Published:Updated:

அடங்காதவன்... அசராதவன்!

அடங்காதவன்... அசராதவன்!
பிரீமியம் ஸ்டோரி
அடங்காதவன்... அசராதவன்!

இரா.கலைச்செல்வன், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

அடங்காதவன்... அசராதவன்!

இரா.கலைச்செல்வன், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

Published:Updated:
அடங்காதவன்... அசராதவன்!
பிரீமியம் ஸ்டோரி
அடங்காதவன்... அசராதவன்!
அடங்காதவன்... அசராதவன்!

மீபகால ஜல்லிக்கட்டு வரலாற்றில் தெறிக்கவிட்ட, யாருக்கும் அடங்காத, யாராலும் அடக்க முடியாத சூப்பர் காளைகளின் அறிமுகம் இங்கே...

`` `கொம்பன்' இறங்கிட்டா எவனும் நிக்க முடியாது!''

``அன்னிக்கு என்னோட கல்யாண ரிசப்ஷன். வழக்கமா எல்லோரும் கல்யாணத்துல ஆர்க்கெஸ்ட்ரா வைப்பாங்க. ஆனா, நான் கொஞ்சம் வித்தியாசமா புரொஜக்டர், ஸ்க்ரீன் எல்லாம் ரெடி பண்ணி, ஜல்லிக்கட்டு வீடியோவை ஓடவிட்டேன். காலங்காலமா ஜல்லிக்கட்டுல கலந்துக்கிற குடும்பம் நாங்க. மேடையில நின்னுட்டிருந்தப்ப, என் பொஞ்சாதிகிட்ட `கல்யாணப் பரிசா என்ன வேணும்?'னு கேட்டேன். அப்போ, அந்த வீடியோவுல ஒரு சின்ன காளை, எல்லோரையும் தெறிக்கவிட்டுட்டிருந்தது. `அந்தக் காளைதான் வேணும்'னு சொன்னா. அது திருச்சி காளை. ராவோடு ராவா வண்டியை அனுப்பி 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, காலையிலேயே மண்டபத்துல கொண்டாந்து `கொம்பனை' இறக்கியாச்சு'' என்று அதிரடி இன்ட்ரோ கொடுக்கிறார் வாடிப்பட்டியைச் சேர்ந்த வினோத்.

கொம்பனுக்கு இப்போது ஆறு வயசு. மதுரை சுற்றுவட்டாரத்தில் கொம்பனை இதுவரை யாரும் அடக்கியது இல்லை. இயல்பிலேயே கொஞ்சம் மூர்க்கமாக இருக்கும் கொம்பன், `உமலஞ்சேரி' என்ற நாட்டுவகையைச் சேர்ந்தது.

அடங்காதவன்... அசராதவன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`பொதுவா, இந்த ஏறுதழுவுதல்ல மூணு வகை இருக்கு. ஒன்பது பேர் கொண்ட டீமா விளையாடுற வடமாடு, சும்மானாச்சும் ஓடவிடுற மஞ்சுவிரட்டு, வாடிவாசல திறந்துவிடுற ஜல்லிக்கட்டு. காளைங்க பொதுவா ஏதாவது ஒண்ணுலதான் நல்லா விளையாடும். ஆனா, கொம்பன் மூணுலயுமே பின்னுவாப்ல. ஆல்ரவுண்டர்! காளைதான்... ஆனா, களத்துல சிங்கம்'' என்று சொல்லியபடியே கற்பூரம் ஏற்றி, கொம்பனைச் சுற்றி வந்தார் வினோத்.

அவனியாபுரம் `ராமு'


``ரேஷன் கார்டுல மட்டும், காளை பெயரைச் சேர்க்கலாம்னு சொல்லிட்டா, எங்க ராமு பெயரைச் சேர்த்திடுவோம். அம்புட்டுப் பாசம்'' என்று கண்ணன் சொல்லும்போதே `புஸ்... புஸ்...' என மூச்சை இழுத்து, கால்களால் செம்மண்னை ஆக்ரோஷமாகக் கிளறுகிறது அவனியாபுரம் காளை ராமு.

``சார்... அஞ்சடி மனுஷனுங்க, நாலு பேரு வரிசையா நிக்குறாங்கன்னு வைங்க, வாடிவாசல் திறந்ததும் ஓடிவந்து ஒரு குதி குதிச்சதுன்னா நாலு பேரையும் அப்படியே தாண்டிப்போயிடும். சுற்றுவட்டாரத்துல நம்ம ராமுவால மட்டும்தான் இப்படிக் குதிக்க முடியும்.

அடங்காதவன்... அசராதவன்!

இந்தா பாருங்க, இவருக்கு அலங்கரிக்க துபாய்ல இருந்து கயித்த வரவெச்சிருக்கேன். கலர் மாலை, சலங்கை எல்லாம் வெச்சு அப்படி அலங்கரிப்போம். பிஸ்கட் மட்டும் இல்லை சார், கேக்குன்னாலும் ராமுவுக்கு ரொம்ப இஷ்டம். எங்க வீட்ல யாரோட பிறந்த நாளா இருந்தாலும், ராமுவோடுதான் கொண்டாடுவோம். சுத்துப்பட்டுல எங்கே ஜல்லிக்கட்டு நடந்தாலும், ராமுவுக்கு வெத்தலபாக்கு அழைப்புதான். இது எல்லா காளைகளுக்கும் கிடைக்காது. தேடி வந்து மரியாதை செஞ்சுட்டுப் போவாங்க. அந்த அளவுக்குப் பேர்பெற்ற காளை எங்க ராமு. ஜல்லிக்கட்டு நடந்தா, இப்பவும் ஜெயிக்கிறதுக்குத் தயாரா இருக்கார்'' என்று பெருமையாகச் சொல்கிறார் கண்ணன்.

சீனியர் சண்டியர்

வாடிப்பட்டியின் சீனியர் முரட்டுக்காளை `சண்டியர்'. அலங்காநல்லூர், பாலமேடு, சக்குடி, கொசவப்பட்டி, பல்லவராயம்பட்டி எனப் பல இடங்களிலும் வெற்றிவாகை சூடிய ஜல்லிக்கட்டு  ஹீரோ. சண்டியரிடம் சண்டைபோட்டு ஜெயித்தவர்கள் இதுவரை யாரும் இல்லை.

``சரியான சேட்டைங்க இவர். வாடிவாசல்லயே ஆரம்பிச்சுடுவார். முத அடி வலது பக்கம். அந்தக் கணக்குல எல்லோரும் அந்தப் பக்கம் நகர்ற சமயத்துல, அடுத்த அடி இடது பக்கம் வெச்சு ஏமாத்திட்டு ஓடிருவார். வாடிவாசல்லயே சும்மா நிக்க மாட்டார்... துறுதுறுன்னு இருப்பார். நான் பேரு வெக்கிறதுக்கு முன்னாடி, ஊர்க்காரங்களே இவரோட சேட்டைகளைப் பார்த்துட்டு `சண்டியர்'னு பேர் வெச்சுட்டாங்க'' என்றபடி சண்டியருக்கு புண்ணாக்கு கலந்து வைத்துவிட்டு வருகிறார் குணசேகரன்.

அடங்காதவன்... அசராதவன்!

`` இதெல்லாம் எங்களுக்கு சாமி மாதிரி. நான் பார்த்து இது எங்க குடும்பத்தோட நான்காவது காளை. அதுகிட்ட நாம போய் நிக்கும்போது, நல்லபடியா இருந்து சிறுநீர் கழிச்சுதுன்னா போற காரியம் நல்லபடியா முடியும். கண்ணுல நீர் வடிச்சுட்டு நின்னா, ஏதோ தப்பு நடக்கப்போகுதுன்னு புரிஞ்சுக்குவோம். நமக்கு வர்ற பிரச்னைகளை அவங்க முதல்லயே வாங்கிட்டு நம்மள காப்பாத்துறாங்க'' என்கிறார் குணசேகரன்.

`கேடி' கருப்பன்

``கருப்பன், புலிக்குளம் வகையறாவைச் சேர்ந்தவன். 2002-ல முதன்முதலா இவனை ஜல்லிக்கட்டுல இறக்கினோம். இன்னிக்கு வரைக்கும் இவனை யாரும் அடக்கினது இல்லை'' என்று மேய்ச்சலில் இருக்கும் கருப்பனின் கயிற்றை இழுத்துப் பிடித்தபடியே பேசுகிறார் கருவம்மா. `அவனியாபுரம் கேடி' என இந்தக் காளையைச் செல்லமாக அழைக்கிறார்கள்.

அடங்காதவன்... அசராதவன்!

``உள்ளூர்ல நடக்கும் போட்டிக்குப் போனா, 8,000 ரூபாய் வரை செலவாகும். வெளியூர் போனா, 10,000 ரூபாயைத் தாண்டும். ஒவ்வொரு முறையும் பீரோ, கட்டில், ஃப்ரிட்ஜ், தங்கச் சங்கிலினு ஏதாவது ஜெயிச்சுட்டு வரும். வருமானம் எல்லாம் இதுல பெருசா இருக்காது. வரவைவிட செலவுதான் அதிகம். இதெல்லாம் ஒரு பெருமை, அடையாளம், எங்க பாரம்பர்யம்'' என்று சொன்னவர், ஒரு விசில் கொடுத்து அதட்ட, திமிறிக்கொண்டிருந்த கருப்பன், அமைதியாகி கருவம்மாவிடம் வந்து நின்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism