Published:Updated:

தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க!

தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க!
பிரீமியம் ஸ்டோரி
தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க!

ப.சூரியராஜ்

தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க!

ப.சூரியராஜ்

Published:Updated:
தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க!
பிரீமியம் ஸ்டோரி
தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க!
தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க!

சினிமா, கிரிக்கெட்டைத் தாண்டி நம் ஊர் வருத்தப்படாத வாலிபர் சங்கங்களால் அதிகம் கொண்டாடப்படுவது `ரெஸ்ட்லிங்'. இது, சுஷில்குமார் தங்கம் வாங்கிக் கொடுத்த உண்மையான மல்யுத்தம் அல்ல; ஏற்கெனவே செட்டப் செய்து டிராமா போடும் `WWE’ என்ற டுபாக்கூர் மல்யுத்தப் போட்டி. பொய் எனத் தெரிந்துமே உலகம் முழுவதும் உள்ள டீன் டிக்கெட்ஸ் இதற்கு அடிக்ட்ஸ்.

இப்போது 30-35 வயதில் அங்கிள்ஸ் ஆகியிருக்கும் குடும்பஸ்தர்களின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், `ஸ்மாக் போடுறேன்’, `லாக் போடுறேன்’ என முகரையைப் பெயர்த்துக்கொண்ட கொடுமையான சம்பவம் ஒன்று நிச்சயம் அரங்கேறியிருக்கும். ஹிட்மேன்தான் கெத்து, `ஹல்க்ஹோகன் அடிச்சாம்பாரு ஒரு அடி' என 90-களின் கதைகளை, இன்னமும் `மறக்க முடியுமா?' எபிசோடுகளாகவே நெஞ்சில் நிறுத்தியிருப்பார்கள்.

விடிய விடிய `WWE’ பார்ப்பது, அதைப் பற்றி பேசி நண்பர்களோடு மல்லுக்கட்டி மண்ணில் புரள்வது, ட்ரம்ப் கார்டுகள் சேகரிப்பது, ரெஸ்ட்லிங் வீடியோ கேம் விளையாடுவது... என பெரும்பாலான ஆண்களின் வாலிபப் பருவம் ரெஸ்ட்லிங்கோடு பயணப்பட்டிருக்கும்.

 நம் நாஸ்டால்ஜியா பாஸ்

அன்று விடிய விடிய உட்கார்ந்து கண்கள் விஜயகாந்த் கண்கள்போல சிவப்பாக மாறும் வரை பார்த்தவர்களில் பலர், இன்று பல்வேறு சூழல்களால் ரெஸ்ட்லிங் பார்ப்பதை நிறுத்திவிட்டார்கள். தனது ஆஸ்தான சூப்பர் ஸ்டார்கள் ராக், ஸ்டோன் கோல்டு, அண்டர் டேக்கர், ஹிட்மேன் போன்றோர் என்ன ஆனார்கள், `WWE’-ன் கரன்ட் ஸ்டேட்டஸ் என்ன... என்பது போன்ற பல கேள்விகள், அவர்களுக்குள் அரசு விளம்பரம்போல் அடிக்கடி வந்து செல்லும்.

தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க!எப்படி இருக்கிறது இந்தக் கால ரெஸ்ட்லிங் உலகம்?

 இப்போ என்ன நடக்குதுன்னா...

இன்று வருகிற `WWE’ போட்டிகள், அந்தக் கால ஆட்டிட்யூட் எரா (Attitude Era) போட்டிகளைவிட ஆக்ரோஷத்தில் கொஞ்சம் குறைவுதான். ரத்தம் தெறிக்க இரும்பு சேர்களைக்கொண்டு தலையில் அடிப்பது, வேலி கம்பியை பேஸ்பால் பேட்டில் சுற்றிவைத்து அடித்து சதையைக் கிழிப்பது, மரமேஜையில் தூக்கிப்போட்டு முதுகை பஞ்சர் ஆக்குவது, பைல் டிரைவர் போடுவது எல்லாம் ரொம்பவே குறைந்துவிட்டன.

அதிகக் கவர்ச்சிக்குத் தடை, வீரர்கள்... வீராங்கனைகளை அடிப்பதற்குத் தடை என நிறைய சைவமாக்கிவிட்டனர். அடல்ஸ் ஒன்லி படம்போல இருந்த `WWE’ சண்டைகள், இன்று குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஆக்‌ஷன் படங்கள்போல மாறிவிட்டன. இதனால், பழைய ரசிகர்களுக்கு சிறிது வருத்தம்தான். எனினும் முன்பைவிட அதிக டி.ஆர்.பி-யைப் பெற்று, பல ஆயிரம் கோடி டாலருக்குச் சந்தையை விரிவாக்கியிருக்கிறார் ரெஸ்ட்லிங் போட்டிகளை நடத்தும் வின்ஸ் மெக்மோகன். இவருக்குத்தான் மொட்டை அடித்து இடையில் இரண்டு வருடங்கள் இந்த ரெஸ்ட்லிங் போட்டிகளை தன் கன்ட்ரோலில் வைத்திருந்தார் டொனால்டு ட்ரம்ப்!

போர் அடிக்கும் கதைகள்

`அண்டர்டேக்கருக்கு ஏழு உயிர்கள்’, ‘பால்பியரர் சொம்பில்தான் அவருடைய உயிர் இருக்கிறது’, `ஸ்டோன் கோல்டும் மெக் மேஹனுக்கும் ஆகவே ஆகாது’, `அண்டர்டேக்கரும் கேனும் அண்ணன்-தம்பி’ என்பது போன்ற அனைத்தும், உல்டா உதாரு கட்டுக்கதைகள் எனத் தெரிந்திருந்தாலும், அப்போது இருந்த ஸ்டோரி லைன்கள் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். அது இப்போது மிஸ்ஸிங்.

உண்மையில், அந்தக் கால ரசிகர்களுக்கு இந்தக் கால `WWE’ நிச்சயம் கடுப்பாக்கிக் கண்ணீர் விடவைக்கும். ஆனால் `WWE’ இந்தத் தலைமுறை ரசிகர்களுக்கு, போன தலைமுறையினர் ரெஸ்ட்லிங் பார்த்து அடைந்த அதே அளவு பரவசத்தைத் தங்குதடையின்றி அளித்துவருகிறது. அந்தக் கால ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார்கள் எப்போதாவது அரங்கில் தோன்றி நமக்குள் நாஸ்டால்ஜியைக் கிண்டிவிடுவதோடு சரி, சண்டை எல்லாம் போடுவது கிடையாது.

கொஞ்சமா மசாலா தடவி, சாஃப்ட்டா சண்டைப்போட்டு மேட்சை முடிச்சுடுறாங்க!

தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க!

டீன் அம்ப்ரோஸ்

`WWE’-யைக் கலக்கும் சூப்பர் ஸ்டார். 351 நாட்கள் யுனைடெட் ஸ்டேட்ஸ் சாம்பியனாக வலம்வந்தவர். `WWE’ உலகின் மிகப்பெரிய ஆன்டி ஹீரோக்களான ராடி ரௌடி பைப்பர், ஸ்டோன் கோல்டு ஆகியோரோடு ஒப்பிடப்படும் டீனுக்கு, மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என ரெஸ்ட்லிங் ரசிகர்கள் அடித்துச் சொல்கிறார்கள். ரோமன் ரெய்ன்ஸ் போல டீன் அம்ப்ரோஸுக்கும் இந்தியாவில் ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க!

செத் ராலின்ஸ்

எஃப்.சி.டபிள்யூ, ஆர்.ஓ.ஹெச், பி.டபிள்யூ.ஜி, எஃப்.ஐ.பி எனப் பல பொழுதுபோக்கு மல்யுத்த நிறுவனங்களில் சண்டையிட்டுள்ளார். ரெஸ்ட்லிங் ஜாம்பவான் ஸ்டிங், ‘நான் பார்த்ததில், பணிபுரிந்ததில் மிகவும் திறமையான மல்யுத்த வீரன் செத் ராலின்ஸ்’தான் எனப் புகழ்ந்திருக்கிறார். இவர், டீன் அம்ப்ரோஸ் மற்றும் ரோமன் ரெய்ன்ஸ் ஆகியோர் இணைந்து ஆரம்பத்தில் ‘சீல்ட்’ என்ற பெயரில் குழுவாகச் சண்டையிட்டு வந்தார்கள். பின்னர் அந்தக் குழு உடைந்து, ஒவ்வொருவரும் இப்போது சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார்கள்.

தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க!

பெய்ஜ்

24 வயதான ரெஸ்ட்லிங் அழகி. இவரது அம்மா - அப்பா இருவருமே மல்யுத்த வீரர்கள் எனபதால் ரெஸ்ட்லிங் இவர் ரத்தத்தில் கலந்தது.

13 வயதிலேயே ரெஸ்ட்லிங் விளையாட்டுக்கு வந்தவர் WWE-ல் தனது முதல் போட்டியிலேயே பெண்களுக்கான சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றார் பெய்ஜ். இவருக்கு அழகிப்போட்டிகளிலும் ஆஃபர்கள் குவிகின்றன!

தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க!

ரோமன் ரெய்ன்ஸ்

இப்போதைய யுனைடெட் ஸ்டேட்ஸ் சாம்பியன் இவர். ரெஸ்ட்லிங் லெஜெண்ட்டும் ஹாலிவுட் நடிகருமான ட்வைன் ‘தி ராக்’ ஜான்சனின் மாமா பையன். குழந்தைகளுக்குப் பிடித்த `ஜான் செனா'வின் இமேஜை ஓவர் நைட்டில் பறித்துக்கொண்ட சூப்பர் ஹீரோ. 30 வீரர்கள் ஒரே நேரத்தில் சண்டையிடும் ‘ராயல் ரம்பல்’ போட்டியில் 12 வீரர்களை வெளியேற்றி சாதனை புரிந்திருக்கிறார். பார்ப்பதற்கு கௌதம் மேனன் படத்தில் வரும் வில்லன்போல இருந்தாலும், இவருக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள். நம் ஊர் காதுகுத்து, கல்யாண பேனர்களில்கூட அண்ணனின் படம் இடம்பெறுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!