சேப்பாக்கம் மைதானம்... எப்போதுமே கிரிக்கெட்டுக்குச் சிறப்பான மரியாதை கொடுக்கும். கிரிக்கெட் வீரர்களும் சேப்பாக்க மைதானத்தில் ரன் மழை பொழிந்து ரசிகர்களுக்குப் பதில் மரியாதை செய்வார்கள். இந்த முறை ரன் மெஷினாக மாறி திணறத் திணற ரன் விருந்து படைத்தார் கருண் நாயர். 303 ரன்கள் நாட் அவுட் என அவர் உயர்ந்து நின்ற தருணம் `யார்றா இவன்?’ என உலக கிரிக்கெட் ரசிகர்களைப் புருவம் உயர்த்த வைத்தது.

25 வயது கருண் கலாதரன் நாயருக்கு, இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது போட்டி. ஆனால், தனது மூன்றாவது இன்னிங்ஸிலேயே முச்சதம் அடித்த வீரர் என உலக சாதனை படைத்துவிட்டார் கருண். 381 பந்துகளில் 303 ரன்கள். 32 பவுண்டரி, 4 சிக்ஸர் என கருணின் ஆட்டத்தைப் பார்த்தவர்கள் எல்லோரும், மிரண்டுதான் போனார்கள்.

யார் இந்தக் கருண்?

கேரளாவைச் சேர்ந்த கலாதரன் – பிரேமா நாயர் தம்பதிக்குக் குறைப்பிரசவத்தில் பிறந்த மகன் கருண். சிறுவயதில் நுரையீரல் பலவீனமாக இருந்ததால், கருணை விளையாட்டில் ஆர்வம் செலுத்தச்சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தொட்டாச்சிணுங்கி கருண், தடுக்கிக் கீழே விழுந்தாலும் கண்ணைக் கசக்கும் ரகம். நாளாக நாளாக எல்லாமே மாறியது. சென்னை டெஸ்ட்டில் முதல் அரை சதம் அடித்தபோதும் சரி, முச்சதம் அடித்தபோதும் சரி, ஒரே மாதிரிதான் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். எந்தவித ஆர்ப்பரிப்போ ஆட்டமோ இல்லை.

ஜென்-ஸீ தலைமுறைக்கு இது வழக்கம் அல்ல. ஆனாலும் பக்குவப்பட்ட மனிதராகவே சேப்பாக்கம் மைதானத்தில் நின்றார் கருண்.

`அந்தத் தருணம் வித்தியாசமாக இருந்தது. மனதுக்குள் பல விஷயங்கள் ஓடின. ஏதேதோ செய்ய நினைத்தேன். ஆனால், எதையும் வெளிப்படுத்த முடியவில்லை. ஒருவேளை என் உணர்வுகளை வெளிப்படுத்த இன்னும் அதிக சதங்கள் அடிக்க வேண்டும்போல’ என மிகவும் சாதாரணமாகச் சொன்னார்.

சர்வதேச கிரிக்கெட்டில்தான் கருணுக்கு இது முதல் முச்சதம். உள்ளூர் போட்டிகளில் 300 ரன்கள் கடப்பது எல்லாம் சர்வசாதாரணம். 2014-15 ரஞ்சி கோப்பை சீஸன் இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டை வீழ்த்தி, கர்நாடகம் சாம்பியன் கோப்பையை வென்றது. அன்றும் கருண் அடித்தது முச்சதமே. மும்பையில் நடந்த அந்தப் போட்டியில் 328 ரன்கள் குவித்து, கர்நாடகாவை இன்னிங்ஸ் வெற்றிபெறவைத்தார் கருண்.

முதல் இன்னிங்ஸ்

நவம்பர் 26, 2016. மொகாலியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிதான் கருண் நாயரின் முதல் டெஸ்ட். விராட் கோஹ்லி செய்த தவறால், கருண் நாயர் நான்கு ரன்களில் ரன் அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்ஸில் கருணுக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. மும்பையில் நடந்த அடுத்த டெஸ்ட் போட்டியில் கருணால் 13 ரன்களே அடிக்க முடிந்தது. ஆனால், மூன்றாவது இன்னிங்ஸிலேயே ஃபார்முக்கு வந்துவிட்டார் கருண். விரேந்திர சேவாக்குக்கு அடுத்ததாக முச்சதம் அடித்த இந்தியர் கருண் மட்டுமே. கேரி சோபர்ஸ், பாப் சிம்ப்சனுக்கு அடுத்து முதல் சதத்தை முச்சதமாக மாற்றியவர் என்ற பெருமையோடு, இந்திய அணியில் மிடில் ஆர்டர் இடத்தை ரிசர்வ் செய்துவிட்டார் கருண். இனி ரோகித் ஷர்மாவின் பாடு திண்டாட்டம்.

ஸ்வீப் ஷாட் ஸ்பெஷலிஸ்ட்

ஸ்வீப் ஷாட்களில் கருண் கில்லி. ஸ்பின்னர்களுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப், பேடில் ஸ்வீப் என எல்லா வகை ஸ்வீப்களையும் அடிப்பது கருண் ஸ்பெஷல். சேப்பாக்கம் இன்னிங்ஸில் 53 ரன்கள் ஸ்வீப் ஷாட்கள் மூலம் வந்தவை. 299 ரன்களில் இருந்தபோதும்கூட ரிஸ்க் எடுத்து ஸ்வீப் ஆடினார். எந்த ஷாட்டுமே ஏனோதானோ என அடிக்கப்பட்டது கிடையாது. எல்லா ஷாட்களிலுமே ஒரு நேர்த்தி இருந்தது. முக்கியமான நேரத்தில் ஸ்வீப் ஷாட் தேவையா என்றபோது, `எப்படி சிலருக்கு ஸ்ட்ரெய்ட் டிரைவ், கவர் டிரைவ் எல்லாம் ரெகுலர் ஷாட்டோ, அதுபோல எனக்கு ஸ்வீப் ஷாட் ரொம்ப இயல்பானது. பார்ப்பவர்களுக்குத்தான் அது ரிஸ்க் போல தெரிகிறது’ என்றார் கருண்.

கருண் நாயர், ராகுல் டிராவிட்டின் வார்ப்பு. கர்நாடக அணியில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ராகுலின் டெக்னிக்ஸ் மற்றும் ஆட்டிட் யூடைப் பார்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேர்த்தார் டிராவிட். ராஜஸ்தான் அணி சஸ்பெண்ட் செய்யப் பட்டதும் ஏலத்துக்கு வந்தவரை, நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது டெல்லி டேர்டெவில்ஸ். இது முந்தைய சீஸனைவிட பத்து மடங்கு அதிகம். சம்பளத்தைப் போலவே ஆட்டத்திலும் 10 மடங்கு வேகத்தைக் கூட்டினார் கருண். டெல்லி அணியின் இரண்டாவது டாப் ஸ்கோரர் ஆனார்.

`இன்னும் பல சாதனைகளுக்கு நான் தயார்’ எனச் சொல்வது போலவே இருக்கிறது கருணின் உடல்மொழி. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இனி கருணும் பல பக்கங்களை நிரப்புவார்!