அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை. சஞ்சய் சுப்ரமணியனின் கச்சேரி கேட்டுவிட்டு வெளியே வரும்போது, உடலுக்குள் இரண்டு பாட்டில் புது ரத்தம் பாய்ச்சியதுபோல் ஓர் உற்சாகம் பீறிடுகிறது. பாரத் கலாச்சாரில், ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடிய திருப்பாவையில் ஆரம்பித்து, வேதநாயகம்பிள்ளையின் பாடலுடன் முடியும் வரையிலான இரண்டே முக்கால் மணி நேரம் எங்கேபோனது, எப்படிப் போனது என்றே தெரியவில்லை.

19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் வேதநாயகம் பிள்ளை. ‘பணமே உன்னால் என்ன குணமே... தண்டம் பண்ணினேன் சற்றும் என் கண்ணின் முன் நில்லாதே...’ என ஆரம்பமாகும் பிள்ளையின் பாடலை, ‘ஓடி ஓடி அற்பரைப் போய் அடுப்பாயே... உத்தமரைக் கண்டால் ஓட்டம் எடுப்பாயே...’ என சஞ்சய் பாடி முடித்தபோது, demonetisation நினைவுக்கு வந்தவர்களாக ரசிகர்கள் எழுப்பிய கரவொலி அடங்க, நெடுநேரம் ஆனது.

தேனுகா, மாளவி ராகப் பாடல்கள்... அடுத்து அருணாசலக் கவிராயரின் ‘எப்படி மனம் துணிந்ததோ...’ பாடிவிட்டு செட்டில் ஆனார் சஞ்சய். அடுத்து, அழைத்துவந்தார் வசந்தாவை. ஆரம்பத்தில் படுசமத்துப் பெண்ணாக அறிமுகப்படுத்தினார். படிப்படியாக வளர்ந்து, அழகின் வடிவமாக அரங்கம் சுற்றி வளையவந்தாள். நடுவே ஷட்ஜத்தில் சஞ்சய் நீ...ண்ட கார்வைக் கொடுத்துப் புல்லரிக்கவைத்தார். ‘ஸ்ரீ காமாட்சி... கடாட்சி...’ என்ற சுப்பராய சாஸ்திரியின் பாடலில், ‘வேதபுரீஸ்வரியே... ஆதாரம் எனக்கு நீயே...’ வரியில் வசந்தாவின் உயிர்நாடிப் பிடிகளுடன் நிரவல், ஸ்வரங்கள் பாடி முடித்தபோது, வேதபுரீஸ்வரி கோயிலுக்குக் குடமுழுக்கு நடந்து முடிந்த முழு திருப்தி. நெஞ்சைத் தொடும் சங்கீதம் எனச் சொல்ல முடியாது. ஆனால், ஜனரஞ்சகத்தின் உச்சம் சஞ்சய் பாட்டு.

‘வரதராஜா... நீ உடனே பூவுலகம் புறப்பட்டுச் செல். அங்கு நீ வயலின் கலைஞனாகத் தேர்ச்சிபெற்று, சஞ்சய் சுப்ரமணியன் என்கிற திறமைமிகு பாடகருக்கு நிறைய வாசித்து, அவர் பாட்டுடன் ஒன்றிவிடுவாய்’ என்று வயலின்
எஸ்.வரதராஜன் வரம் வாங்கி வந்திருப்பார் என்றே தோன்றுகிறது. சஞ்சய் - வரதராஜன் சங்கீத கெமிஸ்ட்ரி என்றுமே வீரியம் நிரம்பிய ஒன்று.

சிலபல வருடங்களுக்கு சஞ்சய் இன்றி அமையாது சீஸன் உலகு.

நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ துர்முகி வருடம், கார்த்திகை மாதம் 30-ம் தேதி (15.12.2016) வியாழக்கிழமை திருவாதிரை நட்சத்திரம்கூடிய சுபயோக சுபதினத்தில் பகல் 1:30 மணிக்கு மேல் 3 மணிக்குள் இளம் பாடகி பிருந்தா மாணிக்கவாசகத்தின் கச்சேரி, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கில். (பிருந்தாவுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. வரும் பிப்ரவரி மாதத்தில் கெட்டிமேளம்!)

நாகர்கோவிலில் பிறந்த இவர், 10-ம் வகுப்பு வரையில் படித்தது துபாயில். அப்பா, கர்னாடக இசைப்பிரியர். ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்க, சென்னை வந்துவிட்டார் பிருந்தா. முதலில் டாக்டர் மஞ்சுளா ஸ்ரராமிடம் பாட்டு கற்றார். பின்னர், நெய்வேலி சந்தானகோபாலனிடம். கடந்த எட்டு வருடங்களாக சுகுணா வரதாச் சாரியிடம் கற்றுவருகிறார். தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படிப்பு முடித்து, அமெரிக்கா ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் Bio Statistics பிரிவில் எம்.எஸ் முடித்துவிட்டு, தற்போது முழுநேரமும் சங்கீதம்.

மேடையில் பாடும்போதும் மூக்குக்கண்ணாடி அணிகிறார் பிருந்தா மாணிக்கவாசகம். லென்ஸ் அணிவது இல்லை. ரயிலில் ஸ்லீப்பர் கோச்சில் பயணிப்பதுபோல் இவரது உடல் ஆடிக்கொண்டே இருக்கிறது. மிருதங்க வித்வான் ‘தனி’ வாசிக்கும்போதும் ஆட்டம்போடுகிறார்.

ரொம்பக் கரகரப்பாக இல்லாமலும், ஓவரான இனிமை இல்லாமலும் நடுவாந்திரமான குரல் பிருந்தாவுக்கு. அழுது வடியாமல் கம்பி மத்தாப்பு மாதிரி சங்கதிகள் சிதறுகின்றன.

மெயினாக தோடி. நேரம் கருதி பைபாஸில் சென்று ஆலாபனையைச் சீக்கிரம் முடித்துக்கொண்டார். ‘தாசுகோவலெநா தாசரதி...’ பாடலை (தியாகராஜர்) பத சேதம் இன்றி பாடினார். ‘ஸௌமித்ரி த்யாகராஜுநி மாட பல்கிதே...’ என்பது சரணத்தின் கடைசி வரி. நிரவல் செய்யும்போது ‘ஸௌமித்ரி த்யாகராஜுநி...’வுடன் நிறுத்திக்கொண்டது எப்படி சரி?

பிருந்தா மாணிக்கவாசகம் மற்றும் வயலினில் இனிமை பொழிந்த ஷ்ரேயா தேவநாத் இருவருமே எதிர்கால `கருண் நாயர்’கள்.

மியூஸிக் அகாடமியில் மட்டும், மிருதங்க ஒலி எப்படி அத்தனை துல்லியமாகக் கேட்கிறது? மிருதுவாக வாசித்தாலும், மிரட்டி அடித்து வாசித்தாலும் சொகுசான மிருதங்கத் தாளமும் நாதமும் அகாடமியில் மட்டுமே.

இங்கே மாண்டலின் ராஜேஷ் கச்சேரி. இவர் ‘ச’ என ஒரு ஸ்வரம் வாசித்து முடிப்பதற்குள் ‘என்னதான் இருந்தாலும்...’ என்று இவரது சகோதரர் யு.ஸ்ரீனிவாஸின் வாசிப்போடு ஒப்பிட்டு மதிப்பீடுசெய்வது ரசிகனின் இயல்பு. இதையும் மீறி ராஜேஷின் வாசிப்பில் தென்றல் வந்து தொடுகிறது என்பது நிஜம். ‘என் உள்ளத்தில் உள்ள துயரத்தை யாரிடம் கூறுவேன்? ஜதை கூடி சதா பஜனை செய்தும், காரியங்கள் அனைத்தும் வேறாக முடிந்தன...’ என்று பொருள் தரும் தியாகராஜரின் மானவதி ராகக் கீர்த்தனையை (எவரிதோ நே தெல்புது ராம...) ராஜேஷ் வாசித்தபோது, அவரது சொந்தக் கதையும் நினைவுக்கு வந்தது.

சண்முகப்ரியா ராகத்தின் பிரத்யேகப் பிடிகள் சிலவற்றை குழைத்துக்கொடுத்தார் ராஜேஷ். பல்லவியை அருமை அண்ணனுக்கு அர்ப்பணிக்கும்விதமாக, ‘அருள் செய்யவே ஸ்ரீனிவாசா... குருவே சரணம் ஈசனே...’ வரிகள்.

பரதனுக்கு அண்ணல் ராமனின் பாதுகைகள் மாதிரி, ராஜேஷுக்கு அண்ணன் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் நிச்சயம் அருள் பாலிக்கும்!

மதில் சுவர் மாதிரி அமைக்கப்பட்டு, மாடங்களில் மின்சார தீபம் எரியவிட்டு... சீஸனில் நாரதகான சபாவின் கண்கவர் மேடை அலங்காரம், பத்துக்கு எட்டு மார்க் பெறுகிறது.

இந்த இடத்தில் ‘ஆனந்த நடன பிரகாசம்...’, அபிஷேக் ரகுராம் பாடிய முதல் அயிட்டம். இவரது தாறுமாறான கற்பனையில் சிதறி விழும் சங்கதிகள் அரங்கம் முழுவதும் தெறிக்கின்றன. வழக்கம்போல் அபிஷேக் கச்சேரிகளில் சாந்தமும் சௌக்கியமும் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடும் என்பது யாவரும் அறிந்ததே. எந்த ராகமாக இருப்பினும், Open Throat-ல் குரல் உயர்த்திப் பாடுவது இவரது ஸ்டைல்.

அபிஷேக் அடுத்தடுத்து இரண்டு ராகங்களைப் பாடியபோது, கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல் இருந்தது. பாடல் வரிகளைக் குறித்துக்கொண்டு வீடு வந்து புத்தகத்தைப் புரட்டியபோது, அவை கன்னட பங்காளா மற்றும் வர்தநி ராகங்கள் என்பது தெரிந்தது. அதிகம் புழக்கத்தில் இல்லாத ராகங்களின் பெயரை மேடையில் அறிவித்தால் என்ன குறைந்துபோய்விடுமோ!

தம்புராவைப் படுக்கவைத்துவிட்டு, அபிஷேக் பாடிய ஹம்சானந்தி ராகமும் தாளமும் ஸ்வரங்களில் கணக்குவழக்கும் வயலினில் ஹெச்.என்.பாஸ்கர் கொடுத்த பதிலடிகளும் ஓகோ! மிருதங்கம் பத்ரி சதீஷ்குமாருக்கு, ஒரே மேடையில் அடுத்தடுத்து இரண்டு கச்சேரிகள். 4 மணிக்கு (லால்குடி கிருஷ்ணன் - விஜயலட்சுமி) மிருதங்கத்தை எடுத்தவர் 9:30 மணிக்குத்தான் உறைக்குள் வைத்தார். விரல்கள் வலி கண்டிருக்குமே!

சமீப காலமாக சினிமாவில் அதிக ஹிட் கொடுத்தவர். மிகச் சமீபத்தில் கவிஞர் தாமரை எழுதி, இவர் பாடிய ‘தள்ளிப் போகாதே...’ பாடல், இன்று டீன்களின் தேசிய கீதம். இந்த இளைஞர், சீஸனில் கர்னாடக இசை மேடைகளில் ஒரு ரவுண்டு அடித்திருக்கிறார். பி.எஸ்.நாராயணசாமியின் சீடர்.

பிரம்ம கான சபாவுக்காக பி.எஸ்.மேல்நிலைப் பள்ளி அரங்கில் பாடிய கச்சேரியை, தோடி வர்ணத்துடன் ஆரம்பித்தார் சித்ஸ்ரீராம். பிலஹரியில் ‘ஸ்ரீமதுராபுரி’, சுபபந்துவராளியில் ‘ஸ்ரீசத்யநாராயணம்’ என்று வளர்ந்த பட்டியல், பைரவியில் ‘பாலகோபால’வில் மையம்கொண்டது.

ஏற்கெனவே கலைந்த தலையை மேலும் கலைத்துவிட்டுக்கொள்வது, கை விரல்களை சொடுக்கிவிட்டுக்கொள்வது என, மேடையில் படு கேஷுவல் அணுகுமுறை சித்ஸ்ரீராமுக்கு. பெரும்பாலும் குரல் உயர்த்தியே பாடுகிறார். அதனால் செவிகளோடு நின்று, இதயம் தொட மறுக்கிறது பாடல். தியாகராஜரின் ‘நீகே தயராக...’ பாடலை நீலாம்பரியில் பாடியது மட்டும் பரமசுகம்.

‘என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை...’ என துக்கடா பகுதிகளில் பாடினார் சித்ஸ்ரீராம். சினிமாக்களில் ஆவேசமான க்ளைமாக்ஸ் காட்சிகளுக்குப் பாடுவதுபோல் இன்றி, சன்னமாகப் பாடப் பழகினால் யாருடைய மனமும் இரங்கும்.

தியாக பிரம்ம சபாவுக்காக வாணிமகாலில் விஜய சிவா. மேடையில் இரு பக்கங்களும் இரண்டு வீடியோ திரைகள். பாடும் ராகம், பாடல், அதை இயற்றியவர், தாளம் இவற்றுடன் பாடலின் பொருள் அனைத்தும் திரையில் அடுத்தடுத்து வந்தன. சொல்லிவைத்தது மாதிரி இரண்டரை மணி நேரத்தில் கச்சேரி முடியும் அளவுக்கு பக்காவாக ப்ளான் செய்து வந்திருந்த விஜய சிவாவுக்கு ஸ்பெஷல் பாராட்டு.

மெத்த படித்த, ஜிப்பா அணிந்த சம்ஸ்கிருத பண்டிதர் மாதிரி தேஜஸ் நிரம்பிய முகத்துடன் காணப்படுகிறார் இவர். அவ்வப்போது இரு கைகளையும் கட்டிக்கொண்டு ஆலாபனை செய்கிறார். கைத்தட்டல்களைக் குறிவைக்காத கர்மயோகி. இரண்டு சீடர்கள் இரண்டு தம்புராக்களுடன். இவர்களுக்கு மைக் உண்டு. ஆங்காங்கே சீடர்களைப் பாடவும்விடுகிறார்.

சுத்தபத்தமாக விஜய சிவா பாடிய பிலஹரி, மத்யமாவதி, பைரவி உள்ளிட்ட ராகங்கள் அக்மார்க் ரகம். நிரவல், ஸ்வரங்களில் உருட்டல், பிரட்டல்கள் செய்து வார்த்தைகளை விழுங்கி ஏப்பம் விடாமல், ஒவ்வொன்றும் அட்சர சுத்தம்.

துக்கடா செக்ஷனில், வயலின் கலைஞர் ஆர்.கே.ஸ்ரீராம்குமார் ட்யூன் செய்த தியானேஸ்வரின் அபங்கம் ஒன்றும் பாடினார் விஜய சிவா. தவிர, ஜாவளி, தேசபக்திப் பாடல், திருப்புகழ் எல்லாம் உண்டு. திகட்டாத மெனு.

சாருமதி ரகுராமின் வயலின் வாசிப்பு, கச்சேரியின் தரத்தை மேலும் உயர்த்தியது. காதுகளை இம்சிக்காத ரம்மியமான bowing. நிறைய இடங்களில் பாடகரிடம் இருந்து ‘பேஷ்... பேஷ்’ வாங்கினார்.

மனோஜ் சிவா (மிருதங்கம்), சந்திரசேகர சர்மா (கடம்) ஆகியோர் தேவையான ஒத்துழைப்பை மட்டும் நல்கினர்.

- டைரி புரளும்...