Published:Updated:

இப்போ ‘நாட்டுக்குறள்’... அடுத்து ‘இன்பத்து பாப்’!

இப்போ ‘நாட்டுக்குறள்’... அடுத்து ‘இன்பத்து பாப்’!
பிரீமியம் ஸ்டோரி
இப்போ ‘நாட்டுக்குறள்’... அடுத்து ‘இன்பத்து பாப்’!

வெ.நீலகண்டன் - படம்: குமரேசன்

இப்போ ‘நாட்டுக்குறள்’... அடுத்து ‘இன்பத்து பாப்’!

வெ.நீலகண்டன் - படம்: குமரேசன்

Published:Updated:
இப்போ ‘நாட்டுக்குறள்’... அடுத்து ‘இன்பத்து பாப்’!
பிரீமியம் ஸ்டோரி
இப்போ ‘நாட்டுக்குறள்’... அடுத்து ‘இன்பத்து பாப்’!
இப்போ ‘நாட்டுக்குறள்’... அடுத்து ‘இன்பத்து பாப்’!

“அவ ஊரு என்ன பேரு என்ன
ஒண்ணுந்தெரியல அவ
பொம்பளையா தேவதையா
தெரிஞ்சா தேவல!

தேனோட தினைவௌயும்
தெக்கித்திக் காடு நான்
காவலுக்குப் போயிருந்தேன்
அவ கன்னியில நான் விழுந்தேன்

யாரிவ ஊர்வசியா?
ஆண்கொத்தி மோகினியா?
கண்ணுமுழி ரெண்டிலயும்
கரன்டு வச்ச பாதகியா?

கால் மொளச்ச ஓவியமா?
கண்டாங்கி லேகியமா?
காட்டாம மறச்சுவெச்ச
கட்டழகு ரகசியமா?


இது எந்தப் படத்தில், எந்தப் பாடலாசிரியர் எழுதிய பாடல்?

இப்போ ‘நாட்டுக்குறள்’... அடுத்து ‘இன்பத்து பாப்’!

`அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு' என்ற இன்பத்துப்பால் திருக்குறளின் நாட்டுப்புறப்பாட்டு வடிவம் இது. எழுதியவர், ஒடிசா மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

200-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள், பல்வேறு துறைகளில் உயர்பொறுப்பு வகிப்பவர்கள் இணைந்து `வள்ளுவர் குடும்பம்' என்ற வாட்ஸ்அப் குழுவை நடத்துகிறார்கள். திருக்குறள் சார்ந்த ஆய்வுகள், சந்திப்புகள், கவிதைகள் எனப் பரபரப்பாக இயங்குகிறது இந்தக் குழு.திருக்குறள் இன்பத்துப்பாலில் ஏழு குறள்களைத் தேர்வுசெய்து, அதை அடிப்படையாகக் கொண்டு நாட்டுப்புறப் பாடல்களை எழுதி, `நாட்டுக்குறள்' என்ற பெயரில் ஆல்பம் வெளியிட்டுள்ளனர் இந்தக் குழுவினர். இந்தப் பாடல்களுக்கு டிராட்ஸ்கி மருது தன் தூரிகையால் உருவம் கொடுக்க, அழகான பாட்டுப் புத்தகமாகவும் `நாட்டுக்குறள்’ உருவாகியிருக்கிறது. தாஜ்நூர் இசையில் சின்னப் பொண்ணு, அந்தோணிதாஸ், வேல்முருகன் என அசல் நாட்டுப்புற மனிதர்களே பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். அழகிய குறள் முன்னுரையோடு தொடங்கும் பாடல்களில் காதலும் கனிவும் ததும்புகின்றன.

இப்போ ‘நாட்டுக்குறள்’... அடுத்து ‘இன்பத்து பாப்’!

சமீபத்தில் சென்னையில் நடந்த  வெளியீட்டு விழாவில், `நாட்டுக்குறள்’ ஆல்பத்தை கவிஞர் வைரமுத்து வெளியிட, திருச்சியைச் சேர்ந்த திருக்குறள் சிறுமிகள் சூர்யா, உமா, காவ்யா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

“`வள்ளுவர் குடும்பம்' வாட்ஸ்அப் குழுமம்,

விளையாட்டாக ஆரம்பித்த விஷயம். இதை சுங்கத் துறை அதிகாரி ராஜேந்திரன்தான் ஆரம்பித்தார். இதில் இப்போது 205 பேர் உறுப்பினராக, எல்லா தரப்பு மனிதர்களும் இருக் கிறார்கள்'' என அறிமுகம் கொடுக் கிறார் பாலகிருஷ்ணன்.

ஒருமுறை விமானத்தில் பயணம் செய்தபோது, அருகில் இருந்த ஒரு தொணதொண ஆசாமியிடம் இருந்து தப்பிக்க, தன் அலைபேசியில் செயலி மூலமாக திருக்குறளை வாசிக்க ஆரம்பித்திருகிறார் பால கிருஷ்ணன். இன்பத்துப்பாலில் ஒரு குறள் அவரை மிகவும் கவர, அதைவைத்து ஒரு கவிதையை அப்போதே அலைபேசியில் எழுதி, `வள்ளுவர் குடும்பம்’ வாட்ஸ்அப் குரூப்பில் போட்டிருக்கிறார். ஆளாளுக்குப் பாராட்ட, தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்ததுதான் இந்த `நாட்டுக்குறள்’!

இப்போ ‘நாட்டுக்குறள்’... அடுத்து ‘இன்பத்து பாப்’!

``வேலைப்பளு பயங்கரமாக அழுத்தும். ஆனாலும், எந்தச் சூழலிலும் எழுதாமல் இருந்தது இல்லை. பட்ஜெட் எழுதிக்கொண்டிருப்பேன். இரவு 10 மணிக்கு முடித்துவிட்டு ஒரு கவிதையைப் போடுவேன். வாக்கிங் போகும்போதே திருக்குறளைத் தேர்வுசெய்வேன். அதன் பிறகு அன்று முழுவதும் அதை மனதில்வைத்து கவிதையாகவோ, கதையாகவோ மாற்றுவேன். மீட்டிங் நடுவில் காரில் போகும்போது, மதிய உணவு இடைவேளை... எனக் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அதை முழுமைசெய்வேன். இப்படி 200-க்கும் மேற்பட்ட கவிதைகள், கதைகள் எழுதியிருக்கிறேன். எனக்குள் முனைப்பான ஒரு கவிஞன் இருப்பதை `வள்ளுவர் குடும்பம்'தான் உணர்த்தியது'' எனச் சிரிக்கிறார் பாலகிருஷ்ணன்.

ஒடிசாவில் பணியாற்றிய தொடக்கக் காலங்களில் எழுத்தாளர் கணநாத் தாஸ், திருக்குறளை ஒரியாவில் மொழிபெயர்க்கத் துணையாக இருந்தார் பாலகிருஷ்ணன். ஒடிசாவின் கலாசாரச் செயலாளராக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட ஒடிசா பண்பாட்டுப் பல்கலைக்கழகத்தில், தமிழக அரசின் உதவியோடு திருக்குறளுக்கு என ஓர் இருக்கையைத் தொடங்கியிருக்கிறார்.

இப்போ ‘நாட்டுக்குறள்’... அடுத்து ‘இன்பத்து பாப்’!

``கடந்த 28 ஆண்டு கால சிந்துச்சமவெளி நாகரிகம் பற்றிய என் ஆய்வில் நான் கண்டடைந்த பெரிய உண்மை சிந்துச்சமவெளியும் கீழடியும் திருக்குறளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதுதான். நாம் வாழ்ந்துகொண்டிருப்பது, பிராண்ட்களின் காலம். நிறுவனம் முதல் நாடு வரை எல்லாவற்றுக்கும் பிராண்ட் அவசியம். அப்படி தமிழர்களின் பிராண்ட், திருவள்ளுவர். ஆனால், நாம் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவே இல்லை. முனிவராக்கி, நாயனாராக்கி உயரத்தில் வைத்துவிட்டோம். திருவள்ளுவர், மனிதத்தைப் பாடிய மகா மனிதர். திருக்குறள், மனிதத்தைப் பாடிய மகா சாசனம்.

வரலாற்று ஆய்வாளர்கள் கைவிட்ட பணியை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம். அதற்கான தொடக்கமே `நாட்டுக்குறள்’. இன்பத்துப்பாலைத் தேர்வுசெய்யக் காரணம், திருக்குறள் பற்றிய கற்பிதங்களை உடைப்பதுதான். இன்பத்துப்பாலைத் தீண்டத்தகாத பகுதியாகப் பார்த்துப் பழகிவிட்டோம். திருக்குறள், யதார்த்த இலக்கியம். அதை உணர்த்துவதற்காகத்தான் இன்பத்துப்பாலில் இருந்து தொடங்குகிறோம்.

வள்ளுவர், அறத்துப்பாலில் ஒரு மகானாகவும், பொருட்பாலில் பொருளாதார நிபுணராகவும் இருப்பார். இன்பத்துப்பாலில்தான் கவிஞராக இருப்பார். `நாட்டுக்குறளை அடுத்து, திருக்குறளை பாப் வடிவத்தில் கொண்டுவர இருக்கிறோம். அதற்கான பாடல்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். பெயர், இன்பத்து பாப்'' - உற்சாகமாகச் சொல்கிறார் பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.