ஆர்கானிக் கண்டுபிடிப்பது எப்படி?

ரசாயனம் பயன்படுத்தி விளையும் காய்கறிகள் ‘பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும், அளவில் பெரியதாகவும், அந்தக் காய்கறிகளுக்கே உரித்தான மணம் இல்லாமலும் இருக்கும். சமைத்துச் சாப்பிடும்போது அந்தக் காய்கறிகளின் உண்மையான ருசியும் இருக்காது. ஆனால், ஆர்கானிக் காய்கறிகள் அப்படி அல்ல. அதில் பளபளப்பும் மினுமினுப்பும் இருக்காது. ஆனால், அவற்றின் உண்மையான மணமும் ருசியும் நிச்சயம் இருக்கும். அதேபோல்தான் அரிசி உள்ளிட்ட தானியங்கள், பயறு வகைகள், கீரைகளின் சுவையும் மணமும் குறையாது.

அலுப்புக் குழம்பு

தேவையானவை: சுக்கு, சித்தரத்தை, பரங்கிச் சக்கை - தலா ஒரு துண்டு, மிளகு, வால் மிளகு, வெள்ளை மிளகு, மோடிக் குச்சி - தலா 10, திப்பிலி - 5, கடுகு, சீரகம், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கத்திரிக்காய் - அரை கிலோ, மொச்சை - 100 கிராம், புளி - சிறிது அளவு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: சுக்கு, சித்தரத்தை, மிளகு, பரங்கிச் சக்கை, வால் மிளகு, வெள்ளை மிளகு, திப்பிலி, மோடிக் குச்சி, சீரகத்தை லேசாக வறுத்து, மஞ்சள்தூள் சேர்த்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டுத் தாளித்து, வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், ஊறவைத்த மொச்சை, அரைத்து வைத்துள்ள பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும்.

பலன்கள்: உடல் வலி, அசதியைப் போக்கும். சளித் தொல்லை நீங்கும். பசியைத் தூண்டும். அடிக்கடி சாப்பிட்டால், ரத்த உற்பத்தியை ஊக்குவிக்கும். குழந்தை பெற்ற பிறகு, உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றும். அடிவயிற்றுச் சதையைக் குறைக்கும்.

முளைகட்டிய தானியக் கஞ்சி

தேவையானவை: கோதுமை, வெந்தயம், கொள்ளு அனைத்தும் சேர்ந்து - 4 கப், மோர் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை, வெந்தயம், கொள்ளு மூன்றையும் எட்டு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடிகட்டி, துணியில் கட்டி எட்டு மணி நேரம் தொங்கவிட வேண்டும். நன்றாக முளைகட்டிய பிறகு எடுத்து, நிழலில் ஒருநாள் உலர்த்திய பிறகு வெயிலில் நன்றாகக் காயவைத்து, மெஷினில் கொடுத்து அரைக்க வேண்டும். அடி கனமான வாணலியில் ஒன்றரை டம்ளர் நீர் விட்டு, இரண்டு டேபிள்ஸ்பூன் முளைகட்டிய தானிய மாவைக் கரைத்துக் கொதிக்கவிடவும். கொதித்து ஆறியதும், உப்பு, மோர் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், உடல் எடை மூன்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். ரத்தசோகையைப் போக்கும். பித்தநீர் சுரப்பை மேம்படுத்துவதால், செரிமானம் எளிதாகும்.