Published:Updated:

“பெண்ணாகப் பிறந்ததற்கு வருத்தப்பட்டது உண்டா?”

“பெண்ணாகப் பிறந்ததற்கு வருத்தப்பட்டது உண்டா?”
பிரீமியம் ஸ்டோரி
“பெண்ணாகப் பிறந்ததற்கு வருத்தப்பட்டது உண்டா?”

ஜெயலலிதா பேட்டி

“பெண்ணாகப் பிறந்ததற்கு வருத்தப்பட்டது உண்டா?”

ஜெயலலிதா பேட்டி

Published:Updated:
“பெண்ணாகப் பிறந்ததற்கு வருத்தப்பட்டது உண்டா?”
பிரீமியம் ஸ்டோரி
“பெண்ணாகப் பிறந்ததற்கு வருத்தப்பட்டது உண்டா?”
“பெண்ணாகப் பிறந்ததற்கு வருத்தப்பட்டது உண்டா?”

‘‘தங்களைக் கவர்ந்த மேடைப் பேச்சாளர் யார்... ஏன்?’’

‘‘பேரறிஞர் அண்ணா! தமிழக மேடைகளில் அவர் ஆற்றிய உரைகளும், நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளும் இன்றும் வளரும் தலைமுறையினருக்குப் பாடங்கள்.’’

‘‘ ‘எம்.ஜி.ஆர் தனது கடைசிக் காலத்தில் அ.தி.மு.க-வை தி.மு.க-வில் இணைத்துவிட முயன்றார்’ என சில பத்திரிகைகளில் செய்தி வந்ததே. அது உண்மையா?’’

‘‘அது, கடைந்தெடுத்த கற்பனை; கலப்படம் இல்லாத பொய்.’’

‘‘பெண்ணாகப் பிறந்துவிட்டோமே என்று என்றைக்காவது வருத்தப்பட்டது உண்டா?’’

‘‘நிச்சயமாக இல்லை.’’

‘‘நடிகர் திலகம், மக்கள் திலகம்... இருவரும் தங்களை எந்த விதத்தில் கவர்ந்தார்கள்?’’

‘‘நடிகர் திலகம், தனது இணையற்ற நடிப்பால் என்னைக் கவர்ந்தவர். மக்கள் திலகம், கலைத் துறையிலும் அரசியல் துறையிலும் எனக்கு ஆசானாகத் திகழ்ந்தவர்.’’

‘‘தங்களுக்குப் பிடித்த பொன்மொழி எது?’’

‘‘ ‘அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை’ என்ற அப்பர் பெருமானின் பொன்மொழி.’’

‘‘தங்களின் அரசியல் வளர்ச்சியை அருகில் இருந்து பார்க்காத உங்களது தாயாரின் நினைவுகள் பற்றி?’’

‘‘அம்மா இருந்திருந்தால், இந்தக் கேள்விக்கே இடம் இருந்திருக்காது. ஏனென்றால், என்னை அவர் அரசியலில் நுழைய அனுமதித்திருக்கவே மாட்டார்.’’

“பெண்ணாகப் பிறந்ததற்கு வருத்தப்பட்டது உண்டா?”

‘‘உங்களைக் கவர்ந்த இதிகாசப் பாத்திரம் எது... ஏன்?’’

‘‘பீஷ்மர்!

பொதுவாக வாலிப வயதில் இளைஞர்கள், வாழ்க்கையின் எல்லா சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை உடையவர்களாக இருப்பார்கள். இல்லற வாழ்க்கை என்ன என்றே தெரியாத இளைஞராக இருந்த பீஷ்மர், வாழ்க்கையைப் பற்றி எத்தனையோ ஆசைக் கனவுகளைக் காணக்கூடிய வயதில், ஏற்கெனவே வாழ்ந்து முடித்துவிட்ட தனது தகப்பனாரின் மறுமண ஆசையை நிறைவேற்றிவைப்பதற்காக, தனது வாழ்க்கையையே தியாகம் செய்தார். கடைசி வரை தனது சபதத்தில் இருந்து அணு அளவும் பிறழவில்லை. அதுமட்டுமா, அந்த அரசக்குலத்துக்கே கடைசி வரை பிதாமகராக வாழ்ந்துகாட்டினார். இப்படிப்பட்ட ஒரு தியாகச் செம்மலை வேறு எந்த இதிகாசத்திலும் உலக இலக்கியங்களிலும் காண முடியாது.

ஈடு இணையற்ற தியாகத்தாலும் தூய பண்புகளாலும் என்னைக் கவர்ந்த இதிகாசப் பாத்திரம் பீஷ்மர்தான்.’’

‘‘தங்களுக்குள் ஒரு ‘சர்வாதிகாரி’ ஒளிந்திருப்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?’’

‘‘எந்த ஒரு பெரிய இயக்கத்தின் தலைவரும் வலிமை உள்ளவராக இருந்தால்தான், தலைமைப் பொறுப்பை வெற்றிகரமாக வகிக்க முடியும்.

ஓர் ஆண் அப்படி விளங்கினால் ‘வலிமையானவர்’ என்று போற்றுவீர்கள். அவ்வாறே ஒரு பெண் விளங்கினால், அதுமட்டும் சர்வாதிகாரமா?’’

“பெண்ணாகப் பிறந்ததற்கு வருத்தப்பட்டது உண்டா?”

‘‘காந்தி, நேரு, பெரியார், காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்... இவர்களில் ஒருவருக்கு உங்களால் உயிர்கொடுக்க முடியும் என்றால், யாருக்குக் கொடுப்பீர்கள்... ஏன்?’’

‘‘நிச்சயமாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்குத்தான். அவர் மட்டும் இருந்தால், இந்தத் தலைமைப் பொறுப்பு, பணிச்சுமை, மனஉளைச்சல் இவற்றில் இருந்து நான் தப்பித்துக்கொள்ளலாம் அல்லவா!’’

‘‘உங்களைக் கவர்ந்த அரசியல்வாதி யார்?’’

‘‘சர்வதேச அளவில், திருமதி.மார்க்ரெட் தாட்சர், இந்திய அளவில் அன்னை இந்திரா காந்தி, தமிழக அளவில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.’’

‘‘மக்கள் திலகம் புரட்சித் தலைவருடன் இணைந்து நடித்தது, அரசியலில் இணைந்து பணியாற்றியது...  எதைப் பெருமையாகக் கருதுகிறீர்கள்?’’


‘‘இரண்டுமே பெருமைக்கு உரியவைதான். கலைத் துறையில் இணைந்ததன் தொடர்ச்சிதான்  என் பொதுவாழ்வின் வளர்ச்சி.’’

‘‘தங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் என்று எதைக் கருதுகிறீர்கள்?’’

‘‘ஒன்றா, இரண்டா வார்த்தைகளில் சொல்ல.’’

‘‘கடந்த காலத்தில் தாங்கள் செய்த மிகப்பெரிய தவறு என்று எதைக் கருதுகிறீர்கள்?’’

‘‘முதலமைச்சராக இருந்த காலத்தில், ஆட்சி நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்தி, கட்சிக் காரர்களைச் சந்திப்பதிலும் பத்திரிகையாளர் களைச் சந்திப்பதிலும் அதிகக் கவனம் செலுத்தாததுதான்.’’

“பெண்ணாகப் பிறந்ததற்கு வருத்தப்பட்டது உண்டா?”

``செல்வி ஜெயலலிதா, கொள்கைபரப்புச் செயலாளர் என்ற முறையிலும், சாதாரணத் தொண்டர் என்ற முறையிலும் பல அரிய சேவைகளைச் செய்துவருகிறார். அதற்கு நானும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் கடமைப்பட்டுள்ளோம்!’’

- எம்.ஜி.ஆர்.