மணத்தக்காளி கீரைத் துவையல்

தேவையானவை: மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு, மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பூண்டு - 4 பல், இஞ்சி - ஒரு துண்டு, தேங்காய் - ஒரு கீற்று, கடலைப் பருப்பு - ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப.

செய்முறை: கீரையை நன்றாகச் சுத்தம்செய்து, மஞ்சள்தூள் சேர்த்து வாணலியில் போட்டு வதக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கீரை தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு, அனைத்தையும் சேர்த்துத் துவையலாக அரைக்கவும். சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.

பலன்கள்: குடல், வாய், நாக்கு, தொண்டையில் ஏற்படும் புண்களுக்கு மிகச்சிறந்த நிவாரணி. உடல் மெலிந்தவர்களுக்கு ஊட்டம் தரும். குடியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சாப்பிட, குடிப்பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீள்வர். கல்லீரல், சிறுநீரகத்தைக் காக்கும். பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, சி, சில வகை பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நிறைவாக உள்ளன.

விஷத்தை முறிக்கலாம்!

காய்கறி, பழங்களில் பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து, இயற்கைமுறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்களை வாங்கிச் சாப்பிடுவது நல்லது. முடியாதவர்கள், சிறிது புளியைக் கரைத்து, அந்த நீரில் கொஞ்சம் வினிகரைக் கலந்துகொள்ளுங்கள். அந்தக் கலவையில் காய்கறி, பழங்களை 15 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவினால், காய்கறி, பழங்களில் உள்ள ரசாயனம் 95 சதவிகிதம் நீங்கிவிடும். பீன்ஸ், பாகற்காய், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகளை, மஞ்சள்தூள் போட்டு மூன்று முறைக்கு மேல் கழுவுவது நல்லது.

கதம்ப சிறுதானிய சூப்

தேவையானவை: குதிரைவாலி, வரகு, சாமை, பாசிப் பருப்பு - தலா 50 கிராம், தேங்காய்ப்பால் - ஒரு கப், பூண்டு - 4 பல், மிளகுத்தூள், உப்பு - சுவைக்கேற்ப, கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, சிறிய வெங்காயம் - 10, சீரகம் - அரை டீஸ்பூன்.

செய்முறை: அனைத்து சிறுதானியங்களையும் கழுவி சுத்தம்செய்து, நீர் சேர்த்து ஊறவைக்கவும். தானியங்கள் ஊறிய தண்ணீரோடு அப்படியே அடுப்பில் வைத்து, பாசிப் பருப்பு சேர்த்து, கஞ்சிப்பதம் வரும் வரை வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு, சிறிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, வேகவைத்த கலவையை ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு, தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும். தேவையான அளவு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாற வேண்டும்.

பலன்கள்: கலோரியைக் குறைப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு, நிறைவான உணவு. வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைந்தது. சிறுதானியங்கள், சர்க்கரைநோய் மற்றும் இதய நோய்க்கான வாய்ப்பைத் தடுக்கின்றன.