Published:Updated:

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

சிறுதானியக் கஞ்சி

உணவு நல்லது வேண்டும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தேவையானவை: வரகு, சாமை, குதிரைவாலி - அனைத்தும் சேர்ந்தது அரை கப், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மோர் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இரண்டு கப் நீர் விட்டு, சிறுதானியங்களை உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். வெந்ததும், மிளகு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கி, சிறிது ஆறியதும் மோர் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: காலை உணவாக இந்தச் சிறுதானியக் கஞ்சியை அருந்திவர, சர்க்கரை நோய் விரைவில் கட்டுப்படும். எடைக் குறைப்புக்கு உதவும்; கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். மிளகு - சீரகம், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்; புற்றுநோய் செல்களை அழிக்கும். இதனுடன் பெருங்காயமும் இணைந்து செரிமானத்தைச் சீராக்கும்.

கொழுப்புச்சத்து

சரிவிகித உணவில் கொழுப்புச்சத்தும் ஒன்று. நம்முடைய உடல் எந்தப் பாதிப்பும் இன்றி இயங்க, சிறிய அளவில் நல்ல கொழுப்பும் தேவை. ஆனால், நம்முடைய அன்றாட உணவில் தேவையைக் காட்டிலும் அதிக அளவில் கொழுப்புச்சத்து உள்ளது. அதுவும், பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கிறது. இதுவே உடல் பருமன், கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பு என, பல பிரச்னைகளுக்குக் காரணம்.

வைட்டமின் ஏ, டி, இ மற்றும் கே ஆகியவை கொழுப்பில் கரைவதன் மூலமே உடலுக்குப் பலன் கிடைக்கும். இதய பாதுகாப்புக்கு, நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்க, மூளையின் செயல்திறன் மேம்பட, கொழுப்பில் உள்ள அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்கள் தேவை.

அவகேடோ, டார்க் சாக்லேட், முட்டை, எண்ணெய்ச்சத்து உள்ள மீன், நட்ஸ் வகைகள், நல்லெண்ணெய் (அதிகம் சூடுபடுத்தாதது) உள்ளிட்டவற்றில் நல்ல கொழுப்பு நிறைவாக உள்ளது.

முளைப்பயறு சாமை சாலட்

உணவு நல்லது வேண்டும்!

தேவையானவை: முளைகட்டிய பயறு - ஒரு கப், தக்காளி, வெங்காயம், கேரட் - தலா 1, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், வேகவைத்த சாமை - கால் கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, பொடித்த வேர்க்கடலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தக்காளி, வெங்காயம், கேரட்டைப் பொடியாக நறுக்கவும். முளைகட்டிய பயறை, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள், முளைப்பயறு, வேகவைத்த சாமை அரிசி சேர்த்துக் கலக்கவும். எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள், ஆலிவ் எண்ணெய் இவற்றைச் சேர்த்து, நன்றாகக் கலக்கி, இதனுடன் புதினா, கொத்தமல்லி பொடித்த வேர்க்கடலையைத் தூவிப் பரிமாறவும்.

பலன்கள்: முளைகட்டிய பயறில் வைட்டமின் சி, புரதம் மிக அதிகமாகவும் வைட்டமின் கே, இரும்பு, கால்சியம் போன்றவை ஓரளவும் இருக்கின்றன. எலுமிச்சை சேர்ப்பதால், இரும்புச்சத்து கிரகிக்கப்படுவது எளிதாக இருக்கும். சாமையில் மாவுச்சத்து மற்றும் பீட்டாகரோட்டின் ஓரளவு இருக்கின்றன. போதிய வளர்ச்சியின்றி இருக்கும் பெண் குழந்தைகளுக்கு, இந்த சாலட்டை தினமும் கொடுக்கலாம். உடல் வளர்ச்சிக்கு உதவும். பெண்களுக்கு ரத்தசோகை வராமல் தடுக்கும்.