“சார்... உண்மையாத்தான் சொல்றீங்களா? நானும் என் ஃப்ரெண்ட்ஸும் நாளைக்கு உங்க ஆபீஸ்ல இருப்போம். அவர் கால் பட்ட இடத்தைப் பார்த்தாலே போதும் சார்” - உற்சாகத்தில் முத்துக்குமார் இருளப்பன் கத்தியது, அலைபேசியை ஐந்தடி தள்ளிவைத்தாலும் கேட்கும்போல.

“பிரியதர்ஷினி ஃப்ரெண்ட் நடராஜன் பேசறேன் சார். இப்பதான் பிரியா சொன்னாங்க. அவங்க திருச்சியில்

இருக்காங்க. எனக்காகத்தான் இந்த ஆசையை அவங்க எழுதிப் போட்டிருந்தாங்க. பெரிய சர்ப்ரைஸ் சார் எனக்கு. நான் நாளைக்கு என் இன்னொரு நண்பனோடு வந்துடுறேன்” - இது நடராஜனின் அழைப்பு நமக்குச் சொன்ன செய்தி.

`ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் கே.எம் மியூஸிக் கான்சர்வேட்டரியைப் பார்வையிட வேண்டும்’ என்ற ஆசையை அனுப்பியவர்கள் இவர்கள். இதில் திருச்சியைச் சேர்ந்த பிரியதர்ஷினி, தனது சென்னை நண்பருக்காக இந்த ஆசையை எழுதி அனுப்பியிருந்தார்.

வெள்ளி அன்று, சொன்ன நேரத்துக்கு முன்னரே படபடப்புடன் வந்து காத்திருந்தார்கள் ஐவரும். ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துக்குமார் இருளப்பன், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். தனது குழுவில் பணிபுரியும் பிரியதர்ஷினி ஹரிஹரன், இந்துலேகா மோகன்தாஸையும் அழைத்து வந்திருந்தார். திருச்சியைச் சேர்ந்த நடராஜன், தனது நண்பர் சிவராம கிருஷ்ணனுடன் வந்திருந்தார்.

“எங்களுக்கு ரஹ்மான் சார் மியூஸிக்தான் எல்லாமே” என்று செம த்ரில்லாக இருந்தனர்.

நண்பகலில் கே.எம் மியூஸிக் கான்சர்வேட்டரிக்கு வாசகர்களுடன் புறப்பட்டோம். அரும்பாக்கத்தில் உள்ள கன்சர்வேட்டரியின் பெரிய கதவு திறந்து உள்ளே நுழைந்தோம். மேலாளர் ஜோதி நாயர் பெல்லியப்பா மலர்ச்சியாக வரவேற்றார்.

முதலில் அழைத்துச் சென்றது ஒரு பெரிய அறைக்கு. அதற்குள்ளே தபேலா, ஹார்மோனியம் எனப் பல்வேறு விதமான வாத்தியக்கருவிகள் வைக்கப்பட்டிருந்தன.

“எந்த ஷோவா இருந்தாலும் சூஃபி இசையில்தான் தொடங்குவோம்” என்றார் ஜோதி.

அடுத்த அறையில் சர்வேஷ் பியானோ வாசித்துக்கொண்டிருந்தார். `“இது பேபி பியானோ” என்றார் நம்மிடம். ஆனால், அதுவே ஆறேழு அடிக்கு மேல் இருந்தது. “இருங்க ஒரு பாட்டு வாசிச்சுக் காமிக்கிறேன்” என்றவர் `உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே...’ பாடலைச் சிறிது வாசித்தார். அறையின் அமைதிக்கும் அவரது வாசிப்பின் திறமைக்கும் மெய்ம்மறந்து நின்றனர் வாசகர்கள்.

அடுத்த அறையில் இருந்ததும் பியானோ என நினைத்தால், “இல்லை இதற்குப் பெயர் Roli Seaboard Rise” என்றார் அங்கு இருந்த பத்மாவதி. “இது சாதாரண கீபோர்டில் இருந்து மிகவும் வேறுபட்டது. பல அதிசயங்களை இதில் நிகழ்த்தலாம்” என்று சொன்ன பத்மாவதி, சில நிமிடங்கள் வாசித்தும் காட்டினார்.

இந்துஸ்தானி க்ளாஸிக்கல் பயிற்சி நடந்துகொண்டிருந்த அறையில் ஆறேழு பேர் அமர்ந்து பாடிக்கொண்டிருக்க, நமக்காக ஓர் இந்துஸ்தானி பாடலை தன் குழுவுடன் இணைந்து பாடினார் சாய். “இந்துஸ்தானி பாட்டு பாடினாங்கள்ல, அதே ராகத்துல ஏதோ ஒரு பாடல் கேட்டிருக்கேன்” என்று ஹம் செய்துகொண்டே வந்தார் பிரியதர்ஷினி.

அடுத்ததாக சந்தீப். “ஆந்திராவைச் சேர்ந்த இவர், நமது மாணவராக இருந்து இப்போது பயிற்றுவிப்பவராகவும் இருக்கிறார்” என்றார். சந்தீப் தன் ஸ்பெஷல் குரலில் உச்சஸ்தாயியில், “ஆம்ப்ர்ர்ரோ ஓஓஓஒ... ஸ்ஸ்ச்சே..... நாஆஆஆஅ.. இன்ன்னொட்டோஓஓஓஓ ஸொம்ம்மா.. ஸாண்ட்ட்ராஆஆஆஆஆஆ.. சோம்ம்மா....” என்று இரண்டு நொடிகள் பாட, வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தனர். அது ஜெர்மன் ஃபோக் இசையாம். அடடே... ஆச்சர்யக்குறி!

நிறைய பியானோக்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே சிந்தன் நமக்காக இசைக்க ஆரம்பித்தார். எங்கெங்கோ ஆரம்பித்து அந்த இசையைக் கொண்டுவந்து ஒரு பாடலில் நிறுத்தினார்.

“என்ன பாட்டுனு சொல்லுங்க?” - என்று அவர் கேட்டதும், படக்கெனச் சொன்னார் பிரியதர்ஷினி, “நேற்று இல்லாத மாற்றம் என்னது...”

வாசகர் நடராஜ் தயங்கியபடியே நின்று கொண்டிருந்தார். “என்ன?” என்று கேட்டார் ஜோதி, “நானா கத்துக்கிட்ட ஒரு பிட் வாசிக்கணும்னு ஆசையா இருக்கு” என்றார். அனுமதி கொடுத்ததும் அவர் வாசித்தது `தள்ளிப் போகாதே...’. `‘நல்லா வாசிக்கிறாரே... பயிற்சி எடுத்துக்கிட்டா இன்னும் கலக்கலாம்’’ என்று பாராட்டு வாங்கியதும் நடராஜ் முகத்தில் பரவசம்.

அதன் பிறகு நம்மை அவர்கள் அழைத்துச் சென்றது ரஷ்யன் பியானோ ஸ்டுடியோவுக்கு. அங்கு இருந்த கிராண்ட் பியானோவை நமக்காக வாசித்துக்காட்டி அசத்தினார் புனிஷ் ஷர்மா. கறுப்பு வெள்ளைக் கட்டைகளை அவர் கையாண்டவிதம் அத்தனை அழகு. கிட்டத்தட்ட ஓர் அழகிய குழந்தையை முதன்முதலில் எடுத்துக் கொஞ்சும் தாயின் வாஞ்சையுடன் அவர் பியானோவைக் கையாண்டார். அந்த அறை முழுவதும் வழிந்து ஒரு நதிபோல ஓடியது இசை.

அடுத்ததாக ஜோதி அழைத்துச் சென்றது, கே.எம் கன்சர்வேட்டரியின் இயக்குநர் அறைக்கு. உள்ளே அமர்ந்து இருந்தவர் ரஹ்மானின் சகோதரி ஃபாத்திமா.

“ஆனந்த விகடன்ல இருந்து வந்திருக்கீங் கன்னதும் உடனே ஓடிவந்தேன்” என்று மகிழ்ச்சியானார் ஃபாத்திமா. “ரஹ்மான் சார் எங்கு இருக்கார், அவர் அடுத்து எப்ப மலையாளத்துல மியூஸிக் போடுவார், சார்... வீட்ல எப்படி?” என்று இவர்கள் படபடவெனக் கேட்க, சிரித்துக்கொண்டே பதில் அளித்தார் ஃபாத்திமா.

“அவரோட சிறப்பே ரொம்ப எளிமையா இருக்கிறதுதான். சொன்னா நம்ப மாட்டீங்க. இங்கே வருஷத்துக்கு ஒரு தடவையோ ரெண்டு தடவையோதான் வருவார். ஆனா, யார்கிட்டயும் சொல்ல மாட்டார். பூனை மாதிரி யாருக்கும் தெரியாம வந்துட்டுப் போயிடுவார். அவர் விசிட், ஸ்டூடன்ட்ஸுக்கே சர்ப்ரைஸா இருக்கும்” என்றார்.

“பிரியா பாடுவா மேடம். உங்க முன்னாடி பாடணும்னு ஆசைப்படுறா” என்று இந்துமதி சொன்னதும் “என் மேல் விழுந்த மழைத்துளியே” என்று பிரியதர்ஷினி பாடினார். “இவ்ளோ நல்லா பாடுறீங்களே... குரலும் யுனிக்கா இருக்கு” என்று பாராட்டினார் ஃபாத்திமா.

எல்லாரும் கோரஸாக “சார், இன்னும் ரெண்டு ஆஸ்கர் வாங்கிட்டு வரணும்” என்றார்கள்.

“உங்க எல்லாரோட அன்பும் பிரார்த்தனையும் இருந்தா, நிச்சயம் நடக்கும்” என்று பதில் சொன்னார் ஃபாத்திமா.

``இந்த காலேஜ் அவர் சின்னதா ஆரம்பிச்சு, இந்த எட்டு வருஷங்கள்ல இவ்ளோ பெருசா வளர்ந்திருக்கு. அருகில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் அறக்கட்டளை மூலமா இலவசமாகவும் குழந்தைகள் கத்துக்கிறாங்க. உலக இசையில் பல உயரங்கள் இருக்கு. அது பெரிய கடல். முடிஞ்சவரை எல்லாருக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கணும்னு ரொம்பப் பெரிய இசை விற்பன்னர்கள் மூலமா கத்துக் கொடுத்துட்டிருக்கோம்” என்று கே.எம் மியூஸிக் கான்சர்வேட்டரியைப் பற்றி சொன்னார் ஃபாத்திமா.

“ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் இசைக் கல்லூரியைச் சுற்றிப்பார்த்த இந்த நாளை, நிச்சயமா எங்க வாழ்நாள்ல மறக்கவே முடியாது” என கோரஸாக நன்றி கூறினர். எங்கும் இசை வியாபித்திருந்த அந்தக் கட்டத்தைவிட்டுப் பிரிய மனம் இல்லாமல் வெளியே வந்தனர் ஐவரும்!

வாசகர்களே... இதுபோல ரசனையான, நெகிழ்ச்சியான, ஜாலியான, காமெடியான ஆசைகளை எழுதி அனுப்புங்கள். ஆசிரியர் குழுவினரின் பரிசீலனையில் தேர்வாகும் ஆசைகளை, விகடன் நிறைவேற்றித் தருவான். உங்கள் ஆசைகளை அனுப்பும்போது அலைபேசி எண்ணை மறக்காமல் குறிப்பிடுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி...

ஆசை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

இ-மெயில்: aasai@vikatan.com