தமிழ்நாட்டுக்கு இன்னொரு தலைக்குனிவு. `ஆட்சியில் இருந்தபோதே சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறைக்குச் சென்ற முதல் முதலமைச்சர்’ என்ற களங்கம் ஏற்கெனவே இருக்கும்போது, `இந்தியாவில் முதன்முறையாக தலைமைச் செயலாளர் வீடு வருமானவரிச் சோதனைக்கு உட்பட்டதும் தமிழ்நாட்டில்தான்’ என்ற அவப்பெயரும் சேர்ந்திருக்கிறது.

தலைமைச் செயலகத்தில், அதுவும் முதலமைச்சர் இருக்கும்போதே, தலைமைச் செயலாளரின் அறையில் துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு வருமானவரித் துறை சோதனை செய்ததை எண்ணி, தமிழ்நாட்டு மக்கள் அவமானத்தால் கூனிக்குறுகுகிறார்கள். ஆனால், குற்றவுணர்வு கொள்ளவேண்டிய ஆளும் கட்சியோ, `சின்ன அம்மா’வைத் தலைமைப் பொறுப்புக்கு வரச்சொல்லி மண்டியிட்டுக் கெஞ்சும் `மகத்தான’ பணியில் இருக்கிறது.

தன் அறைக்குப் பக்கத்திலேயே சோதனை நடந்தும், மௌனம் காக்கிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். எதுவுமே நடக்காததைப்போல, ராம மோகன ராவை காத்திருப்போர் பட்டியலில் வைத்துவிட்டு, புதிய தலைமைச் செயலாளரை நியமித்துவிட்டால் போதுமா?

மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க-வை மிரட்டவே, மத்திய அரசால் இத்தகைய சோதனைகள் நடைபெற்றன என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், நிச்சயமாக கண்டனத்துக்குரியது. அதே சமயம், இத்தகைய குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தாலும்கூட, `ஊழல் பேர்வழிகளின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் தானே சோதனைகள் நடத்தப்படுகின்றன’ என்றும் குரல்கள் எழுகின்றன. ராம மோகன ராவ் மற்றும் மாட்டிக்கொண்ட அவர்களது சகாக்கள் மட்டும்தான் இங்கே குற்றவாளிகள் என நம்ப, தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல. ராம மோகன ராவ் வீட்டில் நடந்த சோதனைகள் குறித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாகக் கருத்து தெரிவிப்பதுடன், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 2011-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபோது, அவரின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் ராம மோகன ராவ். தங்குதடை இல்லாமல் ஐந்து ஆண்டுகள் அதிகாரவர்க்கத்துக்கு மிக அருகிலேயே இருந்தார். அதன் பிறகு சீனியாரிட்டியில் இருப்பவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, 16-வது இடத்தில் இருந்த ராம மோகன ராவ் தலைமைச் செயலாளர் ஆக்கப்பட்டது குறித்து, அப்போதே பலர் கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால், ஆறு ஆண்டுகளாகத் தொடரும் அ.தி.மு.க அரசு, தகுதி, திறமை, அனுபவம் எல்லாவற்றையும் குப்பைத்தொட்டியில் கடாசிவிட்டு, தங்களுக்கு வேண்டியவர்களையே முக்கியமான பதவிகளில் நியமிக்கிறது. சமீபத்தில் தமிழ்நாடு அரசுத் தேர்வாணைய உறுப்பினர்களின் நியமனத்தை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இதற்கு ஓர் உதாரணம்.

அரசின் நிதியும் திட்டங்களும் சிந்தாமல் சிதறாமல் சட்டப்படி ஏழை-எளிய மக்களுக்குச் சென்று சேரவேண்டியதை ஊர்ஜிதப்படுத்தவேண்டிய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் `வசூல் ராஜா’வாகவே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதையே இப்போது நடக்கும் சம்பவங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. எனவே, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த இந்த முறைகேடுகள், அதன் வேர்கள் வரை விசாரிக்கப்படவேண்டியவை.