Published:Updated:

‘பொங்கலுக்கு மாமனைக் கவனி!’

‘பொங்கலுக்கு மாமனைக் கவனி!’
பிரீமியம் ஸ்டோரி
‘பொங்கலுக்கு மாமனைக் கவனி!’

பாஸ்கர் சக்திஓவியங்கள்: எஸ்.இளையராஜா, எஸ்.ஏவி.இளையராஜா, எஸ்.ஏவி.இளையபாரதி

‘பொங்கலுக்கு மாமனைக் கவனி!’

பாஸ்கர் சக்திஓவியங்கள்: எஸ்.இளையராஜா, எஸ்.ஏவி.இளையராஜா, எஸ்.ஏவி.இளையபாரதி

Published:Updated:
‘பொங்கலுக்கு மாமனைக் கவனி!’
பிரீமியம் ஸ்டோரி
‘பொங்கலுக்கு மாமனைக் கவனி!’
‘பொங்கலுக்கு மாமனைக் கவனி!’

`கிராமங்கள் மாறிவிட்டன' எனப் பொதுவாகச் சொல்லப்படுகிறது. அவை புதிதாக ஒன்றும் மாறிவிடவில்லை. காலம்தோறும் மாறிக்கொண்டு​தான் இருக்கின்றன. நிறைய விஷயங்கள் காணாமல்போய்விட்டன. திண்ணைவைத்த வீடுகள், அரிக்கேன் விளக்கு, பெட்ரோமாக்ஸ் லைட், வீட்டின் முன் பெரிய கோலங்கள், ரெட்டை மாட்டுவண்டிகள், பெண்களின் தாவணி, ஆண்களின் வேட்டி, கோவணம்... ஆம் கோவணம்!

தோட்டம் துரவுகளில் கோவணம் கட்டிய ஆண்கள் சகஜமாக நடமாடுவார்கள். கருகரு மேனியோடு துரட்டியுடன் என் பெரியப்பா தனது தோப்பில் சூரிய ஒளி உடலில் மின்ன, கோவணத்துடன் வேலைசெய்வதைப் பார்த்திருக்கிறேன். அது எவ்வளவு எளிய உடை. ஒரே ஒரு பிட்டு துணி, அதை அணிவதற்கு அரைஞாண்கயிறு, கோவணம் தயார். மேலே நான்கு முழம் வேட்டியைக் கட்டி, சுமாராக வெளுத்த ஒரு சட்டையைப் போட்டுக்கொண்டு அப்படியே ஜென்டில்மேனாக விசேஷத்துக்குப் போய் வருவார்கள். இப்போதைய ஜட்டிகளைத் தயாரிப்பதற்கு ஆறுகளைக் காலிசெய்கிறோம். கோவணம், நம் காலநிலைக்கும் சூழலுக்கும் ஏற்றதோர் உள்ளாடை. அதை ஆபாசம் என, இன்றைக்கு தனது பிராண்டட் ஜட்டி தெரிய லோ ஹிப் பேன்ட் அணியும் தலைமுறை சொல்லக்கூடும். ஆனால், இன்றைய நவநாகரிகத்தின் கூறுகளை நான் அப்போதே பார்த்திருக்கிறேன்.

‘பொங்கலுக்கு மாமனைக் கவனி!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்று கிராமத்தில் பல வீடுகளில் வீட்டைக் கட்டும்போதே அதில் காங்கிரஸ் அல்லது தி.மு.க கொடியை முகப்பில் பொறித்து வீடு கட்டி இருப்பார்கள். தாங்கள் சாகும் வரை அல்லது அந்த வீடு உள்ள வரை அதே கட்சியில்தான் இருப்போம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அதேபோல் தாங்கள் வளர்க்கும் மாட்டின் கொம்புகளிலும் கட்சி வர்ணத்தைத் தீட்டுவார்கள். இப்படி வீடு, மாடு, நாடி நரம்பு எல்லாம் `கட்சி... கட்சி...' என்று இருந்த பழைய கிராமத்தான்கள், இப்போது பொலிரோ, ஃபார்ச்சுனர் வண்டிகளை வாங்கி, வெள்ளை நிறச் சட்டைப்பையில் கட்சித் தலைவர் போட்டோவை டிரான்ஸ்பரன்ட்டாக வைத்து நவீனமாகிவிட்டார்கள். கட்சி மாறும்போது கார்க் கொடியையும் கரைவேட்டியையும் தலைவர் போட்டோவையும் மாற்றினால் போதும்தானே!

இன்றைய கிராமத்து இளம்பெண், ரிப்பனை மறந்துவிட்டாள். ரப்பர்பேண்ட் போட்டு லூஸ் ஹேர் விட்டுக்கொண்டு `வாங்க மாமா... இப்பத்தான் வந்தீங்களா?' எனக் கேட்கையில், அந்தக் குரலின் மாடுலேஷன் ஏதோ ஒரு டி.வி-யில் யாரோ பேசியதைப்போல் பிரமை ஏற்படுகிறது. அவர்கள் என்னதான் சுடிதார்களைத் தைத்துப் போட்டு வந்தாலும் அது கிராமத்து சுடிதார் எனத் தெரிந்துவிடுகிறது. நகரத்தின் சங்கதிகளை நகல் எடுக்க, கிராமம் யத்தனிக்கிறது. ஆனால், முழுமையாக அது சாத்தியமாகாமல் அரைகுறையாக மாறியிருக்கிறது.

‘பொங்கலுக்கு மாமனைக் கவனி!’
‘பொங்கலுக்கு மாமனைக் கவனி!’

அப்படித்தான் வளையலும், ரிப்பனும், தேங்காய் எண்ணெயும் வழக்கொழிந்துபோய், சிறிய நகரங்கள் சுமாரான கிராமங்களில்கூட இன்று பியூட்டி பார்லர் வைத்திருக்கிறார்கள். அப்படியான ஒரு பார்லரின் முகப்பில் ஒரு போர்டைப் பார்த்தேன். `இங்கே ஃபேஸ் பிளீச்சிங், ஹேர் டை, ஷாம்பு வாஷ் செய்யப்படும்' என லிஸ்ட் போட்டிருந்தார்கள். `அந்நியன்' படத்தில் வரும் கும்பிபாகம், கிருமிபோஜனம் எல்லாம் நினைவுக்கு வந்தன.

என் தூரத்து அண்ணன் ஒருத்தர் சீஸனல் பிசினஸ் செய்வார். தள்ளு​வண்டியில் வடை, சுண்டல் போடுவார். திடீரென ஒருநாள் பழ வியாபாரியாகி, பலாப்பழத்தை அறுத்து சுளைகளை விற்பார். கொய்யாப்பழத்தையோ, அன்னாசிப்பழத்தையோ துண்டுகளாக்கி, உப்பு மிளகாய்ப்பொடி தூவி என்னிடம் கொடுத்துச் `சாப்பிடுப்பா' என்றார். `அண்ணே, எதுக்கு எல்லா பழத்துலயும் உப்பு மிளகாய்ப்பொடி தூவிக் குடுக்கிறீங்க... பழத்தோட டேஸ்ட்டே போயிடும்' என்றபோது `நம் ஊர்க்காரங்களுக்கு இப்ப எல்லாம் இதான்ப்பா பிடிக்குது. எல்லா பயலுகளுக்கும் நாக்குச் செத்துப்போச்சு' என்றார். எனக்கு எந்தப் பண்டம் வாங்கினாலும் அதில் டொமாட்டோ சாஸ், சில்லி சாஸ் தடவி மொண்ணையான டேஸ்ட்டில் தரும் சென்னைக் கடைகள் நினைவுக்கு வந்தன. அந்த அண்ணன் இப்போது லேட்டஸ்ட்டாக உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃப்ரையும், சிக்கன் 65-யும் தனது வண்டியில் விற்றுக்கொண்டிருந்தார்.

‘பொங்கலுக்கு மாமனைக் கவனி!’

நான் போனதும் எனக்கு தட்டில் வைத்து நீட்ட, நான் பதறிப்போய் `என்ன அண்ணே இது?' என, `சரக்கு அடிக்கிறவங்க காரசாரமா கேக்கறாங்க தம்பி. இப்ப எல்லாம் இதான் போகுது' என்றார். `ஃபிங்கர் ஃப்ரை எல்லாம் எப்படி செஞ்சு பழகுனீங்க?' என்றதற்கு `இதென்ன பெரிய வித்தையா? எதுவா இருந்தாலும் உப்பு, காரத்தைத் தூவி காரசாரமா கொடுக்கவேண்டியதுதானே?' என்றார். மாலைப் பொழுதுகளில் மொச்சைப்பயறு, சுண்டல், வேர்க்கடலை போன்ற ஆரோக்கியமான பண்டங்களை இயல்பாகவே சாப்பிட்டுக்கொண்டிருந்த ஊர், இப்போது எல்லாவற்றிலும் உப்பு, மிளகாய்ப்பொடி தூவித் தின்றுகொண்டிருக்கிறது.

பொங்கல் பண்டிகையை இப்போது கிராமங்களில் பார்த்தால், மனம் நொந்துவிடும். அந்தப் பண்டிகையின் உயிர்ப்பு மங்கிவிட்டது. சமீப ஆண்டுகளில் தீபாவளி, பொங்கலில் ஊருக்குப் போகையில் பெரியதொரு பிரச்னையைச் சந்திக்கவேண்டி வருகிறது. `ஊருக்கு வந்திருக்கோம், மனுஷ மக்களைப் பார்த்துப் பேசலாம்' என நமது ஃபேவரிட் இடமான டீக்கடையில் போய் அமர்ந்தால், குடிக்கு அடிமையானவர்கள் ஒவ்வொருவராக வருவார்கள்.

`மாப்ளே எப்ப வந்தாப்ல?'

`முந்தாநேத்து மாமா.'

`அப்புறம்... பாக்கவே முடியலை!'

`நீங்க இப்பதான் பாக்கிறீங்களே.'

`மெட்ராஸ்ல மழை எப்படி?' போன்ற சம்பிரதாய உரையாடலுக்குப் பிறகு `சரி... சரி... பொங்கலுக்கு மாமனைக் கவனி.'

` டீ சாப்பிடுங்க மாமா, வடை சொல்லட்டுமா?'

‘பொங்கலுக்கு மாமனைக் கவனி!’

`அது கழுத யாருக்கு வேணும்? நூறு இருநூறு இருந்தா தள்ளிவிடு. உம் பேரைச் சொல்லி மாமன் பொங்கலைக் கொண்டாடிக்கிறேன்' என்று வம்புபண்ணிக் காசை வாங்கிக்கொண்டு போகும் நபர், ஓரிரு மணி நேரம் கழித்து ஏதாவது ஒரு பாலத்தில் மட்டையாகிக்கிடப்பார். இப்படி 10, 15 பேர் வந்து பொங்கல் கொண்டாடிவிட்டுப் போவதில் நொந்துபோய், கடைவீதிப் பக்கம் போகவே பீதியாகிறது.

இருந்தும் நண்பர்கள் கூப்பிடுவதால் பதுங்கிப் பதுங்கி வெளியே வந்தால், எட்டுத்திக்கும் பேனர்கள். ஊரில் மீசை அரும்பத் தொடங்கிய பையன்களில் தொடங்கி பெருசுகள் வரை எல்லோரும் பேனரில் இருக்கிறார்கள். `டெரர் பாய்ஸ் வழங்கும் பொங்கல் விளையாட்டுப் போட்டி' எனும் பேனரில் பால்வடியும் முகத்துடன் அந்த டெரர் பாய்ஸ். ஒரு டெரர் பாயிடம் `எப்படிப்பா இதுக்கு எல்லாம் காசு கிடைக்குது?' எனக் கேட்டேன். `அம்மாகிட்ட அழுது வாங்குறதுதான் சார்' என்றான் அப்பாவியாக.

நான் சிறுவனாக விளையாடியபோது கிராமங்களின் அடையாளமாக இருந்தவற்றை ஒவ்வொன்றாக நினைவுகூர்கிறேன். கொல்லன்பட்டறை, ஊரை ஒட்டிய ஓடை, லாடம் கட்ட படுத்திருக்கும் மாடுகள், காலையும் மாலையும் மந்தை மந்தையாக காடு கரைகளை நோக்கிச் செல்லும் மாடுகள், பசுக்கள், ஆடுகள் அவற்றை ஓட்டிச் செல்லும் ஆண் பெண்களின் கையில் இருக்கும் துரட்டி, பித்தளைத் தூக்குச் சட்டி, அதில் இருக்கும் கேப்பைக் களி, பழைய கருவாட்டுக் குழம்பு அல்லது மொச்சைக் குழம்பு என, அது வேறுவிதமான அமைதியான வாழ்வு. அவை எல்லாமே பெரிதும் மாறிவிட்டன. சாதி உணர்வு மட்டும்தான் இன்றும் மாறாமல் இருக்கிறது...அதுமட்டும் அல்ல, கூர்மைப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism