பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!

மருந்து சாதம்

தேவையானவை: சுக்கு - ஒரு துண்டு, வெள்ளை மிளகு - 2 டீஸ்பூன், திப்பிலி - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி. இவை அனைத்தையும் வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். வெங்காயம் - 2, பூண்டு - 5 பல், உப்பு - தேவையான அளவு, கறி மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்.

உணவு நல்லது வேண்டும்!

செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை வதக்கிக்கொள்ளவும். அத்துடன், ஏற்கெனவே அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்க்கவும். கூடவே பூண்டு போட்டு நன்றாக வதக்கியதும், உப்பு, மஞ்சள்தூள், கறிமசாலா சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதை, சாதத்துடன் கலந்து பரிமாறலாம்.

பயன்கள்:  வாரம் ஒருமுறை இதுபோல் சமைத்துச் சாப்பிட்டால், அஜீரணப் பிரச்னையே இருக்காது.

உணவு நல்லது வேண்டும்!

ஏலக்காயின் 5 நன்மைகள்

ஸ்பெஷல் டீ முதல் பாயசம் வரை ஏலக்காயை வாசனைக்காகவும் சுவைக்காகவும் சேர்க்கிறோம். அதில் என்னென்ன மருத்துவப் பயன்கள் அடங்கியிருக்கின்றன தெரியுமா?

1. செரிமானத்தை மேம்படுத்தும்.

2. வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தும் கிருமிகளை அழித்து, புத்துணர்வு தரும்.

3. உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும்.

4. சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

5. இதயத் துடிப்பைச் சீர்படுத்தும்.

உணவு நல்லது வேண்டும்!

அரிசி  -  தேங்காய்ப்பால் கஞ்சி

தேவையானவை: புழுங்கல் அரிசி - கால் கப், கெட்டியான தேங்காய்ப்பால் - கால் கப், பயத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை: ஒரு வாணலியில் அரிசி, பருப்பு இரண்டையும் லேசாக வறுத்து, மிக்ஸியில் ரவை பதத்துக்கு உடைக்கவும். அதை, இரண்டு கப் நீர் விட்டு வேகவிடவும். வெந்ததும் தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்த்துப் பருகவும்.

பலன்கள்: தேங்காய்ப்பாலில் வைட்டமின் சி, பி காம்ப்ளெக்ஸ், இரும்பு சத்து, கால்சியம், செலினியம் நிறைவாக உள்ளன. இந்தக் கஞ்சி, எலும்பு வளர்ச்சிக்கு உதவும். வயிற்றுப்புண்களைக் குணப்படுத்தும். பயத்தம் பருப்பு, செரிமானத்தை எளிதாக்கும். செலினியம், ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்பட்டு, புற்றுநோய் செல்களைத் தடுக்கும். உடலில் நல்ல கொழுப்பைச் சேர்க்கும். தேவையற்றக் கொழுப்பை நீக்கும். இதயத்தை வலுவாக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு