அநேகமாக இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் புத்தாண்டின் ஆரம்ப நாட்களில் மோடியின் புதிய இந்தியா மலர்ந்திருக்கும். இத்தனை நாட்களாக இந்தியாவின் முதுகெலும்பை அரித்துக்கொண்டிருந்த கறுப்புப் பணம், கள்ளப் பணம், லஞ்சம் எல்லாம் ஒழிக்கப்பட்டு, தூய்மை இந்தியா பூத்திருக்கும். ஊழல் பேர்வழிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பல லட்சம் கோடிகளும், அரசாங்க கஜானாக்களுக்குச் சிந்தாமல் சிதறாமல் வந்து சேர்ந்திருக்கும். இனி இந்தியா, ஒளிரப்போகிறது; நம்பர் ஒன் நாடாக மாறப்போகிறது. வல்லரசு கனவு பலிக்கப்போகிறது. ஏ.டி.எம்-களில் வங்கிகளில் குடும்பம் குட்டிகளோடு கால்கடுக்க நின்று, நாம் சிந்திய ஒவ்வொரு சொட்டு வியர்வைக்கும் அர்த்தம் கிடைத்துவிட்டது.

இப்படி எல்லாம் உற்சாகம் பொங்க இனிக்க இனிக்க எழுத, மோடி பக்தகோடிகளைப்போலவே ஆசைதான். ஆனால் பாருங்கள்... நாம் வாழ்ந்துகொண்டிருப்பது `முதல்வன்’ படத்திலும் அல்ல... பிரதமர் மோடி கோட் போட்ட அர்ஜுனும் அல்ல.

இந்த ஆண்டில் நடந்த ஏராளமான சம்பவங்களில் டாப் சம்பவம்... பிரதமர் மோடி பண்ணியதுதான். அவர் சம்பவம் பண்ணியதே நம்மைத்தான். அது `பணமதிப்பு நீக்கம்’ எனப்படும் டிமானிட்டைஷேசன்.

நவம்பர் 8-ம் தேதி இருட்டும் நேரத்தில், அவசரமாக டி.வி-யில் தோன்றினார் பிரதமர் மோடி. `இன்று இரவில் இருந்து 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது' என அறிவித்தார்.

ஒரே இரவில், ஒற்றை அறிவிப்பால், ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டிப் போட்டுவிட முடியும் என்றால், இந்நேரம் நம்முடைய தேசம் எத்தனை ஆயிரம் முறை தினுசுதினுசாகப் புரட்டிப் போடப்பட்டு முதுகு வீங்கியிருக்கும். ஆனால், பிரதமர் மோடியின் சுயாதீனமான பணமதிப்பு நீக்க அறிவிப்பு வந்த நாளில், யாருமே அவருடைய நோக்கத்தை சந்தேகிக்கவில்லை. நிச்சயம் ஏதோ பெரிதாகப் பண்ணப்போகிறார் என்றுதான் முழு மனதோடு நம்பினார்கள். ஆனால், டிமானிட்டைசேஷன் நாம் நினைத்ததுபோல் இல்லை.

இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளியான புகைப்படம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலாகப் பரவியது. வங்கியில் பணம் எடுக்க க்யூவில் நிற்கும் பெரியவர் ஒருவர் கதறி அழும் காட்சி அது. `பணக்காரர்கள் மட்டும்தான் அழுவார்கள் என்று அவர்கள் சொன்னார்கள்' எனத் தலைப்பிட்டு அந்தப் படத்தை வெளியிட்டு இருந்தது இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ்.

அந்தப் படத்தில் இருந்தவருடைய பெயர் நந்தாலால். டெல்லி அருகே குர்கானில் வசிக்கிறார். மாதம்தோறும் அவருக்குக் கிடைக்கும் 8,000 ரூபாய் பென்ஷனில்தான் ஜீவிதம். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கையில் ரொக்கமாக காசு இல்லாமல் அன்றாடச் செலவுகளைச் செய்ய முடியாமல் தவிக்கிறார்.

தன் அன்றாடச் செலவுகளுக்காக அக்கவுன்ட்டில் இருந்து 1,000 ரூபாய் எடுக்க முடிவெடுத்து வங்கிக்குச் சென்றார். அங்கே அனுமார் வால்போல க்யூ நிற்க, மூட்டுக்கள் தேய்ந்துபோன தாத்தா, வீட்டுக்கே திரும்பிவிட்டார். அடுத்தடுத்த நாட்களிலும் இதே கதைதான். தினமும் வங்கிக்கு வந்து போக ரிக்ஷா செலவே 100 ரூபாய்க்கு மேல் ஆகிவிட்டது. ஒருகட்டத்தில் இதற்கு மேல் தாங்காது என க்யூவில் போய் நின்றுவிட்டார். அவருடைய போதாத நேரம்... வரிசையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தாத்தாவை வெளியே தள்ளிவிட, மீண்டும் வரிசைக்குத் திரும்ப முடியாமல் போராட, வரிசையின் பின்னால் போய் நிற்குமாறு செக்யூரிட்டிகள் சொல்ல, அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுதிருக்கிறார் தாத்தா.

`கறுப்புப் பணத்துக்கு எதிராக மோடி நடத்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் இது மாதிரியான அசம்பாவிதங்கள் சகஜம்தான். எல்லையில் ராணுவ வீரர்கள் நிற்கவில்லையா?’ என்ற உங்கள் மைண்ட்வாய்ஸ் கேட்கிறது. சங்பரிவார் சகோதர சகோதரிகளே, நந்தாலால்கூட, முன்னாள் ராணுவ வீரர்தான்; இந்தியாவைக் காக்க காஷ்மீர் எல்லையிலும் பஞ்சாப் பார்டரிலும் ராப்பகலாக நின்றவர்தான். இதுதான் மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் லட்சணம்.

மோடியின் அறிவிப்பு, நம் சகஜ வாழ்வை முற்றிலும் புரட்டிப்போட்டிருக்கிறது. நம் வேலைகளை விட்டுவிட்டு நம் பணத்தை எடுக்கவும் செலவழிக்கவும் சர்வாதிகார நாட்டின் அடிமைகளைப்போல வங்கி வாயில்களில் அன்றாடம் பழிகிடக்கிறோம்; ஏ.டி.எம்-களில் ஏக்கமாகத் தவம் இருக்கிறோம். நம் வீட்டுத் திருமணத்தை நடத்த முடியாமல் திண்டாடும் அதே சமயத்தில் பா.ஜ.க-வின் ஜனார்த்தன ரெட்டி பல நூறு கோடி ரூபாய் செலவில் திருமணம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார். ஒரு பக்கம் ஒரே ஒரு 2,000 ரூபாய் தாளுக்கு என நான்கு மணி நேரம் வரிசையில் நின்றோம். ஆனால், இன்னொரு பக்கம் எங்கு ரெய்டு நடத்தினாலும் கோடிக்கணக்கில் கத்தைக் கத்தையாக அடுக்கப்பட்ட புதிய 2,000 ரூபாய் நோட்டுக்கள் சிக்கின.

`கறுப்புப்பணத்தைப் பதுக்கியவர்கள், நாளை முதல் வங்கிகளில் முண்டியடிக்கப் போகிறார்கள். பணம் பதுக்கலில் ஈடுபட்டவர்கள் எப்படி அழுது புலம்பப் போகிறார்கள் பாருங்கள்' என்று மோடி தன் 56 இன்ச் மார்பைத் தட்டி பெருமை பொங்க எதிர்காலத்தைக் கணித்துச் சொன்னார். உண்மையில் கறுப்புப் பணம் வைத்திருந்த யாருமே வங்கிகளுக்கு வரவில்லை. வந்தவர் எல்லாம் அன்றாடங்காய்ச்சிகள். இதுவரை கறுப்புப் பணம் வைத்திருந்த ஒருவர்கூட செத்துப்போகவில்லை. செத்துப்போன 60-க்கும் அதிகமான மனிதர்கள் எல்லோருமே சாதாரண மக்கள். இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் பெரும்புயலாக மாட்டிக்கொண்டு திண்டாடியவர்கள், விளிம்புநிலை மக்கள்தான். திருநங்கைகள், பிச்சைக்காரர்கள், தெருவோரவாசிகள், பாலியல் தொழிலாளிகள், வெளிமாநில கூலித்தொழிலாளர்கள், மாற்றுதிறனாளிகள் என விளிம்புநிலை மக்களின் பாதிப்புகள் மிகவும் மோசமானதாக இருக்கின்றன.

அடுத்தடுத்த நாட்கள் இத்தனை சிக்கலாக இருக்கப்போகிறது என்பதை மோடி கூட எதிர்பார்க்கவே இல்லை. அதுதான் இந்தக் கதையில் நடந்த கொடூரமான திருப்பம். காரணம், பிரதமருக்கேகூட இந்த அறிவிப்பின் பின்விளைவுகள் பற்றி தெளிவு இல்லை. அதனால்தான் முறையான முன்னேற்பாடுகள் எதுவும் இன்றி, யாரிடமும் முறையான ஆலோசனைகள் கேட்காமல் தான்தோன்றித்தனமாக திடீரென இப்படி ஓர் அறிவிப்பை அவரால் கொடுக்க நேர்ந்தது. பிறகு, இத்தனை மோசமான நிகழ்வுகள் நடக்கும்போதும் தான் செய்ததை நியாயப்படுத்த தொடர்ச்சியாக விதவிதமான அறிவிப்புகளையும் கொடுக்க முடிகிறது. பணம் மாற்ற வருகிறவருக்கு, மை வைத்து அழகு பார்க்கும் யோசனைகள்கூட உதித்தது அப்படித்தான்.

86 சதவிகிதம் அளவுக்குச் சுழற்சியில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தால், அதே அளவுக்கு இல்லை என்றாலும் அதில் பாதி அளவுக்காவது புதிய நோட்டுக்களை தயார்செய்து வைத்திருக்க வேண்டும் அல்லவா... தேவையான அளவு நோட்டுக்களை அச்சிட்டு வைத்துக்கொள்ளாமல், புதிய ரூபாய் நோட்டுக்களுக்கு ஏற்றபடி ஏ.டி.எம்-களைத் தயார்படுத்திவைக்காமல், இதனால் உண்டாகப்போகும் பொருளாதாரத் தேக்கநிலையைச் சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகளைக் கவனிக்காமல் அவசர கதியில் அறிவிக்கப்பட்ட ஓர் அறிவிப்பு, நமக்கு என்ன மாதிரியான விளைவுகளைத் தந்துவிடும்? இதற்கு முன்னர் இந்தியாவில் இப்படி பணமதிப்பு நீக்கம் செய்த முன் அனுபவங்கள் உண்டு. உலக அளவிலும் ஏராளமான உதாரணங்கள் உண்டு. ஆனால், அதில் இருந்து பாடங்கள் கற்று எதையுமே அரசு திட்டமிடவில்லை.

சிறுகச் சிறுக வீட்டில் சேர்த்துவைத்த பணம் எல்லாம் இப்போது வங்கிகளின் சேமிப்புக் கணக்குகளில் குவிகிறது. வங்கிகள் இந்தத் தொகையை என்ன செய்யப்போகின்றன, இதற்கான வட்டியை எப்படித் திருப்பி அளிக்கப்போகின்றன? இவ்வளவு பெரிய தொகையை யாருக்குக் கடனாக அளிக்கப்போகின்றன? யாருக்கும் தெரியாது.

ரொக்கத்தில் நடந்துகொண்டிருந்த வியாபாரம் எல்லாம் சரிவைச் சந்தித்திருக்கிறது. வியாபாரம் இன்றி சிறுகுறு விவசாயிகள் நஷ்டத்தைச் சந்தித்துவருகிறார்கள். நிலைமை சரியாக இன்னும் ஆறு மாதங்களாவது ஆகும் என்கிறார்கள் வல்லுநர்கள். இந்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அழைத்தால், பிரதமரோ நாடாளுமன்றத்துக்கு வர மறுக்கிறார். ஆனால், வெளியே மேடைகளில் `சிங்கம் - 3’ சூர்யாபோல கர்ஜிக்கிறார்.

வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் பணம் மட்டும்தான் கறுப்புப் பணமா? வங்கியில் இருக்கும் பணம் எல்லாம் நல்ல பணமா? இதுவரை வங்கியில் செலுத்தப்பட்டிருக்கும் பணம் எல்லாம் எந்த வகைப் பணம்? இப்போது வந்து குவிந்திருக்கும் பணத்தை அரசு என்ன செய்யப்போகிறது? கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருப்பவர்களை என்ன செய்யப்போகிறோம்?

எல்லா கேள்விகளுக்கும் மோடி அரசு ஒரே பதிலைத்தான் சொல்கிறது. `கேள்வி கேட்கும் நீ தேசத்துரோகி!’ என்பதே அது. வெறும் வெற்று விளம்பரங்களால் இப்படி ஒரு மூடத்தனமான முடிவையும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாக மாற்ற முடியும் என நம்புகிறார் பிரதமர் மோடி. அதனால்தான் பல நூறு கோடிகளைக் கொட்டி ஒவ்வொரு நாளும் `கேஷ்லெஸ் எக்கானமி எனப்படும் பணமற்றப் பரிவர்த்தனைக்கு மாறுவோம்' என அழைப்புவிடுக்கிறார். ஊழல் ஒழிப்புக்காகச் சொல்லப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை, இப்போது பணமற்றப் பரிவர்த்தனைக்கு ஆனதாக மாறிவிட்டது. வரும் நாட்களில் அதன் நோக்கம் வேறொன்றாகவும் மாறலாம்.

மோடியின் கேஷ்லெஸ் எக்கானமியின் வேர்கள் ஒரே ஒரு வர்தா புயலுக்கு ஆட்டம் கண்டுவிட்டதை, சமீபத்தில் சென்னை அனுபவித்தது. இரண்டு நாட்கள் மின்சார இணைப்புகள் முடங்கினால் பணம் இல்லாப் பரிவர்த்தனைகள் எல்லாம் புஸ்ஸாகி காற்றில் பறந்துவிடும் என்பதைப் புயலுக்குப் பிறகான நாட்கள் காட்டின.

நாம் இன்னமும் ஏ.டி.எம் வாசல்களில்தான் வாடிய முகத்துடன் காத்திருக்கிறோம். இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. நம் கைகளில் இல்லாத 2,000 ரூபாய் நோட்டுக்கள் ரெய்டு செய்யும் இடங்களில் எல்லாம் பல நூறு கோடிகளுக்கு, கத்தைக் கத்தையாகச் சிக்குகின்றன. மோடியிடம் இதற்கு பதில் கேட்டால், அவர் மறுபடியும் `பாயியோன் பெகனியோன்' என ஆரம்பித்து மன்கிபாத்தில் வேறு ஏதாவது அறிவிப்பைவிடுவாரோ என அச்சம் வருகிறது.

மோடி, எலிகளைப் பிடிப்பதற்காகத் தீப்பந்தத்துடன் நம் வீட்டுக்கு வந்தார். அவர் வளைகளில் இருக்கும் எலிகளை விரட்டப்போகிறார் என ஆர்வமாக நாம் காத்திருந்தோம். ஆனால், அவர் வீட்டுக்கே தீ வைத்தார். `இப்போது பாருங்கள், எலிகள் எல்லாம் எப்படி வெளியேறுகின்றன' எனக் காத்திருக்கச் சொன்னார். அப்போதும் வாயை மூடிக்கொண்டு காத்திருந்தோம். நம் வீடு பற்றி எரியத் தொடங்கியது, அவர் அப்போதும் காத்திருக்கச் சொன்னார். இப்போது நாமும் பற்றி எரியத் தொடங்கிவிட்டோம். இப்போதும் காத்திருக்கச் சொல்கிறார். எலிகள் எப்போதோ வேறு வழிகளில் தப்பித்து சென்றுவிட்டன... இப்போது ஏ.டி.எம்-களில் எரிந்துகொண்டிருப்பது நாம்தான்.

ஹேப்பி நியூ இயர்!