேண்டியவை:

* எதற்காக ஹெட்போன் வாங்குகிறோம், அதை எங்கு எல்லாம் பயன்படுத்தப்போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும். அது, எந்த வகையை வாங்குவது என்பதைத் தீர்மானிக்க உதவும்.

* காதில் மாட்டி ஒலியை மட்டும் கவனிக்காமல், அது காதோடு சரியாகப் பொருந்தி இருக்கிறதா, வெளிப்புற ஒலிகளின் தொந்தரவு இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

* ஃபுல்சைஸ் ஹெட்போன் வாங்கும்போது அதன் எடை என்ன என்பதைக் கவனிக்க வேண்டும்.  

விகடன் சாய்ஸ்* ஹெட்போன் என்பது, ஆறு மாதங்கள் பயன்படுத்தப்படும் யூஸ் அண்ட் த்ரோ அயிட்டம் அல்ல. அதை வாங்கும்போது தரமானதாக, கொஞ்சம் விலை அதிகமானாலும் நல்ல பிராண்டட் பொருளாக வாங்கலாம்.

* சவுண்ட் குவாலிட்டிதான் முக்கியம் என நினைத்தால், வொயர்கள் உள்ள ஹெட்போன்களே நல்ல சாய்ஸ்.   

* ஹெட்போனில் எந்த மாதிரியான பாடல்கள் அல்லது இசை கேட்கப்போகிறீர்களோ, அதைக் கேட்டுப்பாருங்கள். அந்த ஒலி எப்படி இருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

* ஹெட்போன் கேபிளின் நீளம் பார்த்து வாங்கவும்.

* வொயர்லெஸ் ஹெட்போன்கள் வாங்கும்போது இணைப்புக் கருவியில் இருந்து எவ்வளவு தூரத்துக்கு அப்பால் வரை வேலைசெய்கிறது என்பதைக் கவனிக்கவும்.

Wired Vs Wireless  

Wired - தரமான ஒலிதான் இதன் மிகப்பெரிய அட்வான்டேஜ். அதோடு இவை நேரடியாக இணைக்கப்பட்ட கருவியின் வழியே மின்சாரத்தைப் பெறுவதால் பேட்டரி குறைந்துவிடும் என்ற அச்சமின்றி பயன்படுத்தலாம்.

Wireless - வீட்டின் எந்த மூலையிலும் இருந்தபடி ஆம்லேட் போட்டுக் கொண்டேகூட பாட்டு
கேட்கலாம். ஸ்மார்ட்போன்களில் இணைத்துக்கொண்டால் போன் கால்களையும் அட்டெண்ட் பண்ண முடியும். மாரத்தான் ஓட்டக்காரர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் ஏற்றது.

அதிக விலை  உள்ளதே தரமானதா?

* நிச்சயமாக இல்லை. குறைந்த விலையில்கூட தரமான ஹெட்போன்கள் கிடைக்கின்றன. ஒலி குறித்த நம்முடைய அறிவுக்கு ஏற்ப ஹெட்போன் களை வாங்கலாம். நிறைய காசு இருக்கிறதே என்று பல ஆயிரங்களுக்கு வாங்குவதால் எந்த உபயோகமும் இல்லை.