Published:Updated:

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!
பிரீமியம் ஸ்டோரி
பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

சரண், அதிஷா, ப.சூரியராஜ்

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

சரண், அதிஷா, ப.சூரியராஜ்

Published:Updated:
பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!
பிரீமியம் ஸ்டோரி
பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

`ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2016'. சில ஹைலைட்ஸ்...

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

 தமிழ்த் திரை உலகமே திரண்டு வந்திருந்தது. ஒரே படத்தில் கவனம் குவித்த இளம் படைப்பாளிகள், தங்கள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் மேடை ஏறி திரை ஆளுமைகளின் கைகளால் விருதுகளைப் பெற்று நெகிழ்ந்து மகிழ்ந்த பொன்னான தருணங்கள் ஏராளம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

கலகலப்புக்கு ஆர்.ஜே பாலாஜி, கவித்துவத்துக்கு மதன் கார்க்கி எனக் கலக்கல் காம்போதான் விழாவைத் தொகுத்து வழங்கிய உற்சாக ஜோடி. மதன் கார்க்கியின் செந்தமிழ், மடை திறந்த அணையாக அரங்கம் எங்கும் பாய, ஆர்.ஜே பாலாஜி தன் அக்மார்க் அலம்பல்களாலும் குறும்புச் சீண்டல்களாலும் கலகலப்பூட்டினார்.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!
பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

எஸ்.எஸ்.வாசன் அவர்கள் முதன்முதலாக வாங்கிய அச்சு இயந்திரம், அரங்குக்கு வெளியே பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. பிரபலங்கள் பலரும் அதைத் தொட்டுப்பார்த்துச் சிலிர்த்தனர். அச்சு இயந்திரத்துடன் செல்ஃபிகளும் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். தொகுப்பாளர்களின் மேடையும் அதே அச்சு இயந்திர மாடல்தான்!

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

ஜெமினியின் தயாரிப்பும் தமிழ் சினிமாவின் பெருமையுமான `சந்திரலேகா'வை நினைவுபடுத்தும்விதமாக முரசு நடனத்துடன் விழா தொடங்கியது. அது டிரெடிஷனல் நடனமாக இல்லாமல், முழுக்க முழுக்க ஹிப்ஹாப் பாணியில் சுழன்று சுழன்று பறந்து பறந்து அடித்துப் பட்டையைக் கிளப்பியது. மேடையிலேயே ரியல் சைஸ் டிரம்ஸ் கண்கவர் அணிவகுப்பு.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

`சிறந்த ஆடை வடிவமைப்பு'க்கான விருதை வழங்க மேடைக்கு வந்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனிடம் `விகடன் என்பது டேஷ். `கோடிட்ட இடங்களை நிரப்புக' ' என அவர் ஸ்டைலிலேயே மதன் கார்க்கி கேள்வி கேட்க, `நான் எப்போ கீழே விழுந்தாலும் என் தோளைத் தட்டித் தூக்கிவிடும் சக்தி. ஸ்கூல் மார்க்கைவிட எனக்கு எப்போதுமே விகடன் மார்க்தான் பெருசு' என்றார் பார்த்திபன். 

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

`ஒரு படத்தை வாங்கி வெளியிடுவதிலும் வெற்றி பெறவைப்பதிலும் வெளியீட்டாளர்களின் பங்கு இதுவரை கவனிக்கப்படாதது. அடுத்த ஆண்டில் இருந்து `சிறந்த வெளியீட்டாளர்' பிரிவும் சேர்க்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கை வைத்தார் பார்த்திபன்.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

சிறந்த பாடகர்களுக்கான விருதை வழங்க மேடை ஏறினார் பிரபு. `இங்கே புகைப்படக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் என் அப்பாவின் சிறுவயதுப் படத்தை நான் முதல்முறையாகப் பார்க்கிறேன். விகடனுடைய ஸ்பெஷலே அதுதான். சினிமாவை இத்தனை நெருக்கமாக யாருமே பின்தொடர்ந்து ஆதரவு அளித்தது இல்லை' என நெகிழ்ந்தார் இளைய திலகம்.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!
பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

நான்கு வரிகள்தான் பாடினார் பிரதீப். ஆனால், தன் மாயக்குரலால் ஒட்டுமொத்தப் பார்வையாளர்களையும் மந்திரம் போட்டதுபோல கட்டுப்படுத்தினார். அவருடைய குரலில் ஒலித்த `மாயநதி இன்று மார்பில் வழியுதே...' பாடலை  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்கூட முதல்முறை கேட்பதைப்போல அத்தனை உற்சாகமாக ரசித்துக் கேட்டார்.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

`13 ஆண்டுகளுக்கு முன்பு சந்தோஷ் நாராயணனும் நானும் திருச்சியில் ஒரு மிகச்சிறிய அறையில் தொடங்கியது எங்கள் பயணம். விகடன் மேடை எங்கள் இருவருக்குமே ஒரு கனவு. இருவரும் இங்கே ஒரே மேடையில் விருது வாங்குவது மிகப்பெரிய பெருமை' என எமோஷனலானார் பிரதீப்.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

இயக்குநர் விக்ரமன் கைகளால் `சிறந்த புதுமுக இயக்குநருக்கான' விருதைப் பெற்றுக்கொண்டார் `கிடாரி' படத்தின் இயக்குநர் பிரசாத் முருகேசன். `விகடன் படிச்சு வளர்ந்த கிராமத்து நடுத்தரவர்க்கத்து இளைஞன் நான். என் வாழ்வின் மறக்க முடியாத நாள் இது' என விருதை இரண்டு கைகளாலும் இறுக்கிப்பிடித்தார் பிரசாத்.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருதை சசிகுமாரிடம் இருந்து திலீப் சுப்பராயன் பெற்றுக்கொண்டார். `இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஸ்டன்ட் காட்சியை மாஸ்டர் இப்போது உங்கள் முன் செய்துகாட்டுவார்' என ஆர்.ஜே பாலாஜி பில்டப் கொடுத்துக் கோத்துவிடப் பார்க்க, `நீ வந்தா ஸ்டன்ட் பண்ணிடலாம்... வர்லாம் வா!' எனக் குஸ்திக்குத் தயாராக, டெரர் ஆகி `இந்த டீலிங் பிடிக்கலைஜி!' என அடுத்த அறிவிப்புக்குத் தாவினார் பாலாஜி.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!
பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

இடுப்பில் ஒரு குழந்தை, விரல் பிடித்து இன்னொரு குழந்தை என மேடை ஏறினார் சிறந்த கதைக்காக விருது பெற்ற சுசீந்திரன். விருதுடன் மகன் விளையாடியது செம குறும்பு.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

`சிறந்த படத்தொகுப்பாளர்' விருதைப் பெற, மறைந்த எடிட்டர் கிஷோரின் தந்தை வந்திருந்தார். விருதை வழங்கிப் பேசிய வெற்றி மாறன், உணர்ச்சிவயப்பட்டிருந்தார். `என் சினிமா பயணமும் கிஷோரின் பயணமும் ஒன்றாகவே ஆரம்பித்தது. நான் உதவி இயக்குநராக இருந்தபோது, கிஷோர் உதவி படத்தொகுப்பாளன். நிறையத் தயாரிப்பாளர்களிடம் கதை சொல்ல என்னை அனுப்பிவைத்தவன். நான் மூன்றாவது படம் பண்ணுவதற்குள், அவன் 30 படங்களை முடித்திருந்தான். அவ்வளவு கடுமையான உழைப்பாளி. அவன் இல்லாமல் என் படங்கள் படங்களாகவே இருக்காது' என நெகிழ்ந்துபோய்ச் சொல்ல, கிஷோரின் தந்தையின் கண்களில் நீர் துளிர்த்தது. கிஷோர் விட்டுச் சென்ற `விசாரணை'யின் எடிட்டிங் பணியைச் சிறப்பாகச் செய்து முடித்த கிஷோரின் உதவியாளர் ஜி.பி.வெங்கடேஷும் கண்ணீர்த் துளிகளோடு விருதைப் பெற்றுக்கொண்டார்.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

ஒரு வாசகியாக, பின்னாளில் மாணவ நிருபராக விகடனில் வளர்ந்தவர் பாடலாசிரியர் தாமரை. `ஒரு விபத்து நடக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் பாடல். அதை எப்படித் திட்டமிட்டீர்கள்?' எனத் தொகுப்பாளர்கள் கேட்க, ` `கலாபம் போல் ஆடும் கனவில் வாழ்கிறேனே' என்ற வரிகளே இறப்புக்கும் வாழ்வுக்கும் நடுவில் இருக்கும் அந்தத் தருணம். அதை அப்படி எழுதினேன்' என்றார் தாமரை. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த சகப் பாடலாசிரியரான மதன் கார்க்கி, `தாமரை விருது வாங்கியதில் எனக்கு ஒரு மெல்லிய வருத்தம். `முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில், பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில், வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திடவிடுவேனோ?' என, தாமரை எழுதிய `ராசாளி...' பாடலுக்கு இந்த விருது கிடைக்கவில்லையே என வருத்தம்' என்று மதன் கார்க்கி புகழ, தாமரை முகத்தில் அத்தனை மலர்ச்சி.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!
பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

`17 வருடங்களுக்கு முன்னாடி, பி.சி சார்கிட்ட அசிஸ்டென்டா சேர முயற்சி பண்ணேன். அப்போ இருந்த சில சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் அவரால் என்னைச் சேர்த்துக்க முடியலை. ஆனால், ராம்ஜி சார்கிட்ட என்னைப் பற்றி சொல்லி, அவர் குழுவுல என்னைச் சேர்த்துக்கச் சொன்னார். அவர் அன்று சொன்ன அந்த வார்த்தை, இப்போ என் வாழ்க்கை' என நெகிழ்ந்தார் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதைப் பெற்ற எஸ்.ஆர்.கதிர். அவருக்கு விருது வழங்கினார் பி.சி.ஸ்ரீராம். 

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

சிறந்த கதைக்கான விருதை வழங்க, மேடை ஏறினார் இயக்குநர் மகேந்திரன். `90 ஆண்டுகள் ஆகியும் விகடன் இன்னும் அதே நேர்மையுடனும் உற்சாகத்துடனும் இருக்கு. கவர்மென்ட் செய்ய முடியாததைக்கூட விகடன் செய்யும்' என்றார் இயக்குநர் மகேந்திரன் பெருமிதமாக!

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

`ஜோக்கர்' படத்துக்காக `சிறந்த வசனகர்த்தா' விருதை லிங்குசாமியிடம் இருந்து பெற்றுக்கொண்டார் இயக்குநர் ராஜு முருகன். அப்போது ஆர்.ஜே பாலாஜி, ` `ஜோக்கர்' படத்தில் வசனம் எல்லாம் தெறிக்குது. ஏன் அவ்ளோ கோபம்?' எனக் கேட்க, `அது கோபம் இல்லை... அக்கறை' என மேடையிலும் தன் பளிச் பதிலால் பார்வையாளர்களின் ஒட்டுமொத்தக் கைத்தட்டல்களை அள்ளினார் ராஜு முருகன். இவருடன் வசனத்துக்காக விருதைப் பெற்ற முருகேஷ்பாபு, `இது ராஜு முருகனோட அன்பு!' என விருதை வானத்தை நோக்கிக் காட்டிக் காட்டி நெகிழ்ந்தார்.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

விருதை வழங்க இயக்குநர் நலன் மேடைக்கு வந்தபோது, பலருக்கும் ஆச்சர்யம். ஆள் மெலிந்து, வேற ஆளாக மாறி இருந்தார். காலர் இல்லாத கறுப்பு டி-ஷர்ட்டும் பளபள பச்சைவண்ண வேஷ்டியுமாக வித்தியாச காஸ்ட்யூமில் வந்தவரை ஆர்.ஜே பாலாஜி கலாய்க்க, `பாலாஜி, இந்த டிரெஸ்ஸை எடுக்கும்போதே, `இவன் மட்டும் காம்பியர் பண்ண வந்துடக் கூடாது'னு வேண்டிக்கிட்டே இருந்தேன். இங்கே வந்து பார்த்தா, நீங்களே நிக்கிறீங்க' எனச் சிரிப்பு வெடி கொளுத்தினார்.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!
பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

விருது மேடையிலேயே வித்தியாசமான இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. அமரர் பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதிய `திரைத்தொண்டர்' தொடர், முழுமையாகத் தொகுக்கப்பட்டு விழா மேடையிலேயே வெளியிடப்பட்டது. இதை, பஞ்சுவின் மிக நெருங்கிய நண்பர்களான சிவகுமார் வெளியிட, ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். அதே மேடையில் நடிகர் ராகவா லாரன்ஸின் `அறம் செய விரும்பு' புத்தகத்தை இயக்குநர் பாலா வெளியிட்டார். ''அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா சார் 'இளைஞர்கள் மூலம் நீங்கள் செய்ய விரும்பு உதவியை விகடனிடம் கொடுத்து செய்தால் சிறப்பாக இருக்கும்' என்று சொன்னார். அவர் சொன்னபடி செய்தேன். விகடன் 100 இளைஞர்கள் மூலம் `அறம் செய விரும்பு' திட்டத்தை தமிழ்நாடு முழுக்கப் பரவலாக்கியது. இதன்மூலம் பல ஆயிரம் பேர் உதவிகள் பெற்றனர்'' என்றார் லாரன்ஸ்.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

ஹீரோக்களின் நடன அசைவுகளைக் கெத்தாக மேடையில் அரங்கேற்றி அசத்தினார் நடிகை தமன்னா. `போக்கிரி' விஜய்யாக, `பில்லா' அஜித்தாக, `விஸ்வரூபம்' கமலாக, இறுதியில் `நெருப்புடா... நெருங்குடா!' என ரஜினியாகவும் நடனமாடி அசத்தினார். ஆடும்போது நடுவில் `போக்கிரி பொங்கல்...' பாடலுக்கு தமன்னா ஆட, அதைப் பார்த்துக்கொண்டிருந்த விஜய்யை அழைத்த ரஜினி, `உங்க பாட்டு!' என உற்சாகப்படுத்தியதும் விஜய் முகத்தில் அமைதிப்புன்னகை.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

எஸ்.எஸ்.வாசனின் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்று `வஞ்சிக்கோட்டை வாலிபன்'. அந்தப் படத்தில் இடம்பெற்ற `சபாஷ்...சரியான போட்டி!' பாடலை நவீனமாக்கி மேடையில் அரங்கேற்றி அசத்தியது வரலட்சுமி, இஷா தல்வார் ஜோடி. ஒரு பக்கம் வரலட்சுமி நளினம் காட்ட, இஷா மறுபக்கம் தன் ஒல்லிக்குச்சி உடலை வைத்துக்கொண்டு ஆடி அசத்தினார். இசை இறுதியில் உச்சம்பெற, இருவரும் போட்டது டான்ஸ் ஆஃப் தி நைட்.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

`கயல்' ஆனந்தியும் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒன்றாக இணைந்து ரம்மியமான ஒரு நடனத்தை நிகழ்த்திக்காட்டினர். குத்துப்பாடல்கள் அணிவகுக்க, கொஞ்சமும் சளைக்காமல் இருவரும் ஒருவருக்கு இணையாக இன்னொருவர் இறங்கி அடித்ததில் மேடையே கொஞ்சம் ஆடியது.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

`லாரன்ஸ் மாஸ்டர் ஆடப்போகிறார்' என்ற அறிவிப்பு வர, அரங்கமே அதிர்ந்தது. முதலில் என்ட்ரி கொடுத்து ஆடி அசத்தியவர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின். சில நிமிடங்களில் லாரன்ஸும் `சிவலிங்கா' கெட்டப்பில் ஸ்டேஜ் ஏறி அசத்தலான ஸ்டெப்ஸ்களால் மிரளவைத்தார். கழுத்தில் உள்காயம் ஏற்பட்டு சிகிச்சையில் இருந்ததால், நெக் காலர் அணிந்து ஆட முடியாமல் இருந்தவர், விகடன் மீதான அன்புக்காக மேடையில் தோன்றி மிகச் சிறப்பாக ஆடினார். அண்ணனும் தம்பியுமாகப் போட்ட ஆட்டம், அத்தனை பேரையுமே ஆடவைத்தது.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை குஷ்பு அறிவிக்கையில், அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது. `ஆண்டவன் கட்டளை' படத்தில் விசா இன்டர்வியூவுக்கு `வெற்றிவேல்... வீரவேல்... இன்னா கேள்வி வேணா கேள்' எனக் கெத்துக் காட்டிக் கிளம்பி, நம்மை வயிறு குலுங்கச் சிரிக்கவைத்த யோகிபாபுவுக்குத்தான் கைத்தட்டல்கள். விருது பெறும்போது தனது நண்பன் ரமேஷ்திலக்கையும் மேடைக்கு அழைத்தார் யோகிபாபு. ` `காக்கா முட்டை' பண்ணும்போதே இவன்தான் என்னை ரொம்ப என்கரேஜ் பண்ணுவான். `பெருசா வருவே'னு சொல்லிட்டே இருப்பான். இதோ இப்போ இங்கே நிக்கிறேன். நிச்சயம் அவன் என்கூட இருக்கணும்' என யோகிபாபு எமோஷனலாகப் பேச, அரங்கம் சைலன்ட் மோடில் அவரையே கவனித்துக்கொண்டிருந்தது.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

`ஆண்டவன் கட்டளை'யில் காமெடி வக்கீலாக அதகளம் செய்த வினோதினிக்கு, `சிறந்த நகைச்சுவை நடிகை'க்கான விருதும் குஷ்பு கைகளால் கிடைத்தது. `அக்கா, அண்ணி கேரக்டரா சும்மா வந்துட்டிருந்த சமயத்துல இப்படி ஒரு ரோல் கொடுத்து, அதில் கொஞ்சம் காமிக்கலாகவும் ஸ்பேஸ் கொடுத்த இயக்குநர் மணிகண்டனுக்கு நன்றி' என்றார் வினோதினி.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!
பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

குணச்சித்திர நடிகருக்கான விருதை `விசாரணை'க்காக சமுத்திரக்கனிக்கு வழங்கினார் இயக்குநர் பாலா. சமுத்திரக்கனிக்கு விருது வழங்கி நெற்றியில் முத்தமிட்டு தம்பியின் மீது தான் வைத்திருக்கும் அன்பைக் காட்டினார் அண்ணன் பாலா. விருதைப் பெற்றுக்கொண்ட சமுத்திரக்கனி, ` `விசாரணை' படத்தில் தினேஷோட நடிப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாதது. நான் அந்தப் படத்துல நடிச்சிருந்தா ஷூட்டிங் பாதியிலேயே `இந்தப் படமே வேண்டாம்'னு ஓடியிருப்பேன். ஆனால், அத்தனை அர்ப்பணிப்போடு கடுமையான வலிகளைத் தாங்கிக்கிட்டு தினேஷ் நடிச்சிருக்கான். நான் இந்த விருதை அவனுக்குச் சமர்ப்பிக்கிறேன்' என தினேஷை மேடைக்கு அழைத்து தன்னுடைய விருதை வழங்கினார் `என்றும் நட்புடன்' சமுத்திரக்கனி.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

சிறந்த படக்குழுவாக `இறுதிச்சுற்று' படக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டு, விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய படத்தின் இயக்குநர் சுதா, படம் உருவாகக் காரணமாக இருந்த அத்தனை கலைஞர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

விழாவில் பேசப்பட்ட முக்கியமான விஷயங்களில் ஒன்று ஜல்லிக்கட்டு. வரும்போதே சமுத்திரக்கனியும் வெற்றி மாறனும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தரும் வகையில் வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட் அணிந்து வந்தனர். மேடையிலும் ஜல்லிக்கட்டின் அவசியம் குறித்து அவர்கள் தங்களுடைய கருத்தை மிக அழுத்தமாகப் பதித்தனர். `ஆண்டுதோறும் தீபாவளி அன்று, காற்று அவ்வளவு மாசுபடுகிறது. ஆனால், இவர்கள் அதற்குத் தடை கோர முன்வரவில்லை. அதேபோல், பிள்ளையார் சதுர்த்தி அன்று கடலில் சிலைகளைக் கரைக்கிறார்கள். இவற்றுக்கு எல்லாம் கோபப்படாத ஒரு கூட்டம், இதற்கு மட்டும் அதுவும் காளை மாடுகளை மட்டும் டார்கெட் செய்கிறார்கள். இவர்களுக்கு மிருகங்களின் மேல் அக்கறை இருக்கிறது என்றால், காற்றை மாசுப்படுத்தும், ஒலியை மாசுப்படுத்தும் தீபாவளியையும், கடல்வாழ் உயிரினங்கள் வாழ முடியாத நிலைக்குத் தள்ளும் விநாயகர் சதுர்த்தியையும் முதலில் தடை செய்யுங்கள்' என்று முழங்கினார்.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

`இறுதிச்சுற்று' டீம், `கிடாரி' டீம், `விசாரணை' டீம், `கபாலி' டீம் என விருதுகளை அள்ளிய நான்கு முக்கியப் படங்களின் குழுவினரும் ஒன்றாகவே அமர்ந்து இருந்தனர். `கபாலி' டீமில் தாணு, ரஜினி தொடங்கி பா.இரஞ்சித், தினேஷ், ரித்விகா எனப் பலரும் இருந்தனர். `இறுதிச்சுற்று' டீமில் சுதா கொங்கராவுடன், மாதவன், ரித்திகா சிங், சந்தோஷ் நாராயணன் என அவர்களும் கெத்துக்காட்டினர். `விசாரணை' டீம், வெற்றி மாறன் தலைமையில் ஆரவாரம் இல்லாமல் அமர்ந்து இருந்தனர். மிரட்டல் படம் எடுத்த `கிடாரி' இயக்குநர் பிரசாத் முருகேசன், சசிகுமார், வேல ராமமூர்த்தி, எஸ்.ஆர்.கதிரோடு அடக்கமாக அமர்ந்திருந்தார்.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

`கிடாரி' படத்தில் கொம்பைய்யா பாண்டியனாகவே நடிப்பில் வெளுத்துவாங்கிய எழுத்தாளர் - நடிகர் வேல ராமமூர்த்தி, விகடனில் 40 ஆண்டுகளாக எழுதிய அனுபவத்தைச் சொல்லி அசத்தினார். `என்னை எழுதவெச்சு அழகு பார்த்த விகடன், இன்று இந்த விருதைக் கொடுத்து அழகு பார்க்கிறது' என மகிழ்ந்தார்.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!
பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

சிறந்த புதுமுக நடிகருக்கான விருது, `மாணவர்களுக்கு சாதிய உணர்வை ஏற்றிக் குளிர்காயும் விஷயத்தை, சிலர் செய்றாங்க. அதைப் பற்றி பேசணும்னுதான் `உறியடி' எடுத்தேன்!' என்று அக்கறையாகப் பேசினார் `உறியடி' விஜய் குமார். `வீட்ல சினிமாவே பார்க்கவிட மாட்டாங்க. ரஜினி படம்னா மட்டும்தான் காசு கொடுப்பாங்க. இன்னிக்கு தலைவர் முன்னாலேயே விருது வாங்குறேன்' என்று பெருமிதத்தில் நெகிழ்ந்தார்.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை `சூப்பர் ஸ்டார் கைகளால்தான் வாங்குவேன்' என அட்வான்ஸ் புக்கிங் செய்ததோடு, ஸ்பெஷலாக `அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் மீனா உதிர்த்த அதே டயலாக் `ரஜினி அங்கிள்...' என்ற வார்த்தையை நைநிகா உச்சரிக்க, வாஞ்சையோடு வாரி அணைத்து உச்சி முகர்ந்தார் சூப்பர் ஸ்டார்.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

`ஜோக்கர்' படத்துக்கு சிறந்த தயாரிப்புக்கான விருதை `டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்' எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பெற்றுக்கொண்டார்கள். `இறுதிச்சுற்று' படத்துக்கு சிறந்த படக்குழுவுக்கான விருது கிடைக்க, இயக்குநர் சுதா தலைமையில் மொத்த டீமும் மேடைக்கு வந்து செல்ஃபி எடுத்து ஜாலி பண்ணியது.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

`அதிகக் கவனம் ஈர்த்த படம்' ஆகத் தேர்வுசெய்யப்பட்ட `கபாலி'க்கான விருதை, கலைப்புலி எஸ்.தாணுவும் பா.இரஞ்சித்தும் இணைந்து பெற்றுக்கொண்டார்கள். கலைப்புலி எஸ்.தாணு ஒரு தமிழ்ப் புலியாக மாறி, விகடன் பொன்விழா ஆண்டில் கலைஞர் இயற்றிய கவிதையைச் சொல்லி அசத்தினார். அவர் பேசிய ஸ்டைலில் ஆர்.ஜே பாலாஜியும் கவுன்ட்டர் கொடுக்க ஜாலியாகச் சிரித்து பாலாஜியின் டைமிங் சென்ஸை மனதாரப் பாராட்டினார் தாணு.

பிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்!

`சிறந்த நடிகை'க்கான விருதை, இயக்குநர் எஸ்பி.முத்துராமன் ரித்திகா சிங்குக்குக் கொடுத்தபோது, ரிங்கில் நாக் அவுட் வெற்றி பெற்ற ஒரு பாக்ஸரின் உற்சாகத்தோடு வந்து வாங்கி மழலைத் தமிழில் பேசிக் கைத்தட்டல் வாங்கினார் ரித்திகா. `தமிழ் மக்களுக்கு, என் ரசிகர்களுக்கு நன்றி' என அந்த நள்ளிரவிலும் உற்சாகப் பொங்கலிட்டார் ரித்திகா!