Published:Updated:

“உணவு அரசியல் பயங்கரமானது!”

“உணவு அரசியல் பயங்கரமானது!”
பிரீமியம் ஸ்டோரி
“உணவு அரசியல் பயங்கரமானது!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

“உணவு அரசியல் பயங்கரமானது!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

Published:Updated:
“உணவு அரசியல் பயங்கரமானது!”
பிரீமியம் ஸ்டோரி
“உணவு அரசியல் பயங்கரமானது!”
“உணவு அரசியல் பயங்கரமானது!”

திக்கச் சாதிக் கொடுமைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள் செய்வது, மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல்கொடுப்பது, பெண் கொடுமைகளுக்கு எதிராக சட்ட உதவிகள் செய்வது என, களத்தில் இயங்கிவருபவர் எவிடென்ஸ் கதிர்.

சமீபத்தில், ஸ்வீடனில் நடந்த சர்வதேச மனித உரிமை மாநாட்டில் ஆசியாவின் சார்பில் கலந்துகொண்டு திரும்பியிருக்கும் கதிரிடம் பேசினேன்.

``ஸ்வீடன் சர்வதேச மனித உரிமை மாநாட்டில் நீங்கள் எந்தெந்த விஷயங்களைப் பற்றி பேசினீர்கள்?''

``ஸ்வீடனின் மால்மோ நகரத்தில் ஒவ்வோர் ஆண்டும் மனித உரிமைகளை மீட்டெடுக்க ஒரு விழா போல மாநாடு நடத்துவார்கள். இந்த ஆண்டு `உணவு இறையாண்மையும் மனித உரிமையும்' என்ற தலைப்பில் சர்வதேச அளவில் கருத்தரங்கம் நடந்தது. அதில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பல அறிஞர்கள் பேசினார்கள். நானும் இந்தியாவை மையப்படுத்தி, இங்கு உள்ள அரசியலையும் மனித உரிமைச் செயல்பாடுகள் பற்றியும் பேசினேன். இந்தியாவில், ஒரு புறம் உணவு நவீனமயமாகி வருகிறது; இன்னொரு புறம் உண்ண உணவு இல்லாமல் ஏழைகள் தவிக்கிறார்கள். இதை எல்லாம் இந்திய அரசாங்கம் மக்களிடமும் பிற நாடுகளிடமும் மறைக்கிறது என, புள்ளிவிவரங்களோடு பேசினேன்.

எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு பசியும் பட்டினியும் அதிகரித்திருக்கின்றன. மத்திய அரசு, `நாங்கள் உணவு உற்பத்தி செய்கிறோம். அதில் தன்னிறைவு அடைகிறோம்' எனப் பொய்யான அறிக்கைளைக் கொடுத்து, மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த இரண்டு முரண்பாடுகளையும் அங்கே உரக்கச் சொன்னேன்.

“உணவு அரசியல் பயங்கரமானது!”

அடுத்து, விதைகள் காப்புரிமை சம்பந்தமாக அரசு பல கொள்கைகளை உருவாக்கிவருகிறது. அதில், இரண்டு விஷயங்கள் கவனிக்கத்தக்கவை. ஒன்று, `தனிநபர்’கள் விதைகளுக்குக் காப்புரிமை வாங்குவது. இன்னொன்று நாடுகள் காப்புரிமை செய்வது.

நீங்கள் ஒரு விதை காப்புரிமை வாங்கி இருக்கிறீர்கள் என்றால், உங்களிடம் அனுமதி வாங்கிய பிறகே இந்த விதைகளை கமர்ஷியலாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்தத் `தனிநபர்’களிடம் இருக்கும் காப்புரிமையைக் கையகப்படுத்துவதை சில நிறுவனங்கள் தொடங்கி இருக்கின்றன. இது மிகவும் ஆபத்தானது. `விதைகளுக்கான காப்புரிமை என்னிடம்தான் இருக்கிறது. என்னிடம் ஒப்புதல் வாங்கிய பிறகே பயன்படுத்த வேண்டும்' என தனியார் நிறுவனம் நிபந்தனை விதிக்கத் தொடங்கினால், அப்பாவி விவசாயிகளின் நிலை என்ன ஆகும்?

இது மட்டும் அல்லாமல், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர முயன்றது. இதுவும் நமக்கு அபாயகரமானதுதான். தரமான உணவு உற்பத்தி செய்வதே, ஆதிவாசி மக்களும் தலித் மக்களும்தான். ஆனால், அவர்களிடம் நிலம் இருப்பது இல்லை. இந்த நாட்டுக்கு நல்ல உணவைக் கொடுப்பதே ஏழை எளிய மக்கள்தான். இவர்களில் வறுமை கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களே அதிகம். அதில் பெரும்பாலானோர் தலித்கள்.

வருடத்துக்கு 60,000 ரூபாயும் அதற்கு குறைவாகவும் ஊதியம் பெறுகிறவர்களின் எண்ணிக்கை மட்டுமே இந்திய மக்கள் தொகையில் 70 சதவிகிதம். இதில் 83 சதவிகிதம் தலித்கள். ரியஸ் எஸ்டேட்காரனிடம் இருந்து நிலத்தைக் காப்பாற்றினால்தான், உணவைக் காப்பாற்ற முடியும். நிலத்தின் மீதான வன்முறை இந்தியாவில் தாண்டவமாடுகிறது.

ஒருகாலத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் அளவு உள்ள நிலம், தலித் மக்களிடம் இருந்தது. 1892-ல் தமிழகத்தின் மெட்ராஸ் மாகாணத்தில் மட்டும் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் தலித்களுக்குக் கொடுத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். அதில், தலித் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த நிலங்களை வேறு சாதிக்காரர்கள் வாங்க முடியாது. ஒருவேளை வேறு வழி இல்லாமல் விற்கவேண்டிய சூழல் ஏற்பட்டால், கொடுக்கப்பட்ட ஆண்டில் இருந்து 10 ஆண்டுகள் கழித்துதான் விற்க முடியும். அப்படியே விற்றாலும், ஒரு தலித் இன்னொரு தலித்திடம்தான் விற்க முடியும் என்று நிபந்தனைகள் விதித்தே கொடுத்தார்கள். அப்போது கொடுக்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் நிலத்தில் இன்று தலித் மக்களிடம் இருப்பது வெறும் 2 ஆயிரம் ஏக்கர் நிலம்தான். சென்னை விமானநிலையம், சென்னையில் உள்ள பெரும் பகுதி, மதுரை விமானநிலையம் போன்ற பல இடங்கள் தலித் மக்களுக்காகக் கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள். இதை எல்லாம் இப்போது கணக்கு எடுத்து, தலித் மக்களுக்கே கொடுக்க வேண்டும் எனச் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனாலும், இதை எப்படி கணக்கு எடுக்கப்போகிறார்கள்? எப்படித் திரும்பப்பெறப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இதை எல்லாம்தான் அங்கு பேசினேன்'' என ஆதங்கத்துடன் சொன்னார் கதிர்.