
''பதவியேற்றதில் இருந்து சர்வதேச அளவில் நடைபெறும் எல்லா மாநாடுகளிலும் கலந்துகொள்ளும் ஒரே பிரதமர் நம்ம மன்மோகன் சிங்தானே?''
''அக்காங்... இந்தப் பெருமைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை! மற்ற நாட்டுப் பிரதமர்களுக்கு அவங்க நாட்டுல நிறைய உருப்படியான வேலை இருக்கும் பாஸ்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''நாட்டில் பணவீக்கம் அதிகமாகும்போது நிதி அமைச்சர் என்ன செய்ய வேண்டும்?''
''மற்ற நாட்டில் எப்படியோ தெரியாது, நம் நாட்டைப் பொறுத்தவரை 'கவலை’ப்பட வேண்டும்! ஒருவேளை நிதியமைச்சர் மிகுந்த திறமைசாலி என்றால், 'மிகுந்த கவலை’ப்பட வேண்டும்!''
- அதிபன், ஈரோடு.
''வாழ்க்கையில் முன்னேற யாரைப் போல உழைக்க வேண்டும்?''
''யாரைப் போலவும் உழைக்கத் தேவைஇல்லை. ஒப்பிடுவதற்கு உழைப்பு ஒன்றும் ஒப்பந்தப்புள்ளி அல்ல. முன்னேற ஒரே வழி... நம்மைவிட நாமே அதிகமாக உழைப்பதுதான்!''
- கி.ரவிக்குமார், நெய்வேலி.
##~## |
'தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போலச் சேலை’ - பழமொழி சரிதானா?''
''சரியோ இல்லையோ, அ.தி.மு.க-க்காரர் களுக்கு என்று புதிதாக ஒரு பழமொழியை உருவாக்க வேண்டும், 'அம்மாபோல கட்சிக்காரர்கள்’. சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் படித்த செய்தி. திருவள்ளூர் மாவட்டம், ராமாபுரம் ஊராட்சியில் வார்டு கவுன்சிலராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த சேகர் என்பவர் வெற்றிபெற்றிருக்கிறார். அவர் பதவியேற்றதும் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? ஊராட்சி அலுவலகத்தில் மாட்டப்பட்டு இருந்த புகைப்படங்களை எல்லாம் கழற்றி, ஒரு ஸ்டோர் ரூமில் கடாசிவிட்டு, தன் படத்தையும் ஜெயலலிதா படத்தையும் மட்டும் மாட்டி இருக்கிறார். பிறகு, அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி, அந்தப் புகைப்படங்கள் மீண்டும் மாட்ட வைத்து இருக்கிறார்கள். கழற்றி வீசப்பட்ட அந்தப் புகைப்படங்களில் இருந்த பரிதாபத்துக்கு உரியவர்கள் காந்தி, அம்பேத்கர், திருவள்ளுவர் மற்றும் அண்ணா!''
- மாறன், சென்னை-18.
''மன்மோகன் சிங் தொடங்கி அப்துல் கலாம் வரை கூடங்குளம் பிரச்னையில் 'மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்... போக்க வேண்டும்’ என்கிறார் களே?''
''ஒருவேளை மந்திரித்து தாயத்துக் கட்டுவார்களோ?''
- மணிமேகலை, நாமக்கல்.
''காங்கிரஸுக்கும் தி.மு.க-வுக்கும் என்ன வித்தியாசம்?''
''ஒருகாலத்தில் காங்கிரஸை ஜமீன்தார் கள் கட்சி என்பார்கள். இப்போது தி.மு.க. 'ஜாமீன்தார்கள் கட்சி’ ஆகிவிட்டது!''
- தாமு, தஞ்சாவூர்.
