Published:Updated:

“ரொம்ப கடுமையா பாதிக்கப்பட்டிருக்கேன்ஜி!”

“ரொம்ப கடுமையா பாதிக்கப்பட்டிருக்கேன்ஜி!”
பிரீமியம் ஸ்டோரி
“ரொம்ப கடுமையா பாதிக்கப்பட்டிருக்கேன்ஜி!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

“ரொம்ப கடுமையா பாதிக்கப்பட்டிருக்கேன்ஜி!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

Published:Updated:
“ரொம்ப கடுமையா பாதிக்கப்பட்டிருக்கேன்ஜி!”
பிரீமியம் ஸ்டோரி
“ரொம்ப கடுமையா பாதிக்கப்பட்டிருக்கேன்ஜி!”

``ம்ம்... நான் தயார். உங்க கேள்விக்கணைகளைத் தொடுங்கள்.  எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி, எப்படி அசத்துறேன் பாருங்க'' - கான்ஃபிடென்ட்டாக ரெடியாகிறார் கவிஞர் கபிலன் வைரமுத்து.


``வர்தா புயலால் வீட்டுல நெட் கனெக்‌ஷனே இல்லைங்க. டி.வி-யில்கூட நியூஸை அப்பப்பதான் பார்ப்பேன். எனக்கு பதில் தெரியலைன்னா, படிக்கிறவங்க `மக்கு அம்மா'னு நினைச்​சுடுவாங்களே'' என ஜெர்க் ஆகிறார் நடிகை தீபா ராமானுஜம்.

``அச்சச்சோ... கேள்விகள் ரொம்ப கஷ்டமா இருந்தா, என்னை மட்டும் காப்பி அடிக்கவிட்டுடணும். என்ன...டீல் ஓ.கே-வா?'' எனச் சிரிக்கிறார் சமூக வலைதளப் பிரபலம் வித்யா விஜயராகவன்.

``என்ன கேள்வி வேணாலும் கேளுங்க தம்பி. பதில் சொல்ல நான் ரெடி'' - மெல்லிதாகப் புன்னகைக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு.

“ரொம்ப கடுமையா பாதிக்கப்பட்டிருக்கேன்ஜி!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`கறுப்புப் பணம் ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில், எத்தனை நாட்களில் நிலைமை சீராகும் என மோடி அறிவித்தார்?''

பதில்: 50 நாட்கள்.

கபிலன் வைரமுத்து: ``ரொம்பவே சுலபமான கேள்வி. `50 நாட்களில் சரியாகும்'னு சொன்னார். இதுல என்ன சுவாரஸ்யம்னா... நான் புது 2,000 ரூபாய் நோட்டைப் பார்ப்பதற்கே 15 நாட்களுக்குமேல் ஆனது.  ஏ.டி.எம்., வங்கினு எங்கே போனாலும் `பணம் இல்லை'னு சொல்லிட்டாங்க. கையில் வெச்சிருந்த 3,000 ரூபாயைத்தான் கொஞ்சம் கொஞ்சமா செலவு பண்ணேன். கடைசியில் அப்பாதான் எனக்கு முதல் 2,000 ரூபாய் நோட்டைக் கொடுத்தார்.''

தீபா ராமானுஜம்: `` `50 நாட்கள்ல சரியாகும்'னு சொன்ன மாதிரி ஞாபகம். ஆனா, சரியான மாதிரியே தெரியலையே. எனக்கு ஒரு பிரச்னையும் இல்லைங்க. பாமர மக்கள்தான் ரொம்ப கஷ்டப்படுறாங்க.''

வித்யா விஜயராகவன்: ``மோடி ஜி...  `50 நாட்கள்ல சரியாகும்'னு சொன்னார்ஜி. ஆனா, அதுக்கு மேல ஆகிடுச்சுஜி. ஒண்ணும் சரியாகலைஜி. எங்க வீட்டுல எப்பவும் பாக்கெட் மணியா 500, 1,000 ரூபாய்தான் கொடுப்பாங்கஜி. ஆனா, இப்போ எல்லாம் 10, 50 ரூபாய் தான் கிடைக்குதுஜி. ரொம்பக் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கேன்ஜி''.

தங்கபாலு:
``அவர் என்னைக்கு உண்மையைச் சொல்லியிருக்கார். `50 நாட்களில் சரியாகும்'னு சொன்னார். இதுவரைக்கும் சரியாச்சா? இல்லையே... இப்பயாவது மக்கள் அவரது உண்மை முகத்தைப் புரிஞ்சுக்கணும். இந்தத் திட்டத்தால் மட்டும் இந்தியாவில் மொத்தம் 45 கோடிப் பேருக்கு வேலை இல்லை. நீங்க, நான்னு ஒட்டுமொத்த இந்தியர்களும் பாதிக்கப்பட்டிருக்கோம்'' - ஆவேசமாகிறார்.

“ரொம்ப கடுமையா பாதிக்கப்பட்டிருக்கேன்ஜி!”

``சசிகலா - சசிகலா புஷ்பா என்ன வித்தியாசம்?''

பதில்: சசிகலா - அ.தி.மு.க பொதுச் செயலாளர். சசிகலா புஷ்பா - மாநிலங்களவை உறுப்பினர்.

கபிலன் வைரமுத்து: ``இரண்டு நபர்களையும் ஒப்பிடணும்னா, முதல்ல அவங்களைப் பற்றிய போதுமான அறிவு நமக்கு இருக்கணும். அது எனக்கு இல்லை. வித்தியாசங்கள் சொல்வது சாத்தியம் இல்லை.''

தீபா ராமானுஜம்: ``அய்யோ... இதுக்கு பதில் சொன்னா, ஒண்ணும் பிரச்னை வராதே! நேத்துதான் ஷூட்டிங் ஸ்பாட்ல என்னைப் பார்த்த ஒருத்தர் `நீங்க சின்னம்மா மாதிரியே இருக்கீங்க'னு சொன்னார்.

அதிர்ந்துட்டேன். `விடுங்க... ராம்கோபால் வர்மாவுக்கு போட்டோ அனுப்பிடுறேன்'னு சொல்லி சமாளிச்சுட்டேன். சரி, பதிலுக்கு வர்றேன். ரெண்டு பேருக்கும் பல வித்தியாசங்கள் இருக்கு. லிஸ்ட்டே போடலாம். சசிகலா, ஜெயலலிதாவின் தோழி. சசிகலா புஷ்பா,

எம்.பி. சசிகலாவின் கணவர் நடராஜன். இப்பதான் போயஸ் கார்டனுக்குள் போயிருக்கார். புஷ்பாவின் கணவர் அ.தி.மு.க ஆபீஸுக்கே போய் அடிவாங்கியவர். சசிகலா, தீபாவுக்கு எதிரானவங்க; புஷ்பா ஆதரவானவங்க.''

வித்யா விஜயராகவன்:
``சசிகலா, ஜெயலலிதாவின் தோழி. இப்போ கட்சியின் பொதுச் செயலாளர் ஆகிட்டாங்க. அடுத்து முதலமைச்சர் ஆகப்போ​றாங்கனு நினைக்கிறேன். சசிகலா புஷ்பாவுக்கும் இதே ஆசைதான்.''

தங்கபாலு: ``சசிகலா, ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற உடன் பிறவா சகோதரி; அ.தி.மு.க இயக்கத்தோடு இணைந்தவர். அந்த இயக்கத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அதன் மூலம் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் ஆகியிருக்கிறார். அவ்வளவுதான்'' சசிகலா புஷ்பாவைப் பற்றிக் கேட்டபோது, சைகையால் `அடுத்த கேள்விக்கு வாங்க' என்கிறார்.

“ரொம்ப கடுமையா பாதிக்கப்பட்டிருக்கேன்ஜி!”

``கடைசியாக பணமதிப்பு நீக்கத் திட்டத்தை அமல்படுத்தி, பின்னர் கைவிட்ட நாடு எது?''

பதில்: வெனிசுலா.

கபிலன் வைரமுத்து:
``ஜெர்மனியா? இத்தாலியா? சீனாவா? என்னன்னா, இந்த முயற்சிகளை பல நாடுகள் முயற்சி செஞ்சிருக்கு. நான் சொன்ன நாடுகளிலும் இது நடந்திருக்கு. நீங்க அண்மையில் கைவிட்ட நாடு எதுனு கேக்குறீங்களா? யு.எஸ்... இல்லையா? அப்ப நீங்களே பதிலைச் சொல்லிடுங்க.''

தீபா ராமானுஜம் : ``அய்யோ! தெரியலையேப்பா. நிச்சயமா அமெரிக்கா இல்லை. ஏன்னா, இப்பதான் அங்கே இருந்து வந்தேன். இங்கிலாந்து? சீனா? வெனிசுலா?... இதுல நிச்சயம் ஏதாவது ஒரு நாடாகத்தான் இருக்கும்.''

வித்யா விஜயராகவன:
``நீங்க ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி சொல்லியிருந்தால், ஏதாவது பிட்டாவது ரெடி பண்ணி வெச்சிருப்பேன். நீங்க டக்குனு கேட்டால்... எனக்கு பக்குனு இருக்கு. சரி... சும்மா சொல்றேன், நிச்சயமா தப்பாத்தான் இருக்கும். பிரிட்டன்... இல்லையா? அப்ப பாகிஸ்தான். ச்சே... பாகிஸ்தான் இருக்காது. தெரியலையே!''

தங்கபாலு: ``காங்கிரஸ்காரன்கிட்டயே இப்படி ஒரு கேள்வியா? சமீபத்தில் இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டுவந்து மக்களுடைய கிளர்ச்சியால் 24 மணி நேரத்துலேயே வாபஸ் வாங்கிய நாடு வெனிசுலா. என்ன தம்பி, நான் ஓ.கே-தானா?''

“ரொம்ப கடுமையா பாதிக்கப்பட்டிருக்கேன்ஜி!”

``விஜயகாந்த் சமீபத்தில் ஃபேஸ்புக் லைவில் எந்தத் திரைப்படத்துக்காகப் பேசினார்?''

பதில்:
கோடிட்ட இடங்களை நிரப்புக.

கபிலன் வைரமுத்து:
``நான், அமிதாப் சார் ஃபேஸ்புக் லைவ்ல வந்தபோது பார்த்தேன். விஜயகாந்த் சார் வந்தபோது பார்க்கலையே! அவர் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் `தமிழன் என்று சொல்' படத்துக்கு வந்திருப்பாரா... இல்லையா? அப்ப என்ன படத்துக்காக வந்திருப்பார். இருங்க... யோசிக்கிறேன். பார்த்திபன், விஜயகாந்த் சாரைச் சந்தித்ததாகப் படித்தேன். அப்ப, `கோடிட்ட இடங்களை நிரப்புக' படமா?'' எனச் சந்தேகமாகக் கேட்கிறார்.

தீபா ராமானுஜம்:
``இன்னமும் எங்க வீட்டுல நெட்டே கனெக்ட் ஆகலைங்க. ஃபேஸ்புக் பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு. இப்படிச் சொல்றதுனால இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாதுனு நினைக்காதீங்க... தெரியும். விஜயகாந்த் சார் புரொமோஷனுக்காக வந்த படத்தோட பேரு Fill in the blanks - `கோடிட்ட இடங்களை நிரப்புக.' என் ஃப்ரெண்ட் பார்வதி நாயர்தான் இந்தப் படத்தோட ஹீரோயின். அதனால் தெரியும். சூப்பர்ல!''

வித்யா விஜயராகவன்:
அதிர்கிறார்... ``என்னது விஜயகாந்த் ஃபேஸ்புக் லைவ்ல வந்தாரா?! `சகாப்தம்' படத்துக்காகவா? அந்தப் படம்தான் ரிலீஸ் ஆகிடுச்சே. அவர் ஃபேஸ்புக்ல தலையைக் காட்டியிருந்தாலே வைரலாக்கி மீம்ஸ் பறக்கவிட்டிருப்பாங்களே... எப்படி நான் இதை மிஸ்பண்ணினேன்? இதோ போறேன் சொசைட்டிக்கு.''

தங்கபாலு:
``அவர் பையனுடைய படமாத்தான் இருக்கும். அப்புறம் தம்பி... நான் இந்த ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கம் எல்லாம் போறதே கிடையாது. எல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம்'' - கலகலவெனச் சிரிக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism