
``புறம்போக்கு இடத்தைக் கோடு போட்டுக் காமிச்சா, தலைவர் வளைச்சுப் போட்டுருவார்.''
``கோடிட்ட இடத்தை நிரப்புறதுல,
அவர் கில்லாடியாச்சே!''
- அம்பை தேவா


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``டைட்டில் புதுசா இருக்கணும்.
யாரும் அதை மாற்ற முடியாததா இருக்கணும்.''
``2,000 ரூபாய் நோட்டு.''
- அம்பை தேவா

``அமைச்சரே, எதிரி வந்துவிட்டானா?
படபடவென துப்பாக்கி வெடிக்கும்
சத்தம் கேட்கிறதே!''
``மன்னா... பதுங்குகுழிக்கு மேலே பறக்கும் கொசுக்களை, இளவரசர் கொசு மட்டையால் அடிக்கும் சத்தம் அது!''
- என்.உஷாதேவி

``சுயசரிதையின் ரெண்டாம் பாகத்துக்கு, தலைவர் என்ன பேரு வெச்சிருக்காரு?''
``ரெய்டுக்குப் பின்!''
- பி.ஜி.பி.இசக்கி