
“மேனேஜரும் ஏ.டி.எம் மெஷினும் ஒண்ணு.'' ``எப்படிச் சொல்றே?''
``ரெண்டுமே வேலை செய்யாது.''
- ஆர்.மணிவண்ணன்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘`அட... அதிகாலை 5 மணிக்கே உன் வீட்டு வாசல்ல கோலம் இருக்கே!”
“வெளிச்சத்துல கோலம் போட, என் கணவருக்குக் கூச்சம்... அதான்!”
- கே.அருணாசலம்

``எதிரி ஓலையின் ஆரம்ப வரியிலேயே உங்களைக் கலாய்த்திருக்கிறான் மன்னா.''
``எப்படிச் சொல்கிறீர்?''
`` `அன்புள்ள உசேன் போல்ட்டுக்கு...' எனக் குறிப்பிட்டிருக்கிறானே!''
- சிக்கு

“எங்க ஊர் கம்மாக்கரையில ஒரு பேய் இருந்தது சார்.”
“ `மண்வாசனை உள்ள பேய் படம்'னு விளம்பரம் பண்ணிடலாம்யா!”
- அஜித்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism