
``மேனேஜர் இன்னிக்கு மதியத்துக்கு மேலதான் ஆபீஸ் வருவார்னு எப்படிச் சொல்றே?''
``காலையில 6 மணிக்கு நான் வாக்கிங் போகும்போது, அவர் ஏ.டி.எம் வரிசையில் நின்னுட்டு இருந்தாரே.''
- விக்கி


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``லாரி டிரைவர் ஏன் கிளீனரைப் போட்டு மிதி மிதின்னு மிதிக்கிறார்?''
``அவன் `வரலாம் வா... வரலாம் வா... பைரவா'னு பாடினதைக் கேட்டு, வண்டியை ரிவர்ஸ் எடுத்து இடிச்சுட்டாராம்.''
- கோவை ஆவி

``ரொம்ப நாளா ஆள் நடமாட்டமே இல்லைங்கிறதுக்காக, `ஏ.டி.எம் ரூம்ல டெய்லர் கடை வெச்சுப் பொழைச்சுக்கிறேன்'னு சொல்றதெல்லாம் ரொம்பவே ஓவர் தம்பி.''
- விக்கி

``பொண்ணுக்கு மாப்பிள்ளை பாருங்க, ஒரே ஒரு கண்டிஷன்தான்.''``மாப்பிள்ளை, இளவட்டக் கல்லைத் தூக்கணுமா?''
``அதெல்லாம் வேணாம், 10,000 ரூபாய்க்கு சில்லறை வாங்குற திறமை இருந்தா போதும்.''
- கோவை ஆவி