Published:Updated:

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

Published:Updated:
உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!
உணவு நல்லது வேண்டும்!

நிலக்கடலை - இலை அடை

உணவு நல்லது வேண்டும்!



தேவையானவை: கோதுமை மாவு - சப்பாத்திக்குத் தேவையான அளவு, வறுத்த நிலக்கடலை - 20 கிராம், வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் - சிறிதளவு.

செய்முறை: கோதுமை மாவை சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து, சிறிய வட்டமாகத் தட்டிக்கொள்ளவும். நிலக்கடலையுடன் வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், துருவிய தேங்காய் சேர்த்துக் கிளறிவிடவும். பிறகு, இலையில் இருக்கும் சப்பாத்தியின் மேல், பூரணத்தை வைத்து, இலை அடையை  இரண்டாக மடித்து வேகவைத்து இறக்கவும்.

பலன்கள்: புரதச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்து நிறைந்த உணவு இது. விளையாட்டு வீரர்கள், குழந்தைகள், ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு. உடல் பருமனாக இருப்பவர்கள், அளவுடன் சாப்பிட வேண்டும்.

உணவு நல்லது வேண்டும்!

பார்லி கஞ்சி

தேவையானவை: பார்லி அரிசி - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பார்லி அரிசியை வாணலியில் லேசாக வறுத்து, மிக்ஸியில் ரவை பதத்துக்கு உடைக்க வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் நீர் விட்டு, கொதித்ததும் பார்லி ரவையைப் போட்டுக் கொதிக்கவிடவும். வெந்ததும் இறக்கி, உப்பு சேர்த்துப் பருகலாம்.

வேறுமுறை: இரண்டு கப் நீரைக் கொதிக்கவைத்து, பார்லி அரிசியைப் போட்டு 20 நிமிடங்கள் மூடிவைத்து வடிகட்டி, உப்பு சேர்த்துப் பருகலாம். வடிகட்டிய பார்லி அரிசியில், மீண்டும் இரண்டு கப் வெந்நீர் விட்டு, மூடிவைத்து 20 நிமிடங்கள் கழித்து வடிகட்டிப் பருகலாம். இதன் மூலம், ஒரே பார்லி அரிசியை இருமுறை பயன்படுத்தலாம்.

பலன்கள்: கர்ப்பிணிகள் இதைக் குடித்தால், கால் வீக்கம் குறைவதுடன் சிறுநீர் எளிதில் வெளியேறும். இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், துத்தநாகம் நிறைவாக உள்ளதால், எலும்பு உறுதியாகும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவும். ஃபோலேட், வைட்டமின் பி6 நிறைவாக உள்ளதால், இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும். இதில் உள்ள செலீனியம், கல்லீரல் செயல்திறனை மேம்படுத்தி, புற்றுநோயை ஏற்படுத்தும் சில வகையான நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

நார்ச்சத்து

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்து போன்றவை, செரிமானத்தின்போது சிதைக்கப்பட்டுக் கிரகிக்கப்படும். ஆனால், நார்ச்சத்து சிதைக்கப்படுவது இல்லை. நம்முடைய செரிமான மண்டலத்தால் செரிக்க முடியாத பொருளாக நார்ச்சத்து உள்ளது. ஆனால், சிறுகுடல், பெருங்குடல் வழியாக மலக்குடல் நோக்கிய செரிமானம் ஆன உணவின் பயணத்தில் சங்கிலிப் பிணைப்புபோல இணைத்து வெளியேற்ற உதவுகிறது. நீரில் கரையக்கூடியது, கரையாதது என இரண்டு வகைகளில் இது இருக்கிறது. காய்கறி, பழங்கள், முழதானியங்களில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. மைதா போன்ற பதப்படுத்தப்பட்ட, பக்குவப்படுத்தப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து நீக்கப்படுகிறது.