Published:Updated:

கெத்து காட்டும் கோஹ்லி...

கெத்து காட்டும் கோஹ்லி...
பிரீமியம் ஸ்டோரி
கெத்து காட்டும் கோஹ்லி...

பு.விவேக் ஆனந்த், தா.ரமேஷ்

கெத்து காட்டும் கோஹ்லி...

பு.விவேக் ஆனந்த், தா.ரமேஷ்

Published:Updated:
கெத்து காட்டும் கோஹ்லி...
பிரீமியம் ஸ்டோரி
கெத்து காட்டும் கோஹ்லி...

ந்திய கிரிக்கெட்டுக்கு இது பொற்காலம். தொடர்ந்து 18 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியையே தழுவாத அணியாக 2017-ம் ஆண்டுக்குள் நுழைந்திருக்கிறது இந்தியன் டீம்!

கெத்து காட்டும் கோஹ்லி...

கோஹ்லி ஏன் கேப்டன் ஆனார்?

2014-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில்தான், தோனியிடம் இருந்து டெஸ்ட் கேப்டன் பதவி திடீரென கோஹ்லிக்கு வந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவித்தார் தோனி. இந்த அதிரடி முடிவுக்கு, தோனி தலைமையிலான அணி சந்தித்த தொடர் தோல்விகள்தான் காரணம்.

2011-14 என மூன்று ஆண்டுகளில் வெளிநாடுகளில் ஆடிய 22 டெஸ்ட் போட்டிகளில், இந்தியா வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது.

13 போட்டிகளில் பரிதாபகரமான தோல்வி. டெஸ்ட் ரேங்கிங்கில் ஏழாவது இடத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தது இந்திய அணி. இப்படிப்பட்ட சூழலில்தான் கேப்டன் ஆனார் கோஹ்லி.

இரண்டே ஆண்டுகளில் இன்று இந்தியாதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1. இப்போதைக்கு எந்த அணியும் அசைக்க முடியாத அளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.

எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்?


விராட் தலைமையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா ஆடியிருக்கும் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை 22. இதில் ஜெயித்த போட்டிகள் 14. வெறும் இரண்டு போட்டிகளில்தான் இந்திய அணி தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்த வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கும் கோஹ்லியின் அபாரமான கேப்டன்சி  பாராட்டப்படவேண்டியது. கோஹ்லி கேப்டனான ஆஸ்திரேலியத் தொடருக்கு அடுத்து, கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் அடுத்த டெஸ்ட் தொடரை இந்தியா விளையாடியது.

இந்த இடைப்பட்ட ஆறு மாதங்களில் கோஹ்லி சுத்தமாக சிங்க்கிலேயே இல்லை. உலகக்கோப்பை அரை இறுதியில் அசட்டையாக ஆடியது, அனுஷ்கா சர்மாவுடனான காதல், மோதல், பிரிவு என எல்லாம் சேர்ந்து கோஹ்லி அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்தார். `இவர் எப்படி டெஸ்ட் கேப்டன்ஷிப்பைத் தாங்குவார்?' என அப்போது விமர்சனங்கள் பறந்தன.
ஆனால், கோஹ்லி அமைதியாக இருந்தார். ஒரு நாள் போட்டிகளில் இழந்த ஃபார்மை மீட்டெடுக்க வேண்டும், டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாகவும் ஜெயித்துக்காட்ட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் பயிற்சிகளை அதிகப்படுத்தினார் கோஹ்லி.

பேட்டிங் டிப்ஸுக்காக, டிராவிட்டுடன் நிறைய நேரம் செலவிட்டார். `நீ விரும்பியது உனக்குக் கிடைத்திருக்கிறது. ஒரு வீரருக்கு இதைவிட நல்ல வாய்ப்பு அமையாது. 26 வயதில் இந்திய அணிக்கு டெஸ்ட் கேப்டன் என்பது சாதாரண விஷயம் அல்ல. உன்னிடம் தலைவனுக்குரிய தனிப் பண்புகள் இயல்பாகவே தெரிகின்றன. ஆஸ்திரேலியத் தொடரில் உனது திட்டம் தோல்வி அடைந்தது என்றாலும், அது கவனிக்கப்பட வேண்டியது. எழுந்து நில்; திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்; அணியை நிமிரவை' என கோஹ்லிக்கு உற்சாகம் தந்திருக்கிறார் டிராவிட். இதன் பிறகுதான் `இந்திய அணிக்குள் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழவேண்டும், புதியவர்கள் யாரெல்லாம் அணிக்குள் வர வேண்டும்' என பக்கா ப்ளானோடு ரெடியானார் கோஹ்லி. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கெத்து காட்டும் கோஹ்லி...

கோஹ்லியின் அணுகுமுறை!

குறுகியகால வெற்றிகள் அல்ல... நீண்டகால வெற்றிக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு கோஹ்லியிடம் இருக்கிறது. அதுதான் கோஹ்லியின் தொடர்ச்சியான வெற்றிக்குக் காரணம். வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் அணியில் எந்த மாற்றங்களையும் செய்ய மாட்டார் தோனி. ஆனால், கோஹ்லி கேப்டனாக இருந்த 22 டெஸ்ட் போட்டிகளிலுமே நிலையான ஒரே அணி இல்லை. வீரர்களை மாற்றிக்கொண்டே இருந்தார். அஷ்வின் மட்டும் விதிவிலக்கு. யாரை எந்த இடத்தில் இறக்குவார் என்பதிலும் புதிர். கிட்டத்தட்ட டீமில் யார் இல்லை என்றாலும் அணி இயங்கும்; ஜெயிக்கும் என்ற சூழலை உருவாக்கிவிட்டார் கோஹ்லி. அதே சமயம் `முடிந்தால் உன்னை நிரூபித்துக்கொள்’ என, கெளதம் கம்பீர், ஹர்பஜன் சிங், சாகா, பார்த்திவ் படேல், அமித் மிஸ்ரா போன்ற சீனியர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க கோஹ்லி தயங்கவில்லை.

கோஹ்லியின் பேக்கப்!

ஒரு பக்கம் அணியை வழிநடத்துவதில் கவனம் செலுத்திக்கொண்டே, இன்னொரு பக்கம் பேக்கப் வீரர்களை தயார்செய்வதில் அதிகமான கவனம் எடுத்துக்கொள்கிறார் கோஹ்லி. அணியில் எந்த வீரருக்கும் எப்போது வேண்டுமானாலும் காயங்கள் ஏற்படலாம். ஆனால், ஒரு தொடருக்கு ஃபுல் ஃபிட்டாக ஃபார்மில் இருப்பவர்கள்தான் தேவை என்பது கோஹ்லியின் பாலிசி. அதில் சொதப்புபவர்கள் தவானாக இருந்தாலும், ரோஹித்தாக இருந்தாலும், ரஹானேவாக இருந்தாலும் விலக்கியே வைக்கிறார்.

ஜூனியர்களை இந்திய சீனியர் அணிக்குள் அனுப்பும் பொறுப்பை ஏற்றிருக்கும் டிராவிட்டுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறார் கோஹ்லி. அதனால்தான் ராகுல், கருண் நாயர், ஜெயந்த் யாதவ், நமன் ஓஜா, ஷர்துல் தாகூர் என வீரர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். எந்த வரிசையில் யார் சறுக்கினாலும் பக்காவாக அந்த ரோலை எடுத்துச் செய்ய ஜூனியர் ஒருவர் அணிக்குள் வந்துவிடுகிறார்.

பெளலிங் ப்ளான்

மற்ற கேப்டன்கள் எல்லோரும், ஒரு வீரர் நன்றாகப் பந்து வீசினால், அவரையே மீண்டும் மீண்டும் வீசச் சொல்வார்கள். அப்போதைய சூழ்நிலையில் போட்டியில் தோற்காமல் இருந்தால் போதும் என டிஃபன்ஸிவ் டெக்னிக் எடுக்கும் கேப்டன்களுக்கு மத்தியில் வித்தியாசப் படுகிறார் கோஹ்லி. `டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனைவிட விக்கெட் வீழ்த்தவேண்டிய பெளலர்கள்தான் முக்கியம். எதிர் அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தும் பலம் இல்லாமல் எவ்வளவு ரன்கள் அடித்தும் பிரயோஜனம் இல்லை. அணியில் நிச்சயம் ஐந்து பெளலர்கள் வேண்டும். சரியான நேரத்தில் தேவைப்படும் ஓவர்களை மட்டும் அவர்கள் வீசினால் போதுமானது' என்று தன்னுடைய கேம் ப்ளானை வெளிப்படையாகச்  சொல்லியிருக்கிறார்.

அரவணைக்கும் கோஹ்லி

சென்னை டெஸ்ட்டில் கருண் நாயர் இரட்டை சதம் அடித்தபோதே இந்தியா நல்ல நிலையில்தான் இருந்தது. கமென்ட் டேட்டர்களும் `இதுதான் டிக்ளர் செய்ய நல்ல நேரம். அப்போதுதான் இந்தியாவால் இந்த டெஸ்ட்டில் வெற்றிபெற முடியும்' எனச் சொன்னார்கள். ஆனால், `இரட்டைச் சதத்தைக் கடந்த பிறகும் நல்ல டச்சில் இருக்கிறார் கருண் நாயர். ஸ்டிரைக் ரேட்டும் நன்றாக இருக்கிறது. அவர் இன்னும் கொஞ்சம் நேரம் விளையாடட்டும்' என டிக்ளர் செய்யாமல்விட்டார் கோஹ்லி. முச்சதம் அடித்து சாதனை படைத்தார் கருண் நாயர். தான் மட்டுமே ஸ்கோர் செய்ய வேண்டும் என நினைக்கும் சீனியர்களுக்கு மத்தியில் உயர்ந்து நின்றவர், மற்ற இளம் வீரர்களுக்கும் இதன் மூலம் கூடுதல் நம்பிக்கையை விதைத்தார்.

கெத்து காட்டும் கோஹ்லி...

கோஹ்லிக்குக் காத்திருக்கும் சவால்கள்

`இது ஆரம்பம்தான். அடுத்து நமக்கு தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணங்கள் இருக்கின்றன. இந்திய கிரிக்கெட், தன்னை யார் என இனிமேல்தான் உலகுக்குக் காட்டப்போகிறது. கொஞ்சம் பொறுத்திருங்கள்' என்று புத்தாண்டுச் செய்தி சொல்கிறார் கோஹ்லி.

 2017-ம் ஆண்டில் இந்தியாவில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறது. அதன் பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை முழுவதுமாக இந்தியா, வெளிநாடுகளில்தான் விளையாட வேண்டும். ஆசியாவுக்கு வெளியே விளையாடும்போதுதான் இந்தியா கடும் சவால்களைச் சந்திக்கவேண்டியிருக்கும். பெளன்ஸர்களையும், சரமாரியாக ஸ்விங் ஆகும் பந்துகளையும் இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளிக்க வேண்டும். எதிர் அணியின் 20 விக்கெட்களையும் இந்தியா வீழ்த்த வேண்டும். இந்தச் சவால்களைச் சமாளிக்க, கோஹ்லி என்ன திட்டம் தீட்டியிருக்கிறார் என்பது இனிதான் தெரியும்.

இனி என்ன ஆவார் தோனி?

`கோஹ்லியின் தொடர் டெஸ்ட் வெற்றிகளால், அடுத்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20/20 போட்டிகள், தோனிக்கு கத்தியின் மேல் நடப்பதுபோல் இருக்கும். ஒரு போட்டியில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்தால்கூட அது தோனியின் கேப்டன்ஷிப்பைக் கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கும்' எனக் கூறினார் முன்னாள் கேப்டன் கங்குலி. ஆம், `2019-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் உலகக்கோப்பை வரை விளையாட நான் தயாராக இருக்கிறேன்' என்கிறார் தோனி. ஆனால், அவரை கேப்டனாகத் தொடரவைக்கலாமா... வேண்டாமா? என்று முடிவெடுக்கும் கட்டத்தில் இருக்கிறது இந்தியத் தேர்வுக்குழு. ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராஃபியில், இந்தியா பின்னடைவைச் சந்தித்தால் தோனியின் கேப்டன் பதவி காலி என்பதே விமர்சகர்களின் கருத்து. உலகம் முழுக்கவே, ஒவ்வொரு ஃபார்மெட்டுக்கும் வெவ்வேறு கேப்டன் என்கிற ஃபார்முலா தோல்வியைச் சந்தித்துவருகிறது. இந்தச் சூழலில் டெஸ்ட் அணிக்கு இளம் வீரரை கேப்டனாகவும், லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டுக்கு சீனியரை கேப்டனாகவும் வைத்திருந்தால் அது தேவை இல்லாத பாலிட்டிக்ஸை அணியில் கொண்டு வரும் என எண்ணுகிறது பி.சி.சி.ஐ. ரசிகர்களிடமும் இப்போது கோஹ்லிக்குத்தான் அதிக லைக்ஸ் என்பதால், தோனியை இந்த ஆண்டோடு கேப்டன்சியில் இருந்து விலக்கும் எண்ணத்திலேயே இருக்கிறது பி.சி.சி.ஐ.

ஆனால், 35 வயதானாலும் இன்னமும் விக்கெட்டுகளுக்கு இடையே தோனியைப் போல உலகின் எந்த வீரரும் ஓடிவிட முடியாது. அந்த அளவுக்குப் பயங்கர ஃபிட்டானவர் என்பதோடு, தோனியை மிஞ்சும் அளவுக்கு இந்திய அணிக்கு வேறு விக்கெட் கீப்பர் சாய்ஸும் கிடையாது.

`தோனி, தானே முன்வந்து கேப்டன்சியை கோஹ்லியிடம் ஒப்படைப்பாரா? ஈகோ இல்லாமல் கோஹ்லி தலைமையில் விளையாடுவாரா அல்லது திடீர் ஓய்வை அறிவிப்பாரா?' என்கிற பரபர கேள்வி களுக்கு விடை சொல்ல இருக்கிறது  2017-ம் ஆண்டு கிரிக்கெட் சீஸன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism