Published:Updated:

“இப்படி வெச்சு செஞ்சுட்டீங்களே?”

“இப்படி வெச்சு செஞ்சுட்டீங்களே?”
பிரீமியம் ஸ்டோரி
“இப்படி வெச்சு செஞ்சுட்டீங்களே?”

நா.சிபிச்சக்கரவர்த்தி - படங்கள்: கே.ராஜசேகரன், சு.குமரேசன்

“இப்படி வெச்சு செஞ்சுட்டீங்களே?”

நா.சிபிச்சக்கரவர்த்தி - படங்கள்: கே.ராஜசேகரன், சு.குமரேசன்

Published:Updated:
“இப்படி வெச்சு செஞ்சுட்டீங்களே?”
பிரீமியம் ஸ்டோரி
“இப்படி வெச்சு செஞ்சுட்டீங்களே?”

``ஒரு வாரம் இந்தப் பகுதியில் திருநாவுக்கரசர் பதில் சொல்லியிருந்தார். அதைப் படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன். ஆனால், சிலர் சுலபமான கேள்விக்குக்கூடப் பதில் தெரியாமல் முழிப்பாங்க தம்பி. `இந்தக் கேள்விக்குக்கூட இவங்களுக்குப் பதில் தெரியலையா?!’னு பகீர்னு இருக்கும். அப்படி நான் சொல்ற பதிலைப் பார்த்து யாரும் பகீர்னு ஆகிடக் கூடாது'' எனச் சிரிக்கிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.

``நான் `பாகுபலி - 2' ஷூட்டிங்கில் பிஸியா இருக்கேன். அதுவும் இல்லாமல் நான் சீரியஸான ஆளு. எப்படி காமெடியா பதில் சொல்வேன்?'' என டெரராகக் கேட்கிறார் நடிகை ரோகிணி.

``செம காத்துங்க. எங்க வீட்டுக்கு முன்னாடி மரம் எல்லாம் விழுந்துடுச்சு. கரன்ட் கட். இந்தச் சூழலில்தான் நான் பேசிட்டிருக்கேன். அதனால, எனக்கு போனஸா முதல்லயே மார்க் கொடுத்துடுங்க'' என்கிறார் நடிகர் சாந்தனு.

``ஜி... ஒரு உண்மையைச் சொல்லியே ஆகணும். நான் படிப்புல செம டொக்கு. நீங்க பிட்டு அடிக்கச் சொன்னாக்கூட சரியா அடிக்கத் தெரியாது'' என முகத்தைப் பாவமாக வைத்துக்கொள்கிறார் நடிகர் ஹரி கிருஷ்ணன்.

“இப்படி வெச்சு செஞ்சுட்டீங்களே?”

``ஜியோ சிம் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படம் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டதால், சட்டப்படி எவ்வளவு ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றனர்?''

பதில்: 500 ரூபாய்

கு.ஞானசம்பந்தன்: ``இரண்டு பேருமே நாட்டின் பெரிய புள்ளிகள். அப்ப கோடிகளில் அபராதம் கட்டினால்தான் இருவருக்குமே மரியாதையா இருக்கும். என்ன தம்பி நான் சொல்றது சரிதானே?''

ரோகிணி: ``அய்யோ... அப்படியா! அபராதம் கட்டச் சொல்லிட்டாங்களா? ஜியோ சிம் விளம்பரத்தில் மோடியைப் பார்த்ததோடு சரி. அதுக்கு அப்புறம் அதைப் பற்றி ஒண்ணும் தெரியாதுங்க.''

 சாந்தனு: ``ஃபைன் போட்ட மாதிரி மக்கள்கிட்ட சும்மா காட்டுறதுக்காக, ரொம்ப ரொம்பக் குறைவான பணத்தைத்தான் அபராதமா கட்டச் சொல்வாங்க.

அது, 10 ஆயிரம் ரூபாய் இல்லைன்னா 20 ஆயிரம் ரூபாயாக இருக்கலாம்'' என்றவரிடம் பதிலைச் சொன்னதும், ``அய்யோ... நான் கம்மியா இருக்கும்னு நினைச்சேன். இவ்வளவு கம்மியா இருக்கும்னு நினைக்கலை ப்ரோ'' என்றார்.

ஹரி கிருஷ்ணன்: ``அம்பானி பெரிய ஆளு. மோடி அதைவிட பெரிய ஆளு. அப்ப கோடிக்கணக்குலதான்ஜி டீலிங் நடக்கும். அதாவது, கோடிகளில்தான் ஃபைன் கட்டச் சொல்லியிருப்பாங்கஜி.''

“இப்படி வெச்சு செஞ்சுட்டீங்களே?”

`` `தங்கல்' என்ற பாலிவுட் பயோபிக் படத்தில், அமீர்கான் எந்த மல்யுத்த வீரராக நடிக்கிறார்?''

பதில்: மஹாவீர் சிங் போகத்

கு.ஞானசம்பந்தன்: ``இந்தி நடிகர் அமீர்கான்தானே? பஞ்சாப்ல இருந்த மல்யுத்த வீரரா நடிச்சிருக்கார். பேர் ஏதோ சிங்னு வருமே. சரிதானே... இல்லையா? தம்பி, ஒரு பையன்கிட்ட `இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதியவர் யார்?'னு கேட்டதுக்கு `காந்தி தாகூர்'னு பதில் சொன்னான். அதுல `தாகூர்'னு பாதி சரியான பதில் சொன்னதுக்காக பாதி மார்க் கொடுத்தோம். அதேபோல நீங்களும் மார்க் கொடுப்பீங்கனு நம்புறேன்'' - அதே அட்டகாசச் சிரிப்பு.

ரோகிணி: ``மூணு பொண்ணுங்களுக்கு அப்பாவாகவும் மல்யுத்த வீரராகவும் நடிக்கிறார்னு தெரியும். பேர் தெரியலை. எனக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கு. அதனால, எதையுமே நான் முழுசா படிக்கலை.’’

சாந்தனு: ``எனக்குத் தெரிஞ்ச ஒரே மல்யுத்த வீரர் என் மனைவிதான். என்னா அடி? நான் சொல்ற இந்தப் பதிலை எல்லாம் படிச்சுட்டு வீட்டுல ஒரு ரெஸ்லிங் மேட்ச் இருக்குனு நினைக்கிறேன்'' எனச் சிரித்தவர், ``மஹாவீரர்னு பேர் தொடங்கும். இந்த வர்தா புயல் என்னை யோசிக்கவிடாம டிஸ்டர்ப் பண்ணுது ப்ரோ. அதுனால, சரியான பதிலை நீங்களே சொல்லிடுங்க.''

ஹரி கிருஷ்ணன்:
``மைக் டைசன், முகமத் அலி இவங்க ரெண்டு பேர் பயோபிக்கை மிக்ஸ் பண்ணி, புதுசா ஒரு கதையை உருவாக்கி டெரரா நடிச்சிருப்பார் அமீர்கான். முதல் நாள் முதல் ஷோ பார்க்கணும்ஜி.''

“இப்படி வெச்சு செஞ்சுட்டீங்களே?”

`` 2016-ம் ஆண்டின் `பெர்சன் ஆஃப் தி இயர்' என டைம்ஸ் பத்திரிகை தேர்ந்தெடுத்திருக்கும் பிரபலம் யார்?''

பதில்: டொனால்டு ட்ரம்ப்

கு.ஞானசம்பந்தன்: ``தம்பி... முதல் ரெண்டு கேள்விகளில் கொஞ்சம் சறுக்கிட்டேன். இதுக்குப் பதில் சொல்லி மார்க் வாங்குறேன் பாருங்க. டைம்ஸ் பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் நரேந்திர மோடிதான் லீடிங்ல இருந்தார். அப்ப அவரைத்தான் அந்தப் பத்திரிகை தேர்வு செஞ்சிருக்கணும். மார்க் வாங்க ஒரு வாத்தியாரையே இப்படித் திணறவைக்கிறீங்களே...'' எனச் சிரிக்கிறார்.

ரோகிணி: ``டைம்ஸ் ஆஃப் இந்தியாவா அல்லது இன்டர்நேஷனல் டைம்ஸா? சரி, ஒருத்தரை மட்டும் செலெக்ட் பண்ணியிருக்காங்களா? அய்யோ... நிஜமா நான் இதை எல்லாம் கவனிக்கவே இல்லியே.''

சாந்தனு: ``சன்னி லியோனுக்குக் கொடுத்தாங்கனு எங்கேயோ படிச்சேனே! அவங்க இல்லையா? அப்ப ரஜினிகாந்த்? அவரும் இல்லையா! அப்ப நீங்களே சொல்லிடுங்க.''

ஹரி கிருஷ்ணன்: ``ஜி... என்னைவெச்சு செம காமெடி பண்றீங்க. நம்ம ஊர் பத்திரிகைகளையே நாம புரட்டிப் பார்க்கிறது இல்லை. இதுல எங்க டைம்ஸ் பத்திரிகை எல்லாம் கண்டேன்? `மெட்ராஸ்' படத்துல நான் கக்கத்துல பேப்பர் வெச்சுட்டுச் சுத்திட்டு இருந்துனால, பையன் பிரில்லியன்ட்னு நினைச்சுட்டீங்க...'' எனச் சிரிக்கிறார்.

“இப்படி வெச்சு செஞ்சுட்டீங்களே?”

``ஜெயலலிதாவின் அண்ணன் மகள் பெயர் என்ன?''

பதில்: தீபா

கு.ஞானசம்பந்தன்: ``அப்பாடா... அந்தப் பொண்ணு பேரு தீபா. கடைசியா அவங்க ஜெயலலிதாவைப் பார்த்துட்டாங்களே. மற்ற பிரச்னையைப் பற்றி நான் பேச விரும்பலை தம்பி.''

ரோகிணி:
``ம்ம்ம்... `தீபா’வா?''

சாந்தனு:
``சசிகலா அண்ணன் மகனோ, சித்தப்பா மகனோ தீபக்னு தெரியும். ஆனா, அந்தப் பொண்ணு பேர் ஞாபகம் வரலையே. ஏதோ ஜெயகுமார், ஜெயராமன்னு அவங்க பேருக்குப் பின்னாடி வருமே. ஆங்... பிடிச்சுட்டேன். தீபா ஜெயராமன். சரியா?''

ஹரி கிருஷ்ணன்:
``ஜெயலலிதா அம்மாவின் குடும்பத்தைச் சேர்ந்தவங்க பேருக்குப் பின்னாலும் லலிதா வரலாம். அப்ப அனிதா லலிதா, திவ்யா லலிதா, நிவேதா லலிதானு ஏதாவது ஒண்ணு இருக்கலாம். மொத்தத்துல ஏதோ பெரிய ப்ளான் போட்டு என்னை வெச்சு செஞ்சுட்டீங்களேஜி!’’